Tamilnadu

“சட்டப்பேரவையில் தரம் தாழ்ந்து பேசாதீங்க”... : அமைச்சர் நிர்மல்குமாருக்கு கே.என்.நேரு பதிலடி!

சட்டப்பேரவையில் இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, பேரவையில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சருக்கு உடனே அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு எழுந்து பதிலடி கொடுத்தார்.

அப்போது பேசிய கே.என்.நேரு, ”ஒரே கட்சியில் 50 ஆண்டுகளாகப் பயணித்தவர் பழைய மாணவர்தான். உங்கள் அரசாங்கத்தைப் பற்றியும், உங்கள் அமைச்சர்களைப் பற்றியும் பேசுங்கள்.பத்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் எங்களுடைய பொதுச்செயலாளர் துரைமுருகன்.

இன்று காட்பாடியில் பல்கலைக்கழகம், மேம்பாலம், குடிநீர் வசதிகள் என அனைத்தையும் செய்தவர் முன்னாள் அமைச்சர் துரைமுருகன். அவரது தொகுதியில் அனைத்து வசதிகளையும் பார்த்துப் பார்த்துச் செய்து கொடுத்துள்ளார்.

அமைச்சர் நிர்மல்குமார் பேசினால் அவையையே கிளப்பிவிட்டு விடுகிறார். துறை ரீதியாகப் பேசுவதற்குச் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் இருக்கும்போது, நீங்கள் ஏன் குதர்க்கமாகப் பேசுகிறீர்கள்? ஏன் அப்படிப் பேசுகிறீர்கள்? உங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறீர்களா? அநாகரிகமாக நடந்ததாகப் பேசுவது சரியல்ல" எனத் தெரிவித்தார்.

Also Read: த.வெ.க அரசு எந்தத் திசையில் செல்கிறது? : சர்ச்சை சுற்றறிக்கை - தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!