Tamilnadu
“திருவெறும்பூர் எனது தாய் வீடு” : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நெகிழ்ச்சி!
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திமுக வேட்பாளரும் அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டு பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "நாங்கள் இந்தப் பிரச்சாரப் பயணத்தைத் தொய்வின்றித் தொடர்வதற்குப் பெண்கள் எங்களுக்குத் தரும் உற்சாகமான வரவேற்பும், அவர்களின் முகமலர்ச்சியும், எழுச்சியுமே முக்கியக் காரணமாகும்.
எந்தவொரு இயக்கத்திற்குப் பெண்களின் பேராதரவு இருக்கிறதோ, அந்த இயக்கம் தான் மீண்டும் ஆட்சிக்கு வரும். அதனை நிரூபிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகின்றார்.
அதேபோல் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை, இனி ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
எங்கள் வாக்குறுதிகளில் மிக சிறப்பான திட்டம் இல்லத்தரசிகள் திட்டம். ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன்கள் வழங்கப்பட்டு, அதன் மூலம் அவர்களுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொள்ள வழிவகை செய்யப்படும்.
தற்போது 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள 20 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் காலை உணவுத் திட்டம், 'திராவிட மாடல் 2.0' திட்டத்தின் கீழ் 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். இப்படி பெண்கள், பள்ளி குழந்தைகளுக்கான ஆட்சியை நாங்கள் தொடர இருக்கிறோம்.
திருவெறும்பூர் தொகுதியை நான் எனது தாய் வீடாகவே கருதுகின்றேன். அதனால்தான் இப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் அறிந்து நிறைவேற்றி வருகின்றேன். 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சி என்பது மக்களோடு மக்களாக நின்று பணியாற்றிய பொற்கால ஆட்சியாகும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஜனவரிக்குள் 1 கிலோ அரிசி விலை ரூ.120-ஆக உயரும் அபாயம்! - த.வெ.க.வின் தோல்வியால் தவிக்கும் மக்கள்!
-
த.வெ.க எம்.எல்.ஏ. சரவணன் மீது பணமோசடி புகார் : “இதுதான் தூய ஆட்சியின் லட்சணமா?” - கனிமொழி எம்.பி. சாடல்!
-
“பாலுக்கு காவல், பூனைக்கு தோழனா?” : விஜய்யின் Double Action-க்கு தயாநிதி மாறன் கண்டனம்!
-
தேசிய விருதுகள் முதல் பத்ம ஸ்ரீ விருதுகள் வரை.. காலா பட நடிகர் நானா படேகர் காலமானார்!
-
குடிநீர் தொட்டியில் மலம்.. மூடி மறைத்த அரசுப் பள்ளி நிர்வாகம்.. 2 நாட்களாக அவலம்!