Tamilnadu

அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் : பேரவையில் தி.மு.க வலியுறுத்தல்!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை அடுத்துள்ள மஞ்சகாரணையில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவால் 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இன்றைய சட்டப்பேரவையில் அம்மோனியா வாயுக் கசிவு விவகாரம் குறித்து அமைச்சர் பர்வேஸ் விளக்கம் அளித்தார்.

இதை தொடர்ந்து பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, ”110 விதியின் கீழ் பேசியதை விவாதிக்கமுடியாது. இருந்தாலும் அரசின் கவனத்திற்கு கொண்டு வருவகிறோம். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குற்றச்சாட்டுவது எங்களது நோக்கம் இல்லை. எனவே விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 லட்சம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் பேசிய எ.வ.வேலு ”காவிரி தீர்மானத்தில் திருத்தம் செய்வது தொடபாக கருத்து தெரிவிக்க முழு உரிமை உண்டு. திருத்தத்தில் விளக்கம் கேட்க சட்டமன்ற உறுப்பினருக்கு உரிமை உள்ளது. திருத்தத்தில் முழு விவரம் சொல்லுங்கள் என யாரும் எங்களை கேட்கவில்லை.

இதற்காக பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளோம். இது தமிழக விவசாயிகள் பிரச்சனை காவிரி டெல்டா பிரச்சனை இதில் அரசியல் செய்யக்கூடாது இது முழுமையாக வெற்றி பெற வேண்டும்" என தெரிவித்தார்.

Also Read: அம்மோனியா வாயுக் கசிவு விவகாரம்: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளைப் பேச அனுமதிக்காத சபாநாயகர்!