Tamilnadu
“பாஜக ஒரு பாறாங்கள்.. அதை கட்டிக்கொண்டு தண்ணீரில் விழுந்தால்...” - நடிகர் எஸ்.வி.சேகர் தாக்கு!
2026 சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தில் ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் இரண்டாவது முறையாக ஸ்டாலின் முதல்வராக வருவார் என்று திண்டுக்கல்லில் நடிகரும் அரசியல் பிரமுகருமான எஸ்.வி.சேகர் பேட்டியளித்துள்ளார்.
திண்டுக்கல்லில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நடிகர் எஸ்.வி சேகர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது...
குழந்தைகளுக்கு கல்வி போதிப்பதை விட நமது கலாச்சாரத்தையும் ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும். சினிமா நடிகர்களை சினிமா ஸ்கிரீன்களில் மட்டும் நடிகராக பாருங்கள். அவர்கள், எல்லாம் தெரிந்த புத்திசாலிகளாக நினைக்காதீர்கள். தியேட்டர்களில் உள்ள ப்ரொஜெக்டர்களை நிறுத்திவிட்டால் வெள்ளை நிற ஸ்கிரீன் மட்டும் நமக்கு தெரியும். திரையரங்க ஸ்கிரீன்களில் தோன்றும் நடிகர்கள் பின்னால் ஓடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
2026 சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தில் ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கும். இரண்டாவது முறையாக ஸ்டாலின் முதல்வராக வருவார். முழு பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார். தற்போதைய 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் குடும்பத்திற்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அடித்தட்டு மக்களும் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியது திராவிட மாடல் ஆட்சிதான்.
திமுக-வின் எந்த ஒரு நலத்திட்ட உதவியையும் அதிமுக மட்டுமல்ல, வேற எந்த கட்சியாலும் செய்ய முடியாது. இலவசத்தையும் வாங்காதீர்கள் என்று சொன்ன விஜய், தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பவுன் மோதிரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 2000 குழந்தைகள் பிறக்கிறது. அப்படி என்றால், வருடத்திற்கு எவ்வளவு குழந்தைகள் பிறக்கும்?! இவர்களுக்கு தங்கத்தில் மோதிரம் வழங்க அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் கூட நகை கிடையாது. வாய்க்கு வந்ததையெல்லாம் உளறியிருக்கிறார் விஜய்.
சினிமா வேறு அரசியல் வேறு என்பதை இந்த நிமிடங்கள் வரை புரிந்து கொள்ளாமல் ஒரு கூட்டம் சுத்துகிறது. விஜய் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர், அண்மையில் சிகிச்சையில் இருந்த வாலிபர் இறந்துள்ளார். கோவிலுக்கு நேர்ந்து விட்டதுபோல் பலி கொடுத்துக் கொண்டே சென்று கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். இவர் எப்படி மக்களை வாழ வைப்பார் என்று தெரியவில்லை.
விஜய் கட்சியில் வந்து சேர்ந்தவர்கள் எல்லாம் மற்ற கட்சியில் இருந்து விரட்டப்பட்டவர்கள். இங்கே வந்து ஒட்டிக் கொண்டுள்ளனர். அவர்கள் அதிமுகவின் வாக்குகளை தான் பிரிப்பார்கள். இது திமுகவிடம் பலிக்காது.
பாஜக ஒரு மிகப்பெரிய பாறாங்கல். அவர்களை கட்டிக்கொண்டு யார் வேண்டுமானலும் தண்ணீரில் குதிக்கலாம். பாறாங்கல்லுக்கு எதுவும் ஆகாது. கட்டிக்கொண்டு குதிப்பவர்கள் தான் மூழ்கி போவார்கள். பிரதமர் மோடியை சந்தித்தபோது நான் கூறினேன் மூன்று முறை நீங்கள் பிரதமராக இருப்பீர்கள் என்று அது நடந்து விட்டது. அதேபோல 2027 க்கு பிறகு நரேந்திர மோடி பிரதமராக இருக்க மாட்டார். இது கண்டிப்பாக நடக்கும்.
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவது எல்லாம் இன்னும் பல வருடங்கள் ஆகும். ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை வைத்து பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் சிறுபான்மையினரை பாதிக்கிறது. பாரதிய ஜனதா கட்சி கடவுளை வைத்து அரசியல் செய்கிறது. எல்லா கட்சியிலும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் இருக்கிறார்கள், கடவுள் மறுப்பாளர்களும் இருக்கிறார்கள். கடவுளுக்கும் பக்தியுடன் தரிசனம் செய்யும் நமக்கும் இடையே இவர்கள் எதற்கு?
"மதுரையில் முருகன் மாநாடு நடத்தினோம். 4 லட்சம் பேர் கூடினார்கள்" என்று நயினார் நாகேந்திரன் கூறி வருகிறார். திருச்செந்தூர் திருவிழாவில் ஆண்டுதோறும் ஏழு லட்சம் பேர் கூடுகிறார்கள். நான் திண்டுக்கல்லுக்கு வரும்பொழுது வந்தே பாரத் இரயிலில்தான் வந்தேன். அதன் கட்டணம் விமான கட்டணத்திற்கு இணையாக இருக்கிறது. ஆனால் அதில் கொடுக்கும் உணவை வாயில் வைக்க முடியவில்லை.
