Tamilnadu
குடிநீர் விவகாரம் : நாட்டக்குடி கிராமம் குறித்த அண்ணாமலையின் பொய் பிரச்சாரம்... அம்பலப்படுத்திய கருணாஸ்!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் திருமாரனை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஒன்றிய பாஜக அரசு வீடு தோறும் தண்ணீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்திற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.4,835 கோடியினை தமிழகத்திற்கு ஒதுக்கி இருந்தும், சிவகங்கை மாவட்டம் மாத்தூர் பஞ்சாயத்துக்குட்பட்ட நாட்டாகுடி கிராமத்தில் குடிதண்ணீர் கிடைக்காததால் அந்த கிராம மக்கள் கிராமத்தை விட்டு சென்று விட்டதாக கூறி திமுக அரசை விமர்சனம் செய்து பேசியிருந்தார்.
இந்த நிலையில், அண்ணாமலை பேசியிருப்பது உண்மைக்கு புறம்பானது என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் சிவகங்கை தொகுதி திமுக வேட்பாளருமான நடிகர் கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருணாஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை வருமாறு :-
நாட்டாகுடி கிராமத்தில் தண்ணீர் பிரச்சனை மற்றும் குடிதண்ணீர் பிரச்சினை ஏதும் இல்லை. அங்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சுத்திகரிக்கப்பட்ட நிலையம் அமைக்கப்பட்டு இலவசமாக கிராம மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சாலை வசதி, தெருவிளக்கு வசதி உட்பட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு மக்கள் பாதுகாப்பாக வசித்து வருகின்றனர். மேலும் தங்கள் கிராமத்து விவசாய நிலங்களை கால்நடைகளில் இருந்து பாதுகாக்க விவசாய நிலங்களை சுற்றி வெளி சுத்து வேலி அமைத்து விவசாயம் மேற்கொண்டு முன்மாதிரி விவசாய கிராமமாக வருகின்றனர். தமிழக அரசும் கண்மாய் மடைகளை சீரமைத்து கால்வாய்களை தூர்வாரி கருவேல மரங்களை அகற்றி தனது கடமையினை சிறப்பாக செய்திருக்கிறது.
இது பற்றி ஏதும் அறியாத பாஜக தலைவர் அண்ணாமலை யாரோ எழுதிக் கொடுத்ததை வாயில் வந்தபடி பேசி சென்றிருப்பது வேதனைக்குரியது. நான் நாட்டாகுடி கிராமத்திற்கு சென்று நேரில் இதனை பார்த்துள்ளேன். இனியாவது பிறரை விமர்சிக்கும் முன்னர் அதனை அறிந்து அண்ணாமலை பேச வேண்டும்.
Also Read
-
”டெல்லி அடிமை அதிமுக வரும் தேர்தலில் டெப்பாசிட் கூட வாங்கக்கூடாது!” :தூத்துக்குடியில் முதலமைச்சர் பேச்சு!
-
”பாஜக-வின் கொள்கை பொது சிவில் சட்டம்.. உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி”: முரசொலி கடும் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை வட்டமடிக்கும் பாஜக எனும் பருந்தை விரட்டியடிக்க வேண்டும்” : பரமக்குடியில் முதலமைச்சர் உரை!
-
“இனிவரும் 10 நாட்களும் மக்களோடு மக்களாக களப்பணி ஆற்ற வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
“NDA ஆட்சியில் நீதிக்கோ – நிர்வாகத்திற்கோ இடமே இருக்காது” : சிவகங்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!