Tamilnadu

“திராவிட மாடல் அரசின் சாதனைகளை விட நீளமானது பழனிசாமியின் துரோகப் பட்டியல்”: முதலமைச்சர் கடும் விமர்சனம்!

கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (08-04-2026) மாலை, திருவண்ணாமலையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை:

நினைத்தாலே முக்தி தரும் ஊராக, ஆன்மீக அன்பர்களால் போற்றப்படும் ஊர், திருவண்ணாமலை! அப்படிப்பட்ட திருவண்ணாமலைக்கு, கிரிவலம் செல்பவர்கள் ரெகுலராக வருகிறார்களோ, இல்லையோ... இந்த ஸ்டாலின்

அடிக்கடி திருவண்ணாமலையை வலம் வருகிறேன். அரசு நலத்திட்ட நிகழ்ச்சிகள், வேளாண் கண்காட்சி, பாக முகவர்கள் மாநாடு, தலைவர் கலைஞர் சிலைத் திறப்பு, இளைஞரணியின்

பிரம்மாண்டமான மாநாடு என்று எதாவது ஒரு வகையில், உங்களை

நான் சந்தித்துக் கொண்டே இருக்கிறேன். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இந்தத் திருவண்ணாமலையையும் – தீபத்தையும் பிரிக்க முடியுமா? முடியாது. அதேபோன்று, என்னையும் – ருவண்ணாமலையையும் பிரிக்கவே முடியாது. என்றும் உங்களில் ஒருவன், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

1957–ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு மாநாடு ஆகட்டும்; 1967 ஆட்சி

மாற்றத்திற்கு வழிவகுத்த, 1963 திருவண்ணாமலை நாடாளுமன்ற

இடைத்தேர்தல் வெற்றி ஆகட்டும்! 2021 ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்த, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ தொடக்கம் ஆகட்டும்! திருவண்ணாமலை என்றாலே “தி.மு.க. மலை!” என்ற அளவுக்கு, கழகம் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை, திருவண்ணாமலை தி.மு.க.வின் கோட்டை. திருவண்ணாமலையை தலைவர் கலைஞர் அவர்கள்தான் தனி மாவட்டமாக உருவாக்கினார். இப்போது, நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், திருவண்ணாமலையை மாநகராட்சியாக தரம் உயர்த்தி இருக்கிறோம். இப்படி, உரிமையோடும் – உணர்வோடும் - உறவோடும், உங்களிடம் ஆதரவு கேட்டு வந்திருக்கிறேன்.

மலைகளும் - அருவிகளும் நிறைந்த மாவட்டம், கள்ளக்குறிச்சி!திருவண்ணாமலையும், கள்ளக்குறிச்சியும் திராவிட மாடல் 2.0.க்கு ரெடியா? இப்போது இந்த இரண்டு மாவட்ட வெற்றி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தப் போகிறேன்.

முதலில், திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் எ.வ. வேலு அவர்கள். எதிலும் வல்லவர், எப்போதும் வல்லவர்! அவருக்கு அறிமுகம் தேவையா? அவரின் ஆற்றலுக்கு சான்றாகத்தான் - சென்னையில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை, மெரினாவில் கலைஞர் உலகம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், திருவாரூரில் கலைஞர் கோட்டம், கன்னியாகுமரியில் கண்ணாடிப் பாலம்! அப்படிப்பட்ட வேலுவுக்கு, திருவண்ணாமலை தொகுதியில் மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் எல்லாம் வாக்களிக்க வேண்டும்.

அடுத்து, கீழ்ப்பெண்ணாத்தூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் கு. பிச்சாண்டி. இளைஞரணியில் என்னுடன் பயணித்தவர் பிச்சாண்டி. திருவண்ணாமலை நகர்மன்ற உறுப்பினர், மாவட்டக் கழகச் செயலாளர், அமைச்சர், சட்டமன்ற துணைத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் எல்லாம் வாக்களிக்க வேண்டும்.

அடுத்து, செங்கம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் மு.பெ. கிரி. மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக இருந்து, இரண்டு முறை செங்கம் தொகுதியில் வெற்றி பெறும் அளவுக்கு, மக்கள் செல்வாக்கைப் பெற்றவர். அவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை நீங்கள் அளிக்க வேண்டும்.

அடுத்து, செய்யாறு சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் ஓ. ஜோதி. செய்யாறு ஒன்றியத் தலைவராக இருந்து மக்கள் பணியாற்றத் தொடங்கி, MLA ஆனவர். செய்யாறு சிப்காட் விரிவாக்கம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், பேருந்து நிலையம் சீரமைப்பு ஆகியவற்றை தொகுதிக்கு கொண்டு வந்திருக்கிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.