நரேந்திர மோடி அனைத்தையும் நாட்டிற்காக செய்து வருகிறேன் என கூறுகிறார். ஆனால் அவர் சாமானிய அடித்தட்டு மக்களை கருத்தில் கொள்வதில்லை. ஈரான்-அமெரிக்கா இடையே போர் வரும் என்று நரேந்திர மோடிக்கு ஏற்கனவே தெரியாதா? ஏன் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவைகளை கையிருப்பு வைக்கவில்லை? வரும் தேர்தலுக்குப் பின்னர் கண்டிப்பாக பெட்ரோல் விலை 10 ரூபாய் உயரும் அதேபோல் சமையல் எரிவாயு விலை ரூபாய் 50 உயரும்.
முதல்வர் ஸ்டாலின் இந்த தேர்தலில் அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் நன்றாக சிந்தித்து இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளார் . எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு முன்பே இந்த தேர்தலை சந்திக்க திமுக வியூகம் வகுத்துவிட்டது.
ஒவ்வொருவர் வீட்டிலும் நடிகர் விஜய் உள்ளார். ஆனால் அவர்களுக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை. அவர்கள் ஓட்டு போடவும் முடியாது. சினிமா வசனங்களை விஜய் மேடையில் பேசி வருகிறார். இதற்கு கைதட்டல்கள் மட்டுமே கிடைக்கும்.
எல்லா கட்சியினரும் தாய்மார்களே எங்களுக்கு வாக்களியுங்கள் என கூறுகிறார்கள். ஒரு குடும்பத்தில் தாய்மார்களுக்கு அத்தனை பொறுப்பும் உள்ளது. அதற்காகத்தான் அவ்வாறு கேட்கிறார்கள். பெற்றோர் கொடுக்கும் பணத்தை செலவு செய்து கொண்டு, பொறுப்பில்லாமல் சுற்றி வரும் இளைஞர்கள் தான் விஜய் கட்சியில் உள்ளனர். அவர்களுக்கு உங்கள் தலைவர் என்ன செய்வார் என்று கேட்டால் ஒன்றும் சொல்ல தெரியாது.
திமுகவின் வெற்றிக்கு ராமருக்கு உதவிய அணில் போல இருப்பேன். இந்த முறை மயிலாப்பூர் தொகுதியில் நிற்பீர்களா என கேட்கிறார்கள். என் வீட்டு வாசல் முன் நின்றால் கூட அது மயிலாப்பூர் தான். எனது வீடு மயிலாப்பூரில் தான் உள்ளது. நடிகர் கமலஹாசன் மிகுந்த பெருந்தன்மை கொண்டவர். அதனால் தான் இந்த தேர்தலில் அவர் கூட்டணியில் இருந்தால் கூட சீட்டு கேட்கவில்லை.
என்னை பொருத்தவரை நீதிமன்ற உத்தரவுப்படி இந்த தேர்தலில் மாம்பழ சின்னம் முடக்கப்படும் என நினைக்கிறேன். அன்புமணி ஆதரவாளர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
நாட்டிலேயே அதிகமான பாலியல் குற்றங்கள் பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் தான் நடைபெறுகிறது. இதை நான் கூறவில்லை, பாஜக ஆதரவு ரங்கராஜ் பாண்டே தான் கூறியுள்ளார். மத்தியில் ஆள்பவர்கள் ஒருபோதும் தமிழகத்தை ஆள முடியாது. வருகின்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஓட்டு போடாதீர்கள். தமிழகம் சிறந்து விளங்க திமுக கூட்டணிக்கு ஓட்டு போடுங்கள். ராமருக்கு அணில் உதவியது போல் திமுகவிற்கு நான் பிரச்சாரம் செய்வேன்." என்றார்.
Also Read
-
“டில்லி சரணம் பாடி பழனிசாமி.. அதிகார பங்கிற்கு ஒரு கட்சியும் ஏறிட்டு பார்க்கவில்லை..” - கி.வீரமணி தாக்கு!
-
சென்னையில் புதிதாக 40,000 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்! : மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் தகவல்!
-
“NDA கூட்டணிக்கு தலைமை தாங்குவது யார்? அ.தி.மு.க.வா? அல்லது பா.ஜ.க.வா?” : அமைச்சர் சேகர்பாபு கேள்வி!
-
“மக்களைக் கை கழுவிவிட்டு..‘நன்றாகக் கை கழுவிக் கொள்ளுங்கள்’ என்றவர் மோடி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
“கோவிட் காலத்தில் கைதட்ட சொன்ன மோடி.. இப்போதும் மோடி அரசு திருந்தியபாடில்லை..” - திமுக இளைஞரணி விமர்சனம்!