Tamilnadu
திருவள்ளூர் அம்மோனியா வாயுக் கசிவு : 2 பேர் பலி... 50-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை - விவரம்!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை அடுத்துள்ள மஞ்சகரணையில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த சூழலில் இங்கு இன்று (ஜூன் 21) திடீரென அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் வாயு கசிந்த காற்றை சுவாசித்ததால் முச்சுத்திணறல் ஏற்பட்டது. மேலும் சிலருக்கு வாய், மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரத்தம் கசிந்தது. தொடர்ந்து இந்த தொழிற்சாலையில், இருந்தவர்களை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் சம்பவ இடத்திலேயே மூச்சுத்தினரு 2 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது வரை இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படும் நிலையில், சுகாதாரத்துறை அருண்ராஜ் 2 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக கூறினார்.
அதோடு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
‘புதிய தலைமைச் செயலகம்?.. 5 நாள் தான்.. போராட்டம் வெடிக்கும்’ : தவெக அரசுக்கு கெடு விதித்த மீனவர்கள்!
-
‘கரூர் கொடுந்துயரத்தின் ஒராண்டு நிறைவு.. மனிதத் தன்மையற்ற விஜய்’ : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
“ஊரான் வீட்டு நெய்யில் காராபூந்தி சுடுகிறார் விஜய்” : தாராபுரத்தில் கனிமொழி எம்.பி பேச்சு!
-
தமிழ்நாட்டில் கூடுதல் ரயில் சேவைகள் : தயாநிதி மாறன் எம்.பி. எழுதிய கடிதத்திற்கு ஒன்றிய அரசு பதில்!
-
“ஜனநாயகத்தை நிலைநாட்ட கழகம் களமிறங்கியுள்ளது” : தாராபுரம் ஆலோசனைக் கூட்டத்தில் கனிமொழி MP பேச்சு!