அடுத்து, வந்தவாசி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் அம்பேத்குமார் அவர்கள். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்கள் பணியாற்றிய அம்பேத்குமார், மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். வந்தவாசி, திண்டிவனம், செய்யாறு, காஞ்சிபுரம் ஆகிய நகரங்களை இணைக்கும் இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டத்தை கொண்டு வந்தது இவரது சாதனை. அவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை நீங்கள் வழங்க வேண்டும்.

அடுத்து, கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் பெ.சு.தி. சரவணன். கழகத்தின் மூத்த முன்னோடி பெ.சு. திருவேங்கடத்தின் அருமை மகன். இரண்டு முறை பெரிய கிளம்பாடி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து, பல்வேறு பணிகளை ஆற்றியிருக்கிறார். கடந்த முறை வெற்றி பெற வைத்தது போன்றே, உதயசூரியன் சின்னத்தில் அவருக்கு வாக்குகளை அளிக்க வேண்டும்.

அடுத்து, போளூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்த சரவணன். வழக்கறிஞரான சரவணன், நம்முடைய பெருமதிப்பிற்குரிய அருமைச் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டு, போளூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு, முரசு சின்னத்தில் வாக்குகளை நீங்கள் வழங்க வேண்டும். அடுத்து, ஆரணி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் மகாலட்சுமி கோவர்த்தனன். கண்ணமங்கலம் பேரூராட்சித்

தலைவரான இவர், பேரூராட்சி முழுவதும் புதிய சிமெண்ட் சாலை, குடிநீர் பைப் லைன், நூலகம் ஆகியவற்றை அமைத்து மக்கள் பணி ஆற்றியிருக்கிறார். அவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை அளிக்க வேண்டும்.

அடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டம்! ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன். தியாகதுருகம் ஒன்றியச் செயலாளராக இருந்து, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக உயர்ந்திருக்கிறார் வசந்தம் கார்த்திகேயன். ஏழை எளியவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியதற்காக மக்கள் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்றிருப்பவர். கடந்த முறை போன்றே, ரிஷிவந்தியம் மக்கள் அவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை அளிக்க வேண்டும். அடுத்து, சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் உதயசூரியன். எட்டாவது முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். ஐந்து முறை வெற்றி பெற்றிருக்கிறார். இதில் இருந்தே உதயசூரியனின் செல்வாக்கை நீங்கள் புரிந்து கொள்ளலாம். உதயசூரியனுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்கினை நீங்கள் வழங்கிட வேண்டும்.

அடுத்து, உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் ஜி.ஆர். வசந்தவேல். பி.இ. பட்டதாரியான இவர், விவசாயம் செய்கிறார். மாவட்டக் கவுன்சிலர், ஒன்றியக் குழுத் தலைவர், ஒன்றியக் கவுன்சிலர் ஆகிய பொறுப்புகளை வகித்து மக்கள் தொண்டாற்றியவர். அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை அளிக்க வேண்டும்.

அடுத்து, கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கு. மாலதி. என்னுடைய இனிய நண்பர் எழுச்சித் தமிழர் இனிய சகோதரர் தொல். திருமாவளவன் அவர்களின் சகோதரி மகள். வழக்கறிஞரான இவருக்கு ‘பானை’ சின்னத்தில் வாக்கினை வழங்கிட வேண்டும். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களான இவர்கள் அனைவருக்கும் அவரவர் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உங்களில் ஒருவனாக கேட்டுக் கொள்கிறேன்.

வெற்றி உறுதிதா? உறுதி (மக்கள்). நன்றி! சீட்டு இப்போது உறுதியாகிவிட்டது. அதனால், வேட்பாளர்கள் உட்காரலாம்! இவர்கள் அனைவருக்கும் வாக்களிக்க வேண்டும் என்று ‘நான் ஒன்றும் உங்களை சும்மா கேட்கவில்லை. ஐந்து ஆண்டுகளில் எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றி தந்துவிட்டுதான் உங்களிடம் உரிமையோடு வாக்கு கேட்க வந்திருக்கிறேன். 12 தொகுதிகளுக்கும் சொல்ல நேரம் போதாது. அவ்வளவு இருக்கிறது சாதனைகள். இருந்தாலும், முடிந்தவரை சுருக்கமாக நான் சொல்ல விரும்புகிறேன்.

திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் புதிய பேருந்து நிலையம், இந்தியா முழுவதும் இருந்து அனைவரும் வியந்து பார்க்கும், மாடல் ஸ்கூல் கட்டடம் மற்றும் ஹாஸ்டல், எடப்பாளையம் ஏரிக்கரையில் என்னுடைய பெயரில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்கா, காய்கறி, பூ, பழச்சந்தை வளாகம், பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதி, தெப்பத் திருவிழா நடக்கும் அய்யங்குளம் 450 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரி சீர் செய்யப்பட்டிருக்கிறது,

திருவண்ணாமலை கோயில் கோபுரங்கள் மின்விளக்குகளால் ஒளிரூட்டும் பணிகள், கிரிவலப் பாதை மேம்பாட்டுப் பணிகள், செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய சமத்துவபுரம், புதிய அரசுக் கல்லூரி, ஜவ்வாது மலைப் பகுதியில் புதிய சாலை வசதிகள், கீழ்ப்பெண்ணாத்தூர் பேருந்து நிலையம், மாவட்டம் முழுவதும் 23 உயர் மட்டப் பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது, போளூர் நகராட்சியாக தரமுயர்த்தப்பட்டு, நீண்டநாள் கோரிக்கையான போளூர் ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டிருக்கிறது,

செய்யாறு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் செய்யாற்றின் குறுக்கே புதிய பாலம், புரிசையில் புதிய ஐ.டி.ஐ., செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள் திறக்கப்பட்டிருக்கிறது, செங்கம் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை மையக் கட்டடம், தண்டராம்பட்டு மற்றும் வெம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மற்றும் சிசு அவசர சிகிச்சை மையங்கள், திருவண்ணாமலை-அரூர் சாலை, ஆற்காடு-திண்டிவனம் சாலை, காஞ்சிபுரம்-செய்யாறு சாலை ஆகிய இடங்களில் இருவழி தடத்திலிருந்து அகலப்படுத்தப்பட்ட நான்கு வழித்தட சாலைகள் அமைக்கப்பட்டிருக்கிறது,

திருவண்ணாமலை, ஆரணி மற்றும் செய்யாறு அறிவுசார் மையங்கள், திருவண்ணாமலை மினி டைடல் பூங்கா, வெம்பாக்கத்தில் புதிய நெல் சேமிப்பு கிடங்கு, கலசபாக்கத்தில் மினி ஸ்டேடியம், திருவண்ணாமலையில் சிந்த்தடிக் ஹாக்கி மைதானம், ஆரணி பேருந்து நிலையம் மேம்பாடு என நிறைய வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கு முன்பு திருவண்ணாமலைக்கு இந்தளவுக்கு திட்டங்கள் வந்திருக்கிறதா? அவ்வளவு வளர்ச்சிப் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம்! அதேபோன்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தையும் சொல்லாமல் விட்டால் நீங்கள் கோபித்துக் கொள்வீர்கள். கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம், வீரசோழபுரத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம்,

சங்கராபுரம் ஐ.டி.ஐ.யில் தொழில்நுட்ப மையம், ரிஷிவந்தியம் கல்லூரிக் கட்டடங்கள், ஆதி திருவரங்கம், ராஜபெருமாள், அர்த்தநாரீஸ்வரர் உள்ளிட்ட கோயில்களில் குடமுழுக்கு, மணலூர்பேட்டையில் புதிய அரசு மருத்துவமனை, தென்பெண்ணை ஆற்றின் நடுவே தடுப்பணை,

உளுந்தூர்ப்பேட்டையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அறிவுசார் மையம், உளுந்தூர்ப்பேட்டை மருத்துவமனை மேம்பாடு போன்ற பணிகள் செய்யப்பட்டிருக்கிறது, கல்வராயன்மலை பழங்குடியின மக்களின் கோரிக்கையை ஏற்று, சுமார் 10 ஆயிரம் பேருக்கு வன உரிமைப் பட்டா வழங்கப்பட்டிருக்கிறது, உளுந்தூர்ப்பேட்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது, உளுந்தூர்பேட்டை பௌ-சென் காலணி தொழிற்சாலையால் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது, உளுந்தூர்பேட்டையில் அரசு கல்லூரிக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படுகிறது.

