Tamilnadu
ஓடி ஒளியாதீர்கள் CM Sir : மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - கனிமொழி என்.வி.என்.சோமு கண்டனம்!
முதலமைச்சராக விஜய் பதவியேற்றபோது தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடம் வழங்கப்பட்டது. இதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
இதையடுத்து, இது ஆளுநரின் உத்தரவால் அரங்கேறியது என்றும், இனி இப்படி நடக்காது என்றும் த.வெ.க அரசு விளக்கம் அளித்தது. ஆனால், இன்று நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிலும் மீண்டும் வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடமும், தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் கடுமையான அதிர்வலைகளையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் விஜய் உரிய விளக்கத்தை கொடுக்க வேண்டும், Twitterல் post போட்டுவிட்டு ஓடி ஒளியாதீர்கள் CM Sir என திமுக மருத்துவர் அணி தலைவர் கனிமொழி என்.வி.என்.சோமு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கனிமொழி என்.வி.என்.சோமு வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "தமிழ்நாட்டின் இனமானம் காக்க "தமிழ்நாடு" என்று பெயர் வைத்தார் பேரறிஞர் அண்ணா அவர்கள்! அதை மறக்கடிக்கவே தமிழகம் என்று சொல்லி மகிழ்ந்தார்கள் Soft சங்கிகள்! அதையும் அவர் வழியிலேயே சென்று தமிழகம் என்று சொன்னாலும் தமிழ்மொழியின் உரிமைகள் காக்கும் உரிமைகளின் காப்பகமாக திகழும் என்பதை சாதித்துக் காட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்!
அவரது வழியிலேயே எங்கள் கழகத் தலைவர் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கும் சட்ட அங்கீகாரத்தை கொண்டுவந்து சாதித்துக் காட்டினார்!
மாற்றத்தை கொண்டுவருகிறோம் என்று அவர்களது பாஜக முதலாளியைப் போலவே ஜும்லாக்களை கட்டவிழ்த்துவிட்ட தமிழக ரீல்ஸ் கழகம் பதவியேற்கும்போதே ஆளுநரின் உத்தரவிற்கு மண்டியிட்டு தமிழ்த்தாய் வாழ்த்தை வந்தே மாதரத்திற்கு பின் பாடவைத்து தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையே அடகு வைத்துவிட்டது! தெரியாமல் இது நடந்துவிட்டது என்று சொல்ல நீங்கள் ஒன்றும் வாயில் விரல் வைத்தால் கடிக்கத் தெரியாத குழந்தையல்ல! தமிழ்நாட்டின் குரலாக ஒலிக்கவேண்டிய ஆட்சியாளர்கள்!
ஆட்சியில் அமர்ந்து 2 வாரங்கள் #SofaModel வியூகத்தில் கூட்டணி அமைக்கவும் அமைச்சர் பொறுப்புகளை ஏலம் விடுவதிலும் busyஆக இருந்துவிட்டு இப்போது ஒரு வழியாக அமைச்சர்கள் பதவியேற்க வைத்துவிட்டபோதும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முன்பு வந்தே மாதரம் இசைக்க விட்டது ஆளுநரையே எதிர்த்து துணிவோடு நின்று போராடும் தமிழ்நாட்டின் மாநில சுயாட்சி வரலாற்றில் ஒரு மாபெரும் கரும்புள்ளியே!
"இடிப்பாரை இல்லாத "கேமரா மன்னன்"
கெடுப்பா ரிலானுங் கெடும்." என்று வள்ளுவரின் வாக்கில் கூட மாற்றம் செய்துதான் இந்த ஆட்சிக்கு அர்ப்பணிக்கவேண்டும் போல!
கொள்கைத் தலைவர் Slotல் பேரறிஞர் அண்ணாவிற்கு இடம் கொடுத்தால் மட்டும் பத்தாது! கொள்கையை புரிந்து செயல்வடிவம் கொடுப்பதிலும் கவனம் கொஞ்சமாவது காட்டுங்கள்! உங்கள் Sorry Sir Modelக்கு தமிழ்நாடு இனியும் இடமளிக்காது! தார்மீக பொறுப்பேற்று மாண்பமை முதல்வர் அவர்கள் உரிய விளக்கத்தை மக்கள் மன்றத்திற்கு வந்து கொடுக்கவேண்டும்! மீண்டும் Twitterல் post போட்டுவிட்டு ஓடி ஒளியாதீர்கள் CM Sir"என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ராமநாதபுரத்தில் பரபரப்பு : ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் கையும் களவுமாகக் கைது!
-
”CSK நிர்வாகத்திற்கும் தோனிக்கும் பிரச்சனையா.. அஸ்வின் கிளப்பிய புதிய புயல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!”
-
”இந்திய இளைஞர்கள் உருவாக்கிய ’காக்ரோச் ஜனதா கட்சி’ - CJP.. அதிரவைக்கும் காரணங்கள்” - முழு விவரம் அறிக!
-
மீண்டும் ‘வந்தே மாதரம்’ முதலில்... தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்குத் தள்ளிய தவெக அரசு : குவியும் கண்டனம்!
-
“பட்டாவுக்கே ரூ.5 ஆயிரம் வாங்குகிறோம்... ரூ.50 ஆயிரம் கொடுங்கள்!” – மணல் வியாபாரியிடம் பேரம் பேசிய விஏஓ!