Tamilnadu
அமைச்சர் சரத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் : தி.மு.க. மாணவரணி திட்டவட்டம்!
போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில், அமைச்சர் சரத்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் தி.மு.க. மாணவர் அணியினர் இன்று சென்னையில் போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
ஆனால், இந்தப் போராட்டத்திற்குக் காவல்துறை அனுமதி மறுத்ததோடு, போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களைத் த.வெ.க. அரசின் காவல்துறை வலுக்கட்டாயமாகக் கைது செய்து அடக்க முயன்றது. இதனால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களைத் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்த காவல்துறை, அங்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் மிகவும் அராஜக போக்குடன் நடந்துகொண்டது.
குறிப்பாக, பெண்களுக்குப் போதுமான கழிப்பறை வசதிகள் இல்லாததால் அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர், அவர்கள் இரவு 7 மணிக்கு மேல் விடுதலை செய்யப்பட்டனர்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் வீரமணி ஜெயக்குமார் கூறியதாவது:-
தவெக அரசு அமைத்ததிலிருந்து, 'பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவோம்' மற்றும் 'போதைப்பொருட்களை ஒழிப்போம்' என்று பொய் சொல்லிக்கொண்டிருக்கின்றது. அதே மாதிரி, 717 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளதாகத் தவெக அரசு கூறியுள்ளது; ஆனால், அது குறித்து எந்தவொரு முறையான தகவல்களும் இல்லை. 'அரை பாட்டில்' ஆதவர்ஜுனா அவர்களையும், 'கஞ்சா குடுக்கி' சரத் அவர்களையும் அமைச்சராக்கிவிட்டு, உரிய அடிப்படை வசதிகள் கூட இல்லாத இந்தக் கண்ணப்பர் திடலில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நுழையும் நிலையில், அவர்களை அடைத்து வைத்துப் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்துப் பேசி வருகிறார் விஜய்.
தவெக அரசில் 3 வயதுப் பெண் குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை யாருக்கும் இந்தத் தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. அமைச்சர் என்பவர் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமே தவிர, போதைப்பொருட்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லித் தருபவரைப் போல இருக்கக் கூடாது. 'கில்லி' சரத், 'பிளேட்' பக்கிரி போன்ற பெயர்களைக் கொண்டவர்கள் தான் இனி தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் திகழ்கின்றார்கள்.'6 மாதங்கள் அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம்' என்று எங்கள் கழகத் தலைவர் சொன்னார்.
ஆனால், கடந்த ஒரு மாதத்திலேயே தமிழ்நாட்டைச் சீர்குலைத்துவிட்டார்கள் தவெகவினர். இந்நிலையில், இதைப் பார்த்துக்கொண்டு எங்களால் எப்பொழுதும் அமைதியாக இருக்க முடியாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்களுடைய கழகத் தலைவர் முதலமைச்சராக ஆற்றிய பணிகள் மீது, தற்போது தவெகவினர் ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர்.கடந்த 50 நாட்களில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். எங்கள் கழகத்தின் கடைக்கோடித் தொண்டனுக்கு இருக்கக்கூடிய அடிப்படை அறிவு கூட தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினருக்கு இல்லை.
அமைச்சர் சரத்குமார் மீது உரிய விசாரணை நடத்தி, தக்க நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
மீண்டும் மதமாற்ற தடைசட்டமா?; பா.ஜ.க அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் த.வெ.க : தி.மு.க கண்டனம்!
-
‘பொறுப்பேற்று’ செயல்பட த.வெ.க அரசு மறுப்பதே, பிரச்சனைகள் அதிகரிக்கக் காரணம்! : கனிமொழி கண்டனம்!
-
“SofaModel அரசால் திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - உதயநிதி ஸ்டாலின்!
-
டேக் டைவர்ஷன் என ஓடும் ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே முற்றுப்புள்ளி வைப்பார்கள் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“தவெக அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி.. திமுக மாணவரணி போராட்டம்.. ஸ்தம்பித்த தமிழ்நாடு”