Tamilnadu
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியையும் வேதனையும் அளித்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு பெண்கள் குழந்தைகள் என பாதுகாப்பில்லா சூழல் நிலவி வருகிறது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,
”கோவையில் 10 வயது சிறுமி, கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த கொலை சம்பவத்துக்கு உண்மையான நீதி வேண்டும் என்ற குரல், எல்லாம் பக்கமும் ஒலிக்கிறது.
இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிற இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து, கோவை மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்துகிறார்கள்.
இந்த மிருகத்தனமான செயலைச் செய்த உண்மை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத் தர வேண்டும்.
இந்த இக்கட்டான நேரத்தில், சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு, கழகம் அவர்களுக்கு துணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 12 நாட்களில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறிய அராஜகம், தற்போது கோவை சிறுமி கடத்தி கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்வுகள் செய்திகளாக வந்து கொண்டே இருப்பது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது.
இனி ஒரு சம்பவம் இதுபோல் நடக்காமல் இருக்க - சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவத்தை முதல்வர் தர வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
புதியதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் அவர்களும் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்த வேண்டும். வெறும் இண்ஸ்டாகிராமில் நடத்தக்கூடிய ஆட்சி இது இல்லை என்பதை புரிந்து மக்களுக்கு தேவையானவற்றையும் மாநிலத்தின் பாதுகாப்பிலும் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என மக்களும் கொந்தளிப்புடன் கூறி வருகிறார்கள்.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!