Tamilnadu
த.வெ.க ஆட்சியில் டெண்டர் ஊழல் அம்பலம் : நடந்தது என்ன?
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் கோனேரி குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட காரப்பேட்டை கிராமத்தில் 16 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்கான டெண்டர் ஊராட்சி ஒன்றிய அலுவலம் சார்பில் கோரப்பட்டது.
டெண்டர் கோருவதில் முறையான விதிமுறைகளை பின்பற்றப்படவில்லை என காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி மற்றும் உதவி பொறியாளர் கயல்விழி ஆகியோர் மீது புகார்கள் எழுந்தன.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சினேகா டெண்டர் கோருவதில் விதிமுறைகளை பின்பற்றாமல் முறைகேடு நடந்ததுள்ளது என்பதை கண்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி மற்றும் வட்டார உதவி பொறியாளர் கயல்விழி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
டெண்டர் முறைகேடு புகாரில் வட்டார வளர்ச்சி அலுவலரும், உதவி பொறியாளரும் பணிவிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களிடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே, பெருங்குடி குப்பை கிடங்குக்கு எக்ஸ்கவேட்டர் வாடகைக்கு எடுக்க டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு அம்பலமானதால், ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“மாற்றம் எனச் சொல்லி.. அண்டப் புளுகை, ஆதவ் அர்ஜுனா புளுகாக மாற்றிவிட்டார்களோ?” : இ.பரந்தாமன் கண்டனம்!
-
ஒரே நாளில்... கோவையை தொடர்ந்து மதுரை.. கொலை நகரமாகும் தூங்கா நகரம்... வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!