Tamilnadu

“திருச்சியில் கொடூரம்.. மது கொடுத்து சிறுமிக்கு கூட்டு பா*யல் வன்கொடுமை.. சாலையில் வீசிச் சென்ற அவலம்”

சிவகங்கையை சேர்ந்த மாரி செல்வன் (43) என்பவர் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இன்று மதியம் மாரி செல்வன் சிவகங்கையிலிருந்து திருச்சி காந்தி மார்க்கெட் கல்மந்தை காலனி குடியிருப்பில் வசிக்கும் ஆதிரா (எ) ஆதி தமிழன் என்கிற திருநங்கை மற்றும் அவரது நண்பர்களை பார்ப்பதற்காக வந்துள்ளார்.

அப்போது சிறுமி மாலை 5 மணி அளவில் கல்மந்தை காலனியிலிருந்து, மாரீசெல்வன் தனது காரில் சுற்றி காட்டுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். மாரி செல்வன் அடிக்கடி அந்த பகுதிக்கு வருபவர் என்பதுதாலும் திருநங்கையான அண்ணனின் தெரிந்த நபர் என்பதாலும் சிறுமி சென்றுள்ளார். உடனே திருநங்கையான சிறுமியின் சகோதரரும், சில திருநங்கைகளும் சென்றதாக கூறப்படுகிறது சிறுமியை சிறிது தூரம் காரில் அழைத்துச் சென்ற கும்பல் மது கலந்த ஜூஸ் வகைகளை கொடுத்துள்ளது இதனால் மயக்கமடைந்த சிறுமி ஒரு கட்டத்தில் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

அப்போது வேறொரு பகுதியில் மாரி செல்வராஜ் உடன் வந்த மேலும் மூன்று இளைஞர்கள் காரில் ஏறி உள்ளனர். அவர்கள் கூட்டாக சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அடித்து துன்புறுத்தியதாகவும், சுயநலவை இழந்த சிறுமியை ஒரு கட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த மார்க்கெட் பகுதியில் வீசி சென்றுள்ளது அந்தக் கொடூர கும்பல்.

சிறுமி சுயநினைவின்றி கீழே விழுந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்களும் அப்பகுதி காவலர்களும் உடனடியாக அவரை மீட்டு, திருச்சி அரசு பொது மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து கார் ஓட்டுநர் மாரி செல்வனைத் தேடி வந்த பொதுமக்கள், மீண்டும் கல்மந்தை காலனிக்கு வந்த அவரைப் பிடித்துத் சரமாரியாகத் தாக்கினர். இதில் மாரி செல்வனுக்கு மண்டை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது சிறுமி திருச்சி அரசு மருத்துவமனையில் சுயநினைவின்றி தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். இதுக்குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். தொடர்ந்து சிறுமியை பார்க்க அனுமதிக்க வேண்டும், குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், “திருச்சியில் மாணவி பாலியல் வன்கொடுமை” எனும் செய்தியைக் கேட்கும்போதே மனம் நடுங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் இந்த ஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

ஆளும் அரசின் முதலமைச்சர் உடனடியாகத் தீவிர நடவடிக்கையை எடுக்க வேண்டும். மீண்டும் முந்தைய ஆட்சியை குறை சொல்லி, ஆக்ரோஷமாகப் பேசி மக்களைத் திசைதிருப்பாமல் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துங்கள். ஆரோக்கியமான நடவடிக்கை எடுத்தால் எதிர்க்கட்சி பாராட்டவும் செய்யும்.

குற்றவாளிகள் சட்டத்தின்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மாணவிகள் மற்றும் பெண்களின் வருங்கால நம்பிக்கைக்கும் அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், பெண்களுக்கெதிரான குற்றங்களால் மக்கள் கடும் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர். எனவே, தவெக அரசு சட்டம் ஒழுங்கு விஷயத்தில் கவனம் செலுத்தி துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: “தொடர் பாலியல் வன்முறைகள்.. பெண்கள் பாதுகாப்பில் கோட்டைவிடும் முதல்வர் விஜய்” : முரசொலி விமர்சனம்!