Tamilnadu
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
இந்தியாவை இந்துத்துவ அடிப்படையிலான அரசியல் பாதையில் முன்னேற்றும் முயற்சியில் ஒன்றியத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், கல்வித்துறையிலும் அதே நோக்கத்துடன் தலையீடு நடைபெறுகிறது. குறிப்பாக தேசியக் கல்விக் கொள்கை (2020) வாயிலாக இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழி திணிப்பு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
அந்தச் சூழலில், பிஎம் ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது. திட்டத்தில் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விரைவாக கையெழுத்திட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை மாநிலங்களுக்கு விடுக்கப்பட்ட ‘இறுதி நினைவூட்டல்’ என அரசியல் வட்டாரங்கள் பார்க்கின்றன.
பிஎம் ஸ்ரீ திட்டம் நாடு முழுவதும் 14,500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் திட்டமாக ஒன்றிய அரசு விளம்பரப்படுத்துகிறது. இந்தத் திட்டத்தில் 60% நிதியை ஒன்றிய அரசும், 40% நிதியை மாநிலங்களும் வழங்க வேண்டும். பல மாநிலங்கள் இதில் இணைந்துள்ள போதிலும், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இதுவரை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் உள்ளன.
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அரசு, கல்வி என்பது மாநிலப் பட்டியலில் உள்ள உரிமை என்பதால், ஒன்றிய அரசின் கொள்கைகளை கட்டாயப்படுத்துவது மாநில உரிமைகளை பாதிக்கும் என தெளிவாக தெரிவித்திருந்தது. மேலும், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள ‘சமக்ர சிக்ஷா’ போன்ற திட்டங்களுக்கு நிதி வழங்குவதையும் ‘பிஎம் ஸ்ரீ’ ஒப்பந்தத்துடன் இணைத்து ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்கிறது என முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குற்றம் சாட்டியிருந்தார்.
அதேபோல், முன்னாள் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநில பங்களிப்பும் உள்ள திட்டத்திற்கு ‘பிரதான் மந்திரி’ என பெயரிடுவது அரசியல் நோக்கத்தைக் காட்டுகிறது என்று விமர்சித்திருந்தார். இது மாநில கல்வித் திட்டங்களுக்கு போட்டியாக அமையும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது ஒன்றிய கல்வி அமைச்சகம் அனுப்பியுள்ள இந்தக் கடிதம், மாநிலங்களை கட்டாயப்படுத்தும் முயற்சியின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் புதிய அரசியல் மாற்றம் இன்னும் உருவாகாத சூழலில், ஒன்றிய அரசு இந்த நேரத்தை பயன்படுத்தி தனது திட்டங்களை திணிக்க முயல்கிறது என்ற குற்றச்சாட்டு அரசியல் தரப்பில் வலுத்துள்ளது.
Also Read
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
TVK Fails... ! ஆட்சியே அமைக்கவில்லை அதற்குள் : த.வெ.க-வினரின் மூன்று சம்பங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி!
-
ரவுடிபோல் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய த.வெ.க MLA : பொதுமக்கள் அதிர்ச்சி!