Tamilnadu
TN Assembly : “தற்குறி ஆட்சி தமிழ்நாடே சாட்சி.. கதறல் கேட்குதா CM?” - பதாகைகளுடன் வந்த திமுக MLA-க்கள்!
17-வது தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) கூடுகிறது. இன்று நடைபெறும் கூட்டத்தொடரில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உரையாற்றுகிறார். இந்த சூழலில் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை கண்டித்து எதிர்க்கட்சிகள் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.
இன்று சட்டப்பேரவை நடைபெறும் நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில், திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான 57 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் “வாய் திறங்க CM” என்ற வாசகம் இடம்பெற்ற கருப்பு பேட்ஜ் அணிந்து வருகை தந்துள்ளனர்.
மேலும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், “திரையில் நாயகன், தரையில் வில்லன்..!”, “கதறல் கேட்குதா CM?”, “Reels இங்கே... Real எங்கே?”, “தூய சக்தி அல்ல துயரசக்தி”, “தற்குறி ஆட்சி... தமிழ்நாடே சாட்சி”, “வாயில் வருமா பதில்?” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி திமுக எம்.எல்.ஏ.க்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குற்றங்கள், வன்முறைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் வண்ணமாக இருக்கும் நிலையில், விஜய் தலைமையிலான ஆளுங்கட்சி அதனை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட ஒரே நாளில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பாக 12 சம்பவங்கள் நிகழ்ந்தது. இதற்கும் ஆளுங்கட்சி தரப்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!