இப்படி, எதைச் சொல்வது - எதை விடுவது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை… திகைக்கும் அளவுக்கு, சாதனைகளால் நிறைந்ததுதான் திராவிட மாடல்! ஆனால், இதற்கு நேர் எதிராக, வேதனைகளால் நிரம்பியதுதான் பழனிசாமியின் ஆட்சி! நான் லிஸ்ட் போட்டு சொன்னது போன்று, அவரிடம் சொல்ல சாதனைகள் இருக்கிறதா? அதனால்தான் ஊர் ஊராகச் சென்று மக்களை எப்படி ஏமாற்றலாம் என்று திட்டமிட்டு புலம்பிக் கொண்டிருக்கிறார்.

பழனிசாமியைப் பொறுத்தவரையில், அவரும் ஒன்றும் செய்யவில்லை; நாம் செய்யும் நல்லதையும் சகித்துக் கொள்ள முடியவில்லை! அதனால்தான் உரிமைத்தொகை கிடைக்கக் காரணமாக இருந்த - மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை கிடைக்கக் காரணமாக இருந்த - பல ஆண்டுகளாக கிடைக்காத பட்டா கிடைக்கக் காரணமாக இருந்த - உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை நடத்தக் கூடாது என்று கோர்ட்டுக்கு சென்று தடை கேட்டுச் சென்றார். ஆனால், என்ன ஆனது?

கோர்ட்டில், பத்து இலட்சம் ரூபாய் அபராதம் போட்டு அனுப்பிவிட்டார்கள். “இதற்கு மேலும் பேசினால் இருபது இலட்சம் ரூபாய் ஃபைன் போடுவேன்” என்று நீதிபதி எச்சரித்து அனுப்பினார்கள். உங்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த ஸ்டாலின் முகாம்களை…

இப்போது சொல்கிறேன்… ஆட்சிக்கு நாம்தான் வரப்போகிறோம். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. வந்ததற்கு பிறகு, மீண்டும் இனிமேல், இந்த ஸ்டாலின் முகாம்கள் ஆண்டுதோறும் நடத்தப்படும்.

முடிந்தால் அதை “மக்கள் துரோக” பழனிசாமி தடுத்துப் பார்க்கட்டும்! அதேபோன்று, நூறுநாள் வேலை திட்டத்திலும் கிராம மக்களுக்கு துரோகம் செய்தவர்தான் பழனிசாமி. நூறுநாள் வேலைத்திட்டம் எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். அதை ஒன்றிய பா.ஜ.க. அரசு சிதைத்து, அதன் நோக்கத்தையே மாற்றிவிட்டார்கள். பெயரையும் மாற்றிவிட்டார்கள். அதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தால்கூட நம்முடைய வாயில் நுழையாது. நூறு நாள் வேலைக்கான சம்பளம் போடவில்லை.

புதிதாக வேலை தருவதையும் நிறுத்தி வைத்துவிட்டார்கள். வடக்கிலேயே பல மாநிலங்களில் மக்கள் கொந்தளித்துப் போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.க.வும் - கூட்டணிக் கட்சிகளும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி இருக்கிறோம். ஆனால், சயிண்டிஸ்ட் பழனிசாமி, இதுபற்றி என்ன பேசினார் தெரியுமா? “இனி 200 நாள் வேலை கிடைக்கப் போகிறது” என்று பெரிய உருட்டாக உருட்டினார். நூறு நாள் வேலையே ஒழுங்காக தராமல் இருக்கும் பா.ஜ.க. அரசு, இப்போது 200 நாள் வேலை கொடுத்து அப்படியே அறுத்து தள்ளிவிடுவார்களாம்... பா.ஜ.க.வின் ஏமாற்று திட்டத்திற்கு அடிமையாக இருக்கும் பழனிசாமி முட்டு கொடுத்ததைப் பார்த்து, டெல்லி பார்லிமெண்டே ஆடிப் போய்விட்டது.

இப்படித்தான், பா.ஜ.க. அரசே வாபஸ் வாங்கிக் கொண்ட மூன்று வேளாண் சட்டத்திற்கும், முரட்டு முட்டு கொடுத்தார், டெல்லியின் முரட்டு அடிமையான பழனிசாமி. அண்மையில்கூட, அவசர கதியில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தை எதிர்த்து, தி.மு.க. சார்பாக எவ்வளவோ

முயற்சிகள் எடுத்தோம். இரண்டு மாதத்தில் தேர்தலை வைத்துக் கொண்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கக் கூடாது என்று போராடினோம். அரசு ஊழியர்களுக்கு பெரிய அளவில் கூடுதல் பணிச்சுமையும், மன அழுத்தமும் உண்டாகும் என்று கண்டித்தோம்.

