Tamilnadu
சேலம் தெற்கு அதிமுக வேட்பாளருக்குப் பொதுமக்கள் எதிர்ப்பு : பழனிசாமியின் சொந்த மாவட்டத்திலேயே அதிர்ச்சி!
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலம் தெற்கு தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வினோத், தொகுதிக்குட்பட்ட 49-வது வார்டு பகுதியில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரை வழிமறித்த அப்பகுதி பொதுமக்கள், அ.தி.மு.க-வினருக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேலம் தெற்கு தொகுதியில் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்களே மாறி மாறி சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இருப்பினும், தங்கள் பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தரவில்லை என்றும், மக்களைப் பற்றி எவ்விதக் கவலையும் கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் ஆவேசமாகத் தெரிவித்தனர்.
"எங்கள் பகுதிக்கு எந்த உதவியும் செய்யாத உங்களுக்கு, இங்கு வந்து வாக்கு கேட்க எந்த உரிமையும் இல்லை; உடனடியாகப் பகுதியை விட்டு வெளியேறுங்கள்" எனப் பொதுமக்கள் முழக்கமிட்டனர். மேலும், இந்த முறை நிச்சயம் அ.தி.மு.க-விற்கு வாக்களிக்கப் போவதில்லை என்றும் அவர்கள் திட்டவட்டமாகக் கூறினர்.
அ.தி.மு.க வேட்பாளரை மக்கள் முற்றுகையிட்டு ஆவேசமாகப் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்திலேயே, அக்கட்சி வேட்பாளருக்குப் பொதுமக்கள் இவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது; தேவைப்பட்டால்...” : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
-
பாரதிதாசன் விவகாரம் : “பொய் சொல்வதை அமைச்சர் வன்னி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்” - கோவி.செழியன் பதிலடி!
-
“தலைமை நீதிபதி அவமதிப்பு.. முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்” : வழக்கறிஞர் வில்சன் எம்.பி!
-
“கல்வி உதவித்தொகை வழங்க இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?” : த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி கேள்வி!
-
“உரிய முறையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” : அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கடிதம்!