Tamilnadu
அதிகாலையில் நடந்த கொடூரம் : லாரி மீது கார் மோதி காவலர் உட்பட 6 பேர் பலி!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளக்கோவில் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், குறுக்குத்தி பகுதியின் எல்லை அருகே காவல்துறை சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில், சவுக்குக் கட்டைகளை ஏற்றி வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த சாலை மையத் தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதனைத் தொடர்ந்து, அந்தச் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த வெள்ளக்கோவில் காவல் நிலையக் காவலர் ரவிச்சந்திரன் மற்றும் லாரி ஓட்டுநர் ஆகியோர், விபத்துக்குள்ளான லாரியைச் சாலையிலிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதே திசையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாகச் சாலையில் நின்றுகொண்டிருந்த காவலர் ரவிச்சந்திரன் மற்றும் லாரி ஓட்டுநர் மீது பயங்கரமாக மோதியது. அத்துடன் நிற்காமல், ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்பகுதியிலும் அந்தக் கார் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கொடூர விபத்தில், காரில் பயணம் செய்த பெண் உட்பட 4 பேர், சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ரவிச்சந்திரன் மற்றும் லாரி ஓட்டுநர் என மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்துச் சம்பவம் வெள்ளக்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், காங்கேயம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அர்பிதா ராஜ்புட் மற்றும் வெள்ளக்கோவில், காங்கேயம் காவல் ஆய்வாளர்கள் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த 6 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Also Read
-
“திமுக அரசின் மசோதாவுக்கு கிடைக்கும் ஒப்புதல் தான் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்” : உதயநிதி !
-
MLA தொடங்கி அரசு ஆலோசகர் வரை.. ஜோதிடத்துக்கு முக்கியத்துவம்.. மூட நம்பிக்கைக்கு செவிசாய்க்கும் விஜய்!
-
நீட் தேர்வு ரத்து - “நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
”நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக-விற்கு சிக்கல்... தவெக எம்.எல்.ஏ-வுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தடை!”
-
“பேரவையின் மாண்புகளையும் காத்திட வேண்டும்” : பேரவை தலைவர், துணைத் தலைவருக்கு தி.மு.க தலைவைர் வாழ்த்து!