Tamilnadu
தி.மு.க வெள்ளை அறிக்கை vs த.வெ.க வெள்ளை அறிக்கை : தி.மு.க IT WING விளக்கம்!
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற அதே மேடையில், 'நாங்கள் வெள்ளை அறிக்கை வெளியிட்டு எங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்' எனச் சினிமாவில் பேசுவதுபோல் வீரவசனம் பேசினார்.
அவரது வீரவசனத்தின்படி நேற்று வெள்ளை அறிக்கையைத் த.வெ.க. நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார். அதில், 'தி.மு.க. அரசு முறைகேடு செய்துள்ளது' என்று இருக்கும் என்று பார்த்தால், 'மக்களுக்கான திட்டங்களுக்காகவே தி.மு.க. அரசு கடன் வாங்கியுள்ளது' என பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'நிதி இல்லை; அதனால் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது' என்ற தொனியிலேயே அந்த வெள்ளை அறிக்கை இருந்தது. இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு தி.மு.க. அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையோடு ஒப்பிட்டுத் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி தனது சமூக வலைத்தளத்தில் தெளிவாக விளக்கியுள்ளது."
அதில், ”2021 திமுக அரசின் வெள்ளை அறிக்கை:
This report is not an attempt to create a rationale for diluting or abandoning the commitments made to the people during the recently concluded elections.
அதாவது, "நிதி நெருக்கடி இருந்தாலும், மக்கள் கொடுத்த வாக்குறுதிகளில் இருந்தோ, எங்களுடைய கடமைகளில் இருந்தோ நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம், அதை தட்டிக்கழிக்க இந்த அறிக்கையைப் பயன்படுத்த மாட்டோம்" என்று துணிச்சலோடு அறிவித்தது திமுக அரசு!
2026 தொடைநடுங்கி தவெக அரசின் வெள்ளை அறிக்கை:
the fiscal space available for taking up new programmes during the year can only be very minimal.
அதாவது, இந்த 'மங்குனி' 24ஆம் புலிகேசி அரசோ, "ஐயோ, எங்ககிட்ட காசு இல்ல, நிதி நிலைமை ரொம்ப மோசமா இருக்கு, அதனால தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வழி ரொம்ப ரொம்ப கம்மி"னு பம்மி, தங்களின் இயலாமையை மூடிமறைக்க இந்த வெள்ளை அறிக்கையையே ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொள்கிறது!
ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி தமிழ்நாட்டோட நிதி நிலைமை எப்படி இருக்குனு தெரியாமலா ஓட்டுக் கேட்டீங்க விஜய்? அப்போதெல்லாம் ஜோசியர் உங்ககிட்ட சொல்லலையா? நிறைவேற்ற முடியாத அத்தனை போலி வாக்குறுதிகளையும் வாரி இறைத்துவிட்டு, இப்ப நாற்காலி கிடைச்ச உடனே "பட்ஜெட்ல இடமில்லை"னு காதுல பூ சுத்துறீங்க!
நிர்வாக ஆளுமையோ, பொருளாதாரப் புத்தியோ இல்லாத ஒரு 'முதிர்ச்சியற்ற' கத்துக்குட்டி அரசாங்கம் தமிழ்நாட்டின் அரியணையில் ஏறியதன் அப்பட்டமான விளைவு தான் இந்த நிதித் தப்பியோட்டம்!
விவசாயிக்குத் தண்ணீரும் வாங்கித் தரத் துப்பில்லை, பெண்களுக்குப் பாதுகாப்பும் கொடுக்கத் துப்பில்லை, இப்ப கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும் துப்பில்லை!" என தெரிவித்துள்ளது.
Also Read
-
“முதலமைச்சர் விஜயிடம் நான் கேட்பது இதுதான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
-
“ஒன்றிய அரசின் அலட்சியம்.. கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை.. தொடரும் நீட் தேர்வு மரணம்”
-
“ஆழம் தெரியாமல் காலை விட்ட தவெக, முடியாததால் வெள்ளை அறிக்கை தருகிறதா?” : தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி!
-
“மரண ஓலம் விஜய் காதில் விழாவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!
-
FIFA உலகக் கோப்பை: மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் அதிரடி; வெற்றியுடன் தொடங்கிய ஜாம்பவான்கள்!