Tamilnadu
சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகளை பத்தி பேச கூட உங்களுக்கு வக்கு இல்லை திராணி இல்லை : தி.மு.க ஐடி விங் பதிலடி!
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சட்டம்- ஒழுங்கு பிரச்சனைகளைப் பற்றி பேசாமல், தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவதுபோல் பேசிய முதலமைச்சர் விஜய்க்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ”இனியாவது நசநசன்னு பொய்களை அரைவேக்காட்டுத்தனமா பேசாம, முதலமைச்சரா உண்மைகளை, ஒழுங்கா பேச கத்துகோங்க! நாட்ல என்ன நடக்குதுன்னு கண்ணத் திறந்து பாருங்க!” என தி.மு.க ஐடி விங் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தி.மு.க ஐடி விங் சமூகவலைதள பக்கத்தில்,”கட்சித் தலைவரா பொறுப்பில்லாமல் பேசிட்டு இருந்தவரு, ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகாவது பொறுப்போடு பேசுவார்ன்னு எதிர்பார்த்தா வழக்கம் போல, அந்த பொறுப்பிற்கு உரிய எந்த கண்ணியத்தையும் கடைப்பிடிக்காம வாந்தி எடுத்திருக்கிறார். 6 மாசம் அமைதியா இருப்போம்னு சொன்னவங்களால 6 நாள் கூட சும்மா இருக்க முடியல!” என நீங்க சொல்றீங்க
முதலமைச்சர் விஜய். ஆனா இந்த 20 நாட்கள்ல 25+ கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 20+ பாலியல் குற்றங்கள் நடந்திருக்கு.. ஒரு முதலமைச்சர் ஆ அதுக்கு கொஞ்சம் கூட பொறுப்பு எடுத்துக்காம இருக்கீங்க ஓகே.. ஆனா அதுக்கெல்லாம் கொஞ்சம் கூட வருத்தமோ, சோகமோ கூட உங்க மூஞ்சில இல்லையே சார்!
நடக்கற சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை பத்தி பேச கூட உங்களுக்கு வக்கு இல்லை, திராணி இல்லை - ஆனால் அதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டத்தான் செய்யும்! அது ஜனநாயக கடமையும் கூட!
செய்தியாளர்கள சந்திக்காம SCRIPT PAPER வச்சு நீங்க டையலாக் பேசறதும், சட்டப்பேரவை எதிர்கட்சித்தலைவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாம திருதிருன்னு உம்முன்னு, கம்முன்னு நீங்க இருந்தத தமிழ்நாடே பாத்துச்சி CM SIR..
அப்புறம், மாதம் 200 UNIT மின்சாரம், பயிர்க்கடன் தள்ளுபடின்னு சொல்லிட்டு பாதி மக்களை ஏமாத்த வெக்கமா இல்லையா சார்! இதுக்கும் திமுகதான் காரணம்னு நீங்க கடிச்சி வைப்பீங்க - உங்க குணமே அதானே!
பிப்ரவரி மாத இடைக்கால பட்ஜெட்லயே வருவாய் பற்றாக்குறை, கடன்சுமை எவ்வளவுன்னு அரசு சொன்ன பின்னாடி தானே நீங்க தேர்தல் அறிக்கை வெளியிடீங்க? - அந்த அறிக்கையிலேயே “இந்த கடன் அளவை சாக்குப் போக்காக பயன்படுத்த மாட்டோம்”ன்னு சொல்லிட்டு இப்போ பல்டி அடிக்க உங்களுக்கு கேவலமா இருக்காதுதான்..
இனியாவது நசநசன்னு பொய்களை அரைவேக்காட்டுத்தனமா பேசாம, முதலமைச்சரா உண்மைகளை, ஒழுங்கா பேச கத்துகோங்க! நாட்ல என்ன நடக்குதுன்னு கண்ணத் திறந்து பாருங்க” என தெரிவித்துள்ளது.
Also Read
-
‘ஊழலை ஒழிக்க வந்த உத்தமன்.. தவெக-வின் Party Fun மிரட்டல்கள்.. வைரலான வீடியோ.. தீவிர நடவடிக்கை தேவை!’
-
“தெரிந்தும் தெரியாதது போல் நாடக ஆட்சி நடத்துகிறீர்களா CM Sir?” : முன்னாள் சபாநாயகர் அப்பாவு கண்டனம்!
-
“நீட் தேர்வு ரத்துதான் நிரந்தரத் தீர்வு; அதைத்தான் நாடு எதிர்பார்க்கிறது!” : முரசொலி தலையங்கம்!
-
இரண்டரை மாதத்தில் ரூ.20 ஆயிரம் கோடி கடன்.. - முதல்வர் விஜயை விளாசிய முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!
-
நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் தொடரும் போராட்டம்.. ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி.. கடும் தள்ளுமுள்ளு!