Tamilnadu
மாற்றம் என்று தவெகவினர் கூறியது : மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு கீதாஜீவன் கண்டனம்!
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிவரும் த.வெ.க அரசு, கடந்த திராவிட மாடல் ஆட்சியில் கொண்டுவரப்பட்டுத் தற்போது வெற்றிகரமாகச் செயல்பட்டுவரும் திட்டங்களின் பெயர்களைத் திட்டமிட்டு மாற்றிவருகிறது.
பெண்களின் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்தி அவர்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரத்தைக் கொடுத்துவரும் 'மகளிர் விடியல் பயணம்' திட்டத்தின் பெயரைத் தற்போது 'மகளிர் பயணம்' என மாற்றியுள்ளது.
"நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்துவோம்" என்று சொல்லி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய், மக்களுக்கான எந்தவொரு ஆக்கப்பூர்வமான மாற்றத்தையும் இதுவரை ஏற்படுத்தாமல் கடந்த ஆட்சியின் திட்டங்களின் பெயர்களை மட்டும்தான் மாற்றிவருகிறார்.
மக்களின் வாழ்க்கையை மாற்றிய எந்தவொரு திட்டத்தின் பெயரை மாற்றினாலும், அந்தத் திட்டத்தின் பலன் மட்டும்தான் அவர்களின் வாழ்க்கையில் எப்போதும் நிலைத்திருக்கும் என்பது கூடத் தெரியாமல் இருக்கிறது இந்தத் த.வெ.க அரசு.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் ” திமுக அரசு கொண்டு வந்த 'மகளிர் விடியல் பயணம்' திட்டத்தை 'மகளிர் பயணம்' எனப் பெயர் மாற்றியிருக்கிறது தவெக அரசு.
அதிமுக-வின் 10 ஆண்டுகால ஆட்சியால் இருண்டு கிடந்த தமிழ்நாட்டுக்கு விடியலை கொடுத்தது நமது திமுக அரசு. தற்போதைய தவெக அரசு, மீண்டும் தமிழ்நாட்டை இருண்ட காலமாக மாற்றப் போவதால் 'விடியல்' என்ற சொல்லை அவர்களாகவே நீக்கியிருக்கிறார்கள் போல..!
மகளிர் விடியல் பயணத்தில் விடியலை தூக்கியவர்கள், வரும் நாட்களில் 'மகளிர் பயணம்' என்ற சொற்களையும் தூக்கிவிட்டு இத்திட்டத்தையே நிறுத்திவிடுவார்களோ என்ற அச்சம் பெண்களிடையே மேலோங்குகிறது!
மாற்றம் என்று தவெகவினர் கூறியது பெயர் மாற்றம் தான் போல! என விமர்சித்துள்ளார்.
Also Read
-
“எனதருமை மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துகள்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“கேப்டன் விஜயகாந்த் புகழ் ஓங்குக” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி!
-
“மீலாதுன் நபியைக் கொண்டாடிடும் இசுலாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
கர்நாடகாவில் 3 தமிழர்கள் படுகொலை: தொடர் சித்திரவதை.. முறிந்த விலா எழும்பு.. Post Mortem அறிக்கை சொல்வது?
-
இது சமூக அநீதி இல்லையா? மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுத்தால் நட்டம் வந்துவிடுமா?: தவெக அரசுக்கு தீபக் கேள்வி