Tamilnadu
#Delimitation இந்தியாவின் தென் முனையில் இருந்து உரிமைக் குரல் எழுப்புவோம் : துணை முதலமைச்சர் உதயநிதி!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கழக இளைஞரணி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பத்மநாபபுரம்தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்ல
சுவாமி, விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டி.டி.பிரவீன், கிள்ளியூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோரை ஆதரித்து கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பின்னர் ன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் மகேஷ் மற்றும் நாகர்கோவில் வேட்பாளர் ஆஸ்டின் ஆகியோரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு கழக இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குச் சேகரித்தார்.
இந்த பிரச்சாரங்களில் நம் கல்வி-நிதி-அரசியல் உரிமைகளைத் தொடர்ந்து பறிக்கும் பாசிச பாஜகவையும் அவர்களை எதிர்க்க திராணி இல்லாத முரட்டு அடிமைகளையும் வரும் சட்டமன்றத் தேர்தலில் முற்றிலும் புறக்கணிக்க வேண்டுமென துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுத்தினார்.
மேலும், தென்னிந்தியர்களுக்கு எதிராக ஏவப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை என்ற அநீதிக்கு எதிராக இந்தியாவின் தென் முனையில் இருந்து உரிமைக் குரல் எழுப்புவோம். தென்னிந்திய மக்களின் உரிமைகளை வெல்ல தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
Also Read
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!
-
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!