Tamilnadu
திராவிட மாடல் நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால் இந்தியா விரைவாக வளர்வது உறுதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு மருத்துவ கட்டமைப்பில் இந்தியாவிற்கே வழிகாட்டி வருகிறது. குஜராத் மாடல் என்று பேசியவர்கள் எல்லாம் இன்று தமிழ்நாட்டிற்கு வந்து, திராவிட மாடல் அரசின் திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தி வருகிறார்கள்.
கல்வியில் மட்டுமல்லாது மருத்துவத்திலும் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக விளங்கி வருகிறது. மகப்பேறு இறப்பு விகிதத்தை தமிழ்நாடு 35-40 என்ற அளவில் வெற்றிகரமாகக் குறைத்துள்ளது.
இந்நிலையில், மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதற்கு தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அறிய பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த திட்டக்குழு அதிகாரிகள் தமிழ்நாடு வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் திராவிட மாடல் நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால் இந்தியா இன்னும் விரைவாக வளர்வது உறுதி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளும் இந்த ஆரோக்கியமான போக்கு மென்மேலும் வளர வேண்டும் என விழைகிறேன். தமிழ்நாட்டுக்கு வந்துள்ள விருந்தினர்களை நம் மக்களின் சார்பாக அன்போடு வரவேற்கிறேன்.
மகப்பேறு இறப்பு விகிதம் குறைப்பதில் மட்டுமல்ல; மாநில சுயாட்சி, மொழிக்கொள்கை, சமூகநீதி ஆகியவற்றிலும் தமிழ்நாட்டின் திராவிட மாடல் நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால் இந்தியா இன்னும் விரைவாக வளர்வது உறுதி” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”