முடிந்த வரை மக்களின் வாக்குரிமையை களத்தில் இறங்கி காப்பாற்றி இருக்கிறோம். இதில் கூட பழனிசாமி என்ன சொன்னார் தெரியுமா? “தேர்தலையே ஒரு மாதத்தில் அறிவித்து நடத்துகிறார்கள், எஸ்.ஐ.ஆர். பணிகளை முடிக்க முடியாதா? என்று முட்டாள்தனமாக கேட்டார். பழனிசாமி அவர்களே... மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்.

ஏதாவது ஒரு விஷயத்திலாவது நீங்கள் டெல்லி ஓனர் பக்கம் நிற்காமல், தமிழ்நாட்டு மக்கள் பக்கம் நின்றிருக்கிறீர்களா? பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கும் - தமிழ்மொழிக்கும் எதிராகச் செய்யும் ஒரு செயலையாவது ரோஷம் வந்து கண்டித்து இருக்கிறீர்களா?

உலகம் அனைத்திற்கும் பொதுவானவர் திருவள்ளுவர். அவர் மேல் காவி சாயம் பூசினார்கள். அதை எதிர்த்து பழனிசாமி ஒரு வார்த்தை பேசியிருப்பாரா? அதனால்தான் கடைசியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் சிலை மேலேயே காவி பெயிண்ட் ஊற்றும் அளவுக்கு, சங்கி கலவரக் கும்பல் இறங்கிவிட்டார்கள். இந்திக்கும் - சமஸ்கிருத வளர்ச்சிக்கும் பா.ஜ.க. அரசு பூசணிக்காய் அளவுக்கு நிதி ஒதுக்குகிறார்கள். ஆனால், தமிழுக்கு பட்டாணி அளவுக்கு கூட ஒதுக்குவது இல்லை. இந்தத் துரோகத்தை எதிர்த்து பழனிசாமி பேசவே மாட்டார்.

அவருக்கு சுயமரியாதையும் கிடையாது; தமிழுணர்வும் கிடையாது. கீழடி அறிக்கையை ஏன் வெளியிடாமல் இருக்கிறீர்கள்? என்று நாம் எத்தனை முறை பா.ஜ.க. அரசை பார்த்து கேட்கிறோம். பழனிசாமி ஒப்புக்காவது இதைப் பற்றி பேசி பார்த்திருக்கீறீர்களா? இதையெல்லாம்விட, பெரிய கூத்து... 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது பழனிசாமி நடத்தியதுதான். “பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க உடன் கூட்டணி இல்லை” என்று வீராவேசமாக பழனிசாமி கொடுத்த வாக்குறுதி என்னாயிற்று? பச்சோந்தியைவிட வேகமாக பச்சை நிறத்திலிருந்து, மறுபடியும் காவி நிறத்திற்கு மாறி,இதிலும் துரோகம்தான் செய்தார். இன்னும் என்னவெல்லாம் துரோகம் செய்தார்? யாருக்கெல்லாம் துரோகம் செய்தார் என்று ஏற்கனவே நான் பெரிய பட்டியலே போட்டிருக்கிறேன். திராவிட மாடல் அரசின் சாதனைப் பட்டியல் மிக மிக நீளமானது. பழனிசாமியின் துரோகப் பட்டியல் அதைவிட பன்மடங்கு நீளமானது. சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமே நடத்தலாம். அந்த அளவுக்கு பழனிசாமியின் துரோகப் பட்டியல் பெரிதாக போய்க் கொண்டே இருக்கும். அ.தி.மு.க.வும் – பா.ஜ.க.வும் தனிதனியாக வந்தாலும் சரி அல்லது கூட்டணியாக வந்தாலும் சரி, இரண்டும் வேறு வேறு இல்லையென்று தமிழ்நாட்டு மக்கள் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள். மக்கள் கொடுக்கும் தொடர் தோல்விகளில் இருந்து எந்தப் பாடமும் கற்றுக் கொள்ளாத இவர்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் என்ன தெரியுமா? அவதூறுகள், பொய் பிரசாரங்கள், மதக் கலவர சதித் திட்டங்கள்.

“தி.மு.க. அரசு இந்து விரோத அரசு” என்று பா.ஜ.க. சொல்லும் பொய்யை பக்தர்கள் யாரும் நம்பத் தயாராக இல்லை. திராவிட மாடல் அரசு திருக்கோயில்களுக்கு செய்துகொண்டு இருக்கும் பணிகளைத்தான் மக்கள் தினமும் தங்களுடைய கண்களாலேயே பார்த்துக் கொண்டிருக்கிறார்களே.

