Tamilnadu
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!
வேலூர் மாவட்டம், கணியம்பாடி புதூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம், தினகரன், சுனில்குமார், ரமேஷ், சுமன் ஆகிய ஐந்து பேரும் அதே கிராமத்தில் செங்கல் சூளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கணியம்பாடி தவெக ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் ஆகிய மூன்று பேரும் சம்பந்தப்பட்ட செங்கல் சூளைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது, "நாங்கள்தான் ஆளுங்கட்சி; இனிமேல் கணியம்பாடி பகுதிகளில் செங்கல் சூளை நடத்த வேண்டுமென்றால் எங்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டும்" என்று அவர்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனை எதிர்த்துக் கேள்வி கேட்டபோது, உரிமையாளர்கள் ஐந்து பேரையும் கடும் சொற்களால் திட்டி, தவெக நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் அச்சமடைந்த செங்கல் சூளை உரிமையாளர்கள், இது குறித்து வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் பேரில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
ஆம்னி பேருந்துகளில் 8 மடங்கு கட்டணம் : தவெக அமைச்சர் இன்னும் சாப்பிட்டு முடிக்கவில்லையா? - DMK IT WING!
-
‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரை ஏற்க Cheap CM-க்கு மனமில்லை! - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!
-
“உண்மையை நீண்ட நாள் பொத்தி வைக்க முடியாது!” : த.வெ.க அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எச்சரிக்கை!
-
“தமிழ்நிலத்தின் தன்மானம் காத்த தியாகி வீரபாண்டிய கட்டபொம்மன்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
உணவுப் பொருட்களின் விலை உயர்வில் தமிழ்நாடு முதலிடம்! - தவெக-வின் தோல்வி நிர்வாகத்திற்கு முரசொலி கண்டனம்!