Tamilnadu
#Delimitation : தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தொகுதி மறுவரையறை மூலம் ஒன்றிய பாஜக அரசு, தென்மாநிலங்களுக்கான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்குத் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநில முதலமைச்சர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள்.
குறிப்பாக, 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தொகுதி மறுவரையறை திட்டத்தை நிறைவேற்ற இன்று ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டியுள்ளது.
இதற்குத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் நானே களத்தில் இறங்குவேன்; தமிழ்நாடு கொதித்தெழும்" என ஒன்றிய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துருந்தார்.
மேலும், தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்துத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும் முக்கிய இடங்களிலும் கருப்புக்கொடி ஏந்தித் தமிழ்நாடு தனது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறைகூவல் விடுத்திருந்தார்.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரைக்கு இடையே கருப்புக்கொடியை ஏற்றி, தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலைத் தீயிட்டுக் கொளுத்தினார்.
இதேபோல் தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் ஒன்றிய அரசின் சதித்திட்டமான தொகுதி மறுவரையறையை எதிர்க்கும் வகையில், கருப்பு உடை அணிந்து தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்!பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்."தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
திருச்சி ரயில் நிலையத்தில் Laptop திருடிய த.வெ.க நிர்வாகி : கைது செய்த காவல்துறை!
-
பதில் சொல்ல துப்பில்ல ; அதை விட்டுட்டு...! : செங்கோட்டையனுக்கு தி.மு.க IT WING கண்டனம்!
-
“திமுக தயவில்தான் ஆட்சி நடக்கிறது.. நாம் தான் வழியனுப்பி வைத்தோம்” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்ட ராகுல்.. மான ஈனத்தைப் பற்றிக் கவலையில்லா காங்கிரஸ்!” : முரசொலி காட்டம்!
-
“ஜூன் 18ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை.. எகிறும் எதிர்பார்ப்பு” : முழு விவரம் அறிக!