Tamilnadu
ஆந்திராவிற்கு சென்ற 2 பெரு முதலீடுகள் : வாய் திறக்காத த.வெ.க. அரசு!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பதவியேற்று 5 நாட்களில் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய 15 ஆயிரத்து 803 கோடி மதிப்புள்ள மெகா திட்டம் கைமாறி ஆந்திரா வசம் சென்று விட்டது.
தி.மு.க அரசால் பெரும் சவாலுக்கு பிறகு கொண்டுவரப்பட்ட 15 ஆயிரத்து 803 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்பட இருந்து மேம்படுத்தப்பட்ட நடுத்தர போர் விமான தயாரிப்பு திட்டம் ஆந்திராவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதிய பாதுகாப்பு கப்பல் கட்டும் தளத்தை அமைப்பதற்காக, மசகான் கப்பல் கட்டும் தளம் 2025 செப்டம்பரில் திராவிட மாடல் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், தற்போது அந்நிறுவனமும் ஆந்திரப் பிரதேசத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது.
தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய இந்த இரண்டு மெகா முதலீடுகளும் ஆந்திராவிற்கு சென்றது குறித்து முதலமைச்சர் விஜய் இதுவரை கேள்வி கேட்காதது ஏன் என அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தொழில்துறை அமைச்சராக உள்ள கீர்த்தனாவும் இதுகுறித்து வாய் திறக்காதது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
பல்லிளிக்கும் தவெக அரசு.. அமைச்சர் நிர்மல்குமார் நிகழ்வில் மின் தடை.. அமைச்சர், மின்துறை இரட்டை விளக்கம்!
-
“நீங்கள் Failed ஹீரோ, Failed முதலமைச்சர்” : விஜய் பேச்சுக்கு தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் பதிலடி!
-
ஆய்வு, ஆராய்ச்சி என்ற பெயரால் படுகுழிக்கு பல்லாக்கு தூக்குவதா? : முரசொலி தலையங்கம் சாடல்!
-
“பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்... தரம் தாழ்ந்து பேசுவதா?”: சிஎம் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஜெம் வீரமணி வழக்கை முடிவுக்கு கொண்டுவர வாதிட்டது த.வெ.க அரசுதான்!” : தி.மு.க எம்.பி பி.வில்சன் தகவல்!