Tamilnadu
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது... நீதிமன்ற உத்தரவை மீறி அராஜகத்தில் ஈடுபடும் தவெக அரசு!
காவிரி - மேகதாது விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக டெல்டா விவசாயிகள் வறட்சி ஏற்பட்டதனால் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் கூட, விஜய் அரசு இதுவரை வாயை திறக்கவில்லை. அதோடு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் பேசாமல் கள்ள மௌனம் காத்து வருகிறார் விஜய்.
இதனை கண்டித்து நேற்று (ஆக.03) தஞ்சையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் வாயை மூடி வேடிக்கை பார்க்கும் தவெக அரசுக்கும், விஜய்க்கும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தார். தொடர்ந்து விவசாயிகள் படும் வேதனை குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்புவதாகவும் உறுதியளித்தார்.
இந்த சூழலில் நாளை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பக்கூடாது என்ற நோக்கத்தில், சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
மேலும் அவரது பேச்சை அவதூறாக பரப்பி அவருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் தவெக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கைது செய்ய திட்டம் தீட்டி அதற்கான செயலில் ஈடுபட்டு வருகிறது. தவெக அரசின் இந்த அராஜகத்திற்கு எதிராக திமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர். எனினும் கைது நடவடிக்கையில் முழு ஈடுபாட்டுடன் இருந்தது தவெக அரசின் போலீசார்.
இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் கைது செய்ய முயற்சிப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கக்கோரி திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று (ஆக.04) பிற்பகல் விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் ‘எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது’ என சென்னை உயர்நீதிமன்றம் தவெக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி தவெக அரசின் போலீசார், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை அவசர அவசரமாக கைது செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பதற்கு தற்போது மாநிலம் முழுவதும் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது.
தொடர்ந்து உதயநிதி அழைத்து செல்லப்படும் வேனின் முன்பு, கழக உடன்பிறப்புகள் தவெக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி வருகின்றனர்.
Also Read
-
“தலைமை நீதிபதி அவமதிப்பு.. முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்” : வழக்கறிஞர் வில்சன் எம்.பி!
-
“கல்வி உதவித்தொகை வழங்க இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?” : த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி கேள்வி!
-
“உரிய முறையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” : அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கடிதம்!
-
“நிர்மல்குமாருக்கு அறிவு இருக்குமானால் இஸ்மாயில் ஆணையத்தின் அறிக்கையை எடுத்துப் பார்க்கலாம்” : முரசொலி!
-
TARGET செய்யும் தவெக அரசு? : “Mental Torture பண்ணாதீங்க..” - கண்ணீருடன் VIDEO வெளியிட்ட மாணவர் பாரதிதாசன்