Tamilnadu

அடுத்தடுத்து வெளிவரும் த.வெ.க நிர்வாகிகளின் மோசடி : ரூ.15 கோடி ஏமாற்றம்!

புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூரைச் சேர்ந்தவர் சரவணன். இவர் த.வெ.க-வில் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு, "ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் கூடுதலாக ரூ.20 ஆயிரம் லாபம் கிடைக்கும்" எனப் பலரிடம் கூறி, அவர்களுக்குப் பணத்தாசையைத் தூண்டியுள்ளார்.

கூடுதல் பணம் எப்படி கிடைக்கும் என்று கேட்டபோது, "உங்களது பணத்தைத் தங்கத்தில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் லாபத்தில் உங்களுக்குப் பங்கு வழங்கப்படும்" என்றும் கூறியுள்ளார்.இவரது பேச்சை நம்பிய பலரும் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கொடுத்துள்ளனர்.

இவ்வாறு கிட்டத்தட்ட ரூ.15 கோடி வரை அவர் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் சரவணன் சொன்னபடி, பணத்தைக் கொடுத்தவர்களுக்கு லாபத்தையும் தரவில்லை, அசலையும் திருப்பிக் கொடுக்கவில்லை.

இதனால் பணத்தைக் கொடுத்தவர்கள் தங்கள் பணத்தைத் திருப்பித் தருமாறு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதையடுத்து சரவணன் தலைமறைவானார். இது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, நாக்பூரில் தலைமறைவாக இருந்த சரவணனைப் பிடித்தனர்.தற்போது அவரிடம் இந்த மோசடி குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!