ஆன்மீகத் தலமான திருவண்ணாமலையில் நின்று பெருமையோடு சொல்கிறேன்... கடந்த 5 ஆண்டுகளில், 4 ஆயிரம் திருக்கோயில்களுக்கு மேல் திருக்குடமுழுக்கு செய்திருக்கிறோம்.

பலநூறு ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடக்காமல் இருந்த பல கோயில்களுக்கும் நாம்தான் செய்திருக்கிறோம். இதைவிட பா.ஜ.க.வுக்கு எரிச்சல் தரும் விஷயம் என்ன தெரியுமா? நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 5 ஆண்டுகளில், 8 ஆயிரத்து 435 கோடி ரூபாய் மதிப்பிலான, 8 ஆயிரத்து 107 ஏக்கர் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டிருக்கிறோம். நான் பொய் சொல்லவில்லை. ஆதாரத்துடன் சொல்கிறேன். அந்தத் தகவலை எல்லாம் இணையதளத்தில் பக்காவாக பதிவேற்றி இருக்கிறோம்.

சென்று பாருங்கள். மக்கள் இதையெல்லாம் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான், திருவண்ணாமலை, மதுரை, காஞ்சிபுரம், திருச்சி என்று இருக்கக்கூடிய கோயில் நகரங்கள் எல்லாம் இன்றைக்கு தி.மு.க.வின் கோட்டையாக இருக்கிறது. இனிமேலும் அப்படித்தான் இருக்கும்!

அதற்கு உதவி செய்வதற்காகத்தான் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஃபட்நாவிஸ் என்று பலரும் வந்துகொண்டு இருக்கிறார்கள். ஒரே குறை என்னவென்றால், ஆளுநர் ரவி மட்டும் போய்விட்டார். அவர் போனது நமக்கு பெரிய லாஸ். ஏனென்றால், அவர்தான் பிரச்சாரமே இங்கு நடத்திக் கொண்டிருந்தார். சரி பரவாயில்லை. அவர்தான் ோய்விட்டாரே…

பிரதமர் மோடி வருவார். அதனால், களத்தில் நமக்கான ஆதரவு வலுவாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், நமக்காக களத்தில் சூப்பர்ஸ்டார் இருக்கிறார். சூப்பர்ஸ்டார் என்றால் யார்? தேர்தல் அறிக்கை… “சூப்பர்ஸ்டார் யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்”, “நம்முடைய தேர்தல் அறிக்கைனு” சொல்லும். பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் சில வாக்குறுதிகளை மட்டும் இப்போது ஹைலைட்டாக நான் சொல்ல விரும்புகிறேன்.

முதலில், நான் என்ன சொல்லப் போகிறேன் என்று உங்களுக்கே

தெரியும். எட்டாயிரம் ரூபாய் கூப்பன்! இந்தக் கூப்பனை என்ன

செய்யலாம்? உங்களுக்குத் தேவையான எந்தப் பொருளையும்

வாங்கிக் கொள்ளலாம். உங்கள் ஊரில், உங்களுக்கு விருப்பமான

கடையில், உங்களுக்குப் பிடித்த கம்பெனி பொருளை வாங்கிக்

கொள்வதற்கான கூப்பன்! வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி.,

கிரைண்டர், மைக்ரோ-வேவ் அவன், இண்டக்‌ஷன் ஸ்டவ் என

உங்களுக்கு என்ன வேண்டுமென்றாலும் வாங்கிக் கொள்ளலாம்.

புதிதாகவும் வாங்கலாம், பழைய பொருளை கொடுத்துவிட்டு

எக்ஸ்சேஞ்சும் செய்து கொள்ளலாம். எல்லாமே உங்களுடைய

விருப்பம்தான்! உங்கள் வீட்டுக்காரர் யாரும் தலையிடமாட்டார்கள்.

தலையிடவும் கூடாது. இப்போதே சொல்லி வைத்துவிடுங்கள்.

உங்கள் சாய்ஸ்…

நான் அடிக்கடி சொல்வதுண்டு. நீங்கள் உங்களுக்கு கட்டிக்

கொள்வதற்கு புடவை வாங்க கடைக்குச் செல்கிறீர்கள். ஒரு

புடவைதான் வாங்கச் செல்வீர்கள். ஆனால், அந்தக் கடையில்

ஷோகேஸ்–இல் உள்ள அனைத்து புடவைகளையும் எடுக்கச்

சொல்லி ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டுக் கொண்டே

இருப்பார்கள். அலுத்துப்போய் விடுவார்கள் அவர்கள்.

