Tamilnadu
நெல் ஊக்கத்தொகை.. வெளியான பரபரப்பு கடிதம்.. அம்பலப்பட்ட பாஜக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பொய்கள்!
நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது என்ற உண்மையை வெளிப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாடு விவசாயிகளின் நலன்களுக்கும் எதிராக பாஜக ஆடும் நாடகத்தினை அம்பலப்படுத்தியிருந்தார். மேலும், இதற்கு மறுப்புத் தெரிவித்திருந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில கேள்விகளையும் முன்வைத்திருந்தார்.
"நெல்லுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது. எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும்" எனத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்குத் தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது.
கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை.
எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுடைய இந்தப் பதிவில், "குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை" என்றும் கூறியிருக்கிறீர்கள்.
தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து, தாங்கள் உண்மையை மட்டும்தான் பேசுவோம் என்பதுபோல், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜனவரி 9ம் தேதியிட்டு தமிழ்நாடு அரசுக்கு எழுதியிருந்த கடிதத்தினை வெளியிட்டார்.
அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்குவதால், நெல் உற்பத்தி அதிகரிக்கிறது. நெல் சாகுபடிக்கு அதிக தண்ணீர், உரம் போன்றவை தேவைப்படுகிறது. மேலும், உற்பத்தி அதிகரிப்பதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைகிறது. இதனால் ஊக்கத்தொகை வழங்குவதை நிறுத்துமாறு கூறியுள்ளது ஒன்றிய அரசு.
இதன்மூலம் தமிழ்நாடு அரசுக்கு எழுதிய கடித்ததின் வாயிலாக, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களும், மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசும் தமிழ்நாட்டையும் விவசாயிகளையும் எந்த அளவுக்கு வஞ்சிக்கிறது என்பதை அவரே அம்பலப்படுத்தியுள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள கேரளம் மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ”நெல்லுக்கு மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் அதிகரிப்பதை ‘சுமை’ என்று கூறி, அதை நிறுத்த வேண்டும் என ஒன்றிய அரசு வலியுறுத்துவது விவசாயிகளுக்கு எதிரான அவமதிப்பாகும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் நிலையில், நமக்கு உணவு அளிக்கும் விவசாயிகளுக்கான சிறிய ஊக்கத்தொகையே சுமையாக பார்க்கப்படுவது கண்டிக்கத்தக்கது. ஒன்றிய அரசின் இந்த இரட்டை நிலைப்பாடு ஏற்க முடியாது!
நெல்லுக்கான ஊக்கத்தொகையை ரத்து செய்ய வேண்டும் என மாநிலங்களை ஒன்றிய பாஜக அரசு வலியுறுத்துவது, புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க வேளாண் தயாரிப்புகளுக்கு நமது சந்தைகளைத் திறக்க முயலும் முதல் படியாக உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. ஒன்றிய அரசின் நிதித்துறை, கேரளம் தனது விவசாயிகளை ஆதரிப்பதற்காக தண்டனை வழங்குவதை உடனடியாக நிறுத்தி, நிலுவையில் உள்ள கொள்முதல் நிதிகளை விரைவாக விடுவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள கடிதத்தினை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள CPIM மாநில செயலாளர் பெ.சண்முகம் அவர்கள், நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக் கூடாது என்று மத்திய அரசு சொல்லவில்லை. முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கொந்தளித்திருக்கிறார்.
மத்திய நிதி அமைச்சகத்தால் அனுப்பப்பட்ட கடிதம் இங்கே பதிவிடப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு இப்படிப் பொய் சொல்லலாமா நிர்மலா சீதாராமன் அவர்களே?
"பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது" என்ற தமிழ்ப் பழமொழியைத் தங்களுக்கு நினைவூட்டுகிறேன். மத்திய அரசுதான் நெல்லுக்கு உரிய விலை தரவில்லை. கொடுக்கிற மகராசன்களை (மாநில அரசுகளை) தடுக்காமலாவது இருக்கலாம் அல்லவா?
முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டால், நீங்கள் அம்பலப்பட்டுத்தான் போவீர்கள் என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இப்படி தேர்தல் நேரத்தில் கூட தமிழ்நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணமோ, தமிழ்நாட்டுக்கு நல்ல திட்டங்களை தருவோம் என்ற வாக்குறுதியை தராமல் எப்படியும் நாங்கள் ஆட்சிக்கு வரபோரதில்லையே என்ற இறுமாப்பில் இருக்கிறதா? பாஜக என்ற கேள்வி எழாமல் இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது போல NDA-வையும் டெல்லி அடிமை அதிமுகவையும் விரட்டியடிக்கும் நாள்தான் ஏப்ரல் 23. அதற்கு மக்களும் தயாராகிவிட்டனர் என்பதே நிதர்சனமான உண்மை.
Also Read
-
குடிநீர் விவகாரம் : நாட்டக்குடி கிராமம் குறித்த அண்ணாமலையின் பொய் பிரச்சாரம்... அம்பலப்படுத்திய கருணாஸ்!
-
”டெல்லி அடிமை அதிமுக வரும் தேர்தலில் டெப்பாசிட் கூட வாங்கக்கூடாது!” :தூத்துக்குடியில் முதலமைச்சர் பேச்சு!
-
”பாஜக-வின் கொள்கை பொது சிவில் சட்டம்.. உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி”: முரசொலி கடும் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை வட்டமடிக்கும் பாஜக எனும் பருந்தை விரட்டியடிக்க வேண்டும்” : பரமக்குடியில் முதலமைச்சர் உரை!
-
“இனிவரும் 10 நாட்களும் மக்களோடு மக்களாக களப்பணி ஆற்ற வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!