Tamilnadu
தேர்தலுக்கு தயாராகும் களம்! - ஏப்.3 அன்று திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக தொடங்கியுள்ளதையொட்டி, வருகிற ஏப்.3 அன்று தி.மு.கழக நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சி வழியாக கலந்துரையாடுகிறார் கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இது குறித்து தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு,
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அனைத்து தொகுதிகளிலும் உள்ள கழக நிர்வாகிகளுடன் 03.04.2026 (வெள்ளிக்கிழமை) நண்பகல் 12.00 மணிக்கு காணொலி மூலம் கலந்துரையாடுகிறார்.
அதுபோது, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியளவிலும் ஓரிடத்தில் தக்க ஏற்பாடுகளைச் செய்யும்படி மாவட்டச் செயலாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், கழக வேட்பாளர்கள், பகுதி – நகரம் – ஒன்றியம் - வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதிக்கான கேட்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
காணொலி இணைப்பு தலைமைக் கழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.
Also Read
-
Chief Minister விஜய் - Cheap Minister : தாராபுரத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
“வெற்றிப் பயணம் திட்டதிலும் த.வெ.க அரசின் பித்தலாட்டம்” : பெண்களிடம் கட்டணம் வசூல்!
-
“தவெக அரசு இதோடு தனது கொட்டத்தை அடக்கிக்கொள்ள வேண்டும்” : இந்தி திணிப்பு - தி.மு.க ஐடி விங் எச்சரிக்கை!
-
விலைவாசி உயர்வால் விழி பிதுங்கும் மக்கள்.. ‘வெற்றி’ என Sticker ஒட்டினால் போதுமா? : விளாசிய மு.க.ஸ்டாலின்!
-
இந்தியில் ஊர் பெயர்கள்... எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்... உடனே 'U Turn' எடுத்த த.வெ.க.. - பின்னணி?