கடைக்காரருக்கு ஒன்றுமே புரியாது. ஒரு புடவையை வாங்க 250

புடவைகளைப் பார்ப்பீர்கள். சில கேள்விகளையும் கேட்பீர்கள்.

இது சில்க்கா? நைலக்சா? காட்டனா? தண்ணீரில் போட்டால்

சுருங்குமா? சாயம் போகுமா? அவர்கள் போட்டிருக்கும் கடை

வெளிச்சத்தில் பார்த்தால் உங்களுக்கு திருப்தி வராது. நீங்கள் அதை

எடுத்துக் கொண்டு சென்று சூரிய வெளிச்சத்தில் வெளியில் கொண்டு

சென்று காண்பித்து… அப்போதும் சூரியன்தான். இதெல்லாம்

உனக்கு எப்படி அனுபவம் என்று கேட்டுவிடாதீர்கள். எதார்த்த

நிலையைச் சொல்கிறேன்.

இப்பொழுதே என்ன வாங்கலாம் என்று நம்முடைய பெண்கள் அனைவரும் முடிவு செய்துவிட்டார்கள். இப்போது இந்த டிஸ்கஷன் எங்கு பார்த்தாலும் நடைபெறுகிறது. அடுத்து, இந்தியாவிற்கே மாடலாக இருக்கும் மகளிர் உரிமைத்தொகை. இனி மாதம் ஆயிரம் ரூபாய் இல்லை, மாதம் 2 ஆயிரம் ரூபாய்! பெண்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியா? கண்டிப்பாக, சொன்னபடியே 2 ஆயிரம் தருவோம் என்பதற்கான டிரெயிலர்தான், கோடைக்கால சிறப்பு நிதி சேர்த்து, அண்மையில்

கொடுத்த 5 ஆயிரம் ரூபாய்! இப்போது தமிழ்நாடு முழுவதும் பெண்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் தெரியுமா? “நம்முடைய முதலமைச்சர் ஜனவரி மாதம் பொங்கலுக்கு 3 ஆயிரம் ரூபாய் சொல்லிவிட்டு கொடுத்தார், அடுத்த மாதமே 5 ஆயிரம் ரூபாயை சொல்லாமல் கொடுத்துவிட்டார், இப்போது எட்டாயிரம் ரூபாய் கூப்பனும் அறிவித்திருக்கிறார். உரிமைத்தொகையும் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப் போகிறார். பேருந்துகளிலும் நாம் டிக்கெட் எடுக்க வேண்டாம். இவ்வளவும்

செய்திருக்கும் ஸ்டாலின் அண்ணனுக்கு ஓட்டு போடாமல் வேறு யாருக்கு போடுவது?” என்று பேசிக் கொள்கிறார்கள். நேற்றுகூட, சீர்காழியில் நடைப்பயணம் போல் சென்று கடைத்தெருவில் இருக்கக்கூடிய மக்களை எல்லாம் சந்தித்தேன். அப்போது, ஒரு சகோதரி என்னைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிவிட்டார். மகளிருக்காக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இன்னும் நிறைய செய்வேன்!

அதேபோன்று, புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களுக்கு இப்போது மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம் அல்லவா... இனி அதை ஆயிரத்தி 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப் போகிறோம். காலை உணவுத் திட்டத்தை 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப் போகிறோம்!

இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, எந்தவித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சார பம்பு செட்டுகள் வழங்கப்படும். நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்தி 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்தி 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி

வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை இனி மாதம் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை 2 ஆயிரத்தி 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். உங்களுடைய திருவண்ணாமலைக்காக குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால்,

வேளாண் தொழில் பூங்கா அமைக்கப்படும், புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும், பட்டு நெசவு தொழிலுக்கு பொது உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படும், அதேபோன்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரிசி ஆலை மற்றும் மரவேலைப்பாட்டு குழுமம் அமைக்கப்படும். வட மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.

இப்போது கூறுங்கள்... இவ்வளவு சாதனைகளைச் செய்துவிட்டு, இத்தனை வாக்குறுதிகளை கொடுக்கும் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் வர வேண்டுமா? இல்லையா… இந்த எழுச்சியைப் பார்த்து நம்முடைய எதிரிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இன்று மதியம் செய்தி வந்தது பார்த்தீர்களா? தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரையும், ஆயுதப்படை காவல் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு டி.ஜி.பி. உள்ளிட்ட பலரையும் மாற்றியிருக்கிறார்கள்.

நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பா.ஜ.க.வின் கிளைக்கழகமாக இப்போது மாறியிருக்கிறது. நாம் கேட்பது என்ன? இதே தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்னர் சென்னைக்கு வந்து என்ன சொன்னார்கள்? தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது, நிர்வாகத்தில் அனைத்து ஒத்துழைப்பும் கிடைப்பதாக பேட்டி கொடுத்திருக்கிறார்கள்.

இப்போது கடந்த ஒரு வாரமாக அதிகாரிகளை மாற்றுகிறார்கள்.என்ன அர்த்தம்? பா.ஜ.க.வின் தலையீடு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் இப்படித்தான் அதிகாரிகளை கூண்டோடு மாற்றுகிறார்களா? பீகாரில் தேர்தல் நடந்ததே, அங்கே இப்படித்தான் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி- யை எல்லாம் மாற்றினார்களா?

இங்கே மட்டும் முக்கிய அதிகாரிகள், அதிலும் சேலம் கலெக்டர் போன்றவர்கள் மாற்றப்படுகிறார்கள் எனில், இது யாருக்கு உதவுவதற்காக நடக்கிறது என்று மக்களுக்கு சந்தேகம் வராதா? பழனிசாமி அவர்கள் நிற்கும் தொகுதியில், தான் நினைத்ததை செய்ய வேண்டும் என்று இது நடக்கிறதா? இதனால் எல்லாம் தி.மு.க-வின் வெற்றியை தடுத்து நிறுத்த முடியும் என்று நினைக்கிறார்கள். அது முடியுமா? முடியவே முடியாது! எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும், இன்னும் ஒரு மாதத்தில் திரும்ப நம்முடைய திராவிட மாடல் அரசுதான் அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப் போகிறது.

2021-லேயும் இப்படியான பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டுதான் மாபெரும் வெற்றியை தி.மு.க. கூட்டணி பெற்றோம். இப்பொழுதும் மீண்டும் வரலாற்று வெற்றியைப் பெறுவோம்.

நம்முடைய கவலையெல்லாம்… நேர்மையற்ற பா.ஜ.க.வுக்காக, நேர்மையாக – நடுநிலையாக – அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் தன்னிச்சையாக இயங்க வேண்டிய தேர்தல் ஆணையம் எனும் உயரிய அமைப்பின் மதிப்பு இன்றைக்கு கேள்விக்குறி ஆகியிருக்கிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவின் சுதந்திரமான தேர்தலுக்கு இது பேராபத்து! N.D.A. கூட்டணிக்காக நடக்கும் இந்த அதிகார துஷ்பிரயோகத்துக்கு தக்க பதிலடியை தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் கொடுக்க வேண்டும்.

N.D.A-வின் டப்பா எஞ்சின் வந்தால், இப்போது நான் சொன்ன திட்டங்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவார்கள். அதற்கு நாம் இடம் கொடுக்கவே கூடாது. மீண்டும் சொல்கிறேன்… தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்ற இந்த ஜனநாயகப் போரில், அரசியல் விருப்பு வெறுப்புகள் எல்லாவற்றையும் கடந்து, நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மக்கள் அனைவரும், நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைத்தான் ஆதரிக்க வேண்டும்.

நன்றாக புரிந்து கொள்ளுங்கள்... நான் ஆதரவு கேட்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல; நம்முடைய கூட்டணியின் வெற்றிக்காக மட்டுமல்ல, மக்களான உங்களுடைய வெற்றிக்காக! ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வெற்றிக்காக! சொன்னதைச் செய்யும் கலைஞரின் மகனாக கேட்கிறேன்.

திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் எ.வ. வேலுவுக்கும், கீழ்ப்பெண்ணாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கு. பிச்சாண்டிக்கும், செங்கம் சட்டமன்றத் தொகுதியில் மு.பெ. கிரிக்கும், செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் ஓ. ஜோதிக்கும், வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் அம்பேத்குமாருக்கும், கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் பெ.சு.தி. சரவணனுக்கும், ஆரணி சட்டமன்றத் தொகுதியில் மகாலட்சுமி கோவர்த்தனனுக்கும், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் ஜி.ஆர். வசந்தவேலுவுக்கும், ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் வசந்தம் கார்த்திகேயனுக்கும், சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியனுக்கும், உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.

அதேபோன்று, கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கு. மாலதிக்கு பானை சின்னத்திலும், போளூர் சட்டமன்றத் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் சரவணனுக்கு முரசு சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.

அமையவிருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில், எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான சிறப்பான ஆட்சியை நாங்கள் வழங்குவோம். நல்லாட்சி தொடர்ந்திட – தமிழ்நாடு வென்றிட, ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக!