Tamilnadu

“மானமுள்ள காங்கிரஸ்காரர் என்றால் மாணிக்கம் தாகூர் பதில் சொல்வாரா?” : தி.மு.க இளைஞரணி சரமாரி கேள்வி!

எங்கள் கூட்டணியில் இருந்தபோது கேள்விகள் எழுப்பிக்கொண்டிருந்த நீங்களும் பிரவீண் சக்கரவர்த்தியும், உங்கள் சோபா மாடல் முதலமைச்சரைக் கேள்வி எழுப்பாமல் மௌனம் காப்பது ஏன் மாணிக்கம் தாகூர் அவர்களே? என தி.மு.க இளைஞரணி கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து தி.மு.க இளைஞரணியில் சமூகவலைதளப் பக்கத்தில் ” தமிழக வெற்றிக்கழகத்தின் செய்தி தொடர்பாளர் ஜோசியர் ரிக்கி ராதன் பண்டிட், சேனல் சேனலாக ஜோதிட பேட்டிகள் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் த.வெ.கவின் அறிவிக்கப்படாத செய்தி தொடர்பாளராக மாறியிருக்கிறார் காங் எம்.பி மாணிக்கம் தாகூர். தி.மு.க உடன்பிறப்புகளின் உழைப்பாலும் வியர்வையாலும் திக்கித் திணறி தேர்தலில் வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூர், ‘நீட் குளறுபடிகளுக்கும் பெட்ரோல் விலை உயர்வுக்கும் எதிராக வாய் திறக்கவில்லை’ என்று மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களைக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

போராட்டக்களம், மக்கள் மன்றம் எதற்கும் போகாமல் அடுத்தவர் உழைப்பில் எம்.பி ஆகிவிட்டு X தளத்திலேயே குடியிருக்கும் மாணிக்கம் தாகூர் அவர்களே, எதிர்க்கட்சித் தலைவரின் இந்த பதிவுகள் உங்கள் கண்ணில் படவில்லையா?

https://x.com/Udhaystalin/status/2055317404541223062

https://x.com/Udhaystalin/status/2054247542456832427

மானமுள்ள காங்கிரஸ்காரராக இருந்தால் கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்…

• கடந்த 5 ஆண்டுகளில் ஆளுநர் அத்துமீறல், வக்பு வாரிய திருத்த மசோதா, இந்தி திணிப்பு, மாநில அரசுக்கு நிதி வழங்குவதில் பாரபட்சம், தொகுதி மறுவரையறை மசோதா என்று எல்லாவற்றுக்கும் எதிராக களத்தில் இறங்கிப் போராடியது தி.மு.க.

நீங்கள் இப்போது முட்டு கொடுத்துக்கொண்டிருக்கும் உங்கள் சோபா மாடல் அரசின் தலைவர், பா.ஜ.க.வுக்கு எதிராக எந்த போராட்டத்துக்காக வீதியில் இறங்கினார்?

• தி.மு.க கூட்டணியிலேயே பா.ஜ.கவுக்கு எதிராக குறைவான செயற்பாடுகள் கொண்ட கட்சி தமிழ்நாடு காங்கிரஸ்தான். உங்கள் காங்கிரஸ் கட்சி அதிகமாக போராடியதே ‘ஜனநாயகன்’ தடையை எதிர்த்தும் தனிப்பெரும்பான்மை இல்லாத த.வெ.கவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத ஆளுநரை எதிர்த்தும்தான்.

சரி, இதற்காக உங்கள் காங்கிரஸ் கட்சி போராடியதே, தனக்கு வந்த பிரச்சினைகளுக்காவது பா.ஜ.கவை எதிர்த்து குரல் கொடுத்தாரா உங்கள் சோபா மாடல் தலைவர்?

சொல்லாமல் கொள்ளாமல் நம்பிக்கைத் துரோகம் இழைத்துவிட்டு ஓடிப்போய் கூட்டணியில் சேர்ந்தபிறகாவது, ‘ஏன் ஆளுநரை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை?’ என்று உங்கள் சோபா மாடல் முதலமைச்சரைக் கேள்வி கேட்க திராணியில்லாத மாணிக்கம் தாகூர் அவர்களே, உங்களுக்கு தி.மு.கவைப் பார்த்து கேள்வி கேட்க யோக்கியதை இருக்கிறதா?

• மதச்சார்பின்மையைத் தூக்கி நிறுத்தத்தான் த.வெ.க ஆதரவு என்றீர்களே, பா.ஜ.க கூட்டணியில் வெற்றிபெற்ற அ.ம.மு.க எம்.எல்.ஏவை விலைக்கு வாங்கியது, அ.தி.மு.கவை உடைப்பது என்று தொடர்ந்து குதிரை பேரத்தில் பா.ஜ.க கூட்டணி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் உங்கள் புதிய எஜமானரைப் பார்த்து ஏன் கேள்வி எழுப்புவதில்லை?

• தி.மு.க கூட்டணியில் இருந்தபோது நீங்களும் பிரவீண் சக்கரவர்த்தியும் தி.மு.கவை எதிர்த்து மாறி மாறி லாவணி பாடினீர்களே, உங்கள் மீது அகில இந்திய தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்காதபோது, ‘காங்கிரஸ் கட்சியில் கருத்து சுதந்திரம் இருக்கிறது, இதுதான் உள்கட்சி ஜனநாயகம்’ என்று வகுப்பு எடுத்தீர்களே, நீங்கள் வாக்களித்த மக்களுக்கும் தி.மு.க தலைமைக்கும் துரோகம் இழைத்து ஓடியபோது, விமர்சித்த காரணத்துக்காக அலிம் அல் புகாரியை உங்கள் காங்கிரஸ் தலைமை நீக்கியதே, அப்போது எங்கே போனது காங்கிரஸ் கட்சியின் கருத்து சுதந்திரமும், உள்கட்சி ஜனநாயகமும்?

• நீங்கள் த.வெ.க அரசை ஆதரித்தபிறகு, கேரள காங்கிரஸ் முதலமைச்சர் பதவியேற்றாரே, அந்த பதவியேற்பு விழாவில் உங்கள் சோபா மாடல் முதலமைச்சர் ஏன் கலந்துகொள்ளவில்லை? டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும், அதற்கு முன்பு காங் முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்பதால்தானே?

எங்கள் கூட்டணியில் இருந்தபோது கேள்விகள் எழுப்பிக்கொண்டிருந்த நீங்களும் பிரவீண் சக்கரவர்த்தியும், உங்கள் சோபா மாடல் முதலமைச்சரைக் கேள்வி எழுப்பாமல் மௌனம் காப்பது ஏன் மாணிக்கம் தாகூர் அவர்களே?” என கேள்வி எழுப்பியுள்ளது.

Also Read: பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய த.வெ.க அரசு : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!