Tamilnadu
ஜவுளி ஏற்றுமதி : குஜராத்தை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
ஒன்றிய அரசின் தேசிய ஏற்றுமதி - இறக்குமதிகளை பதிவு செய்திடும் நிர்யாத் நிறுவனம் 2024-2025 ஆம் ஆண்டுக்கான ஜவுளி ஏற்றுமதிகள் குறித்த அறிக்கையை வெளியிட்டது.
அதன்படி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள ஜவுளி துணிகளின் மதிப்பு 36 ஆயிரத்து 610 மில்லியன் டாலர் என்று குறிப்பிட்டுள்ளது. இதில், தமிழ்நாடு மட்டும் 7 ஆயிரத்து 997.17 மில்லியன் டாலர் மதிப்புடைய ஜவுளித் துணிகளை ஏற்றுமதி செய்து ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் என அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாட்டிற்கு அடுத்த இடங்களில் தான், குஜராத்தும், மகாராஷ்டிராவும் உள்ளது. ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை புரிந்ததை சமூக வலைதளத்தில் பதிவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
திராவிட மாடலின் 4 ஆண்டுகளில் ஜவுளி ஏற்றுமதி 29 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், குஜராத்தையும் மகாராஷ்டிராவையும் பின்னுக்குத் தள்ளித் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
2020-21ல் 6 ஆயிரத்து 193.39 மில்லியன் டாலராக இருந்த தமிழ்நாட்டின் ஏற்றுமதி அளவு, திராவிட மாடல் அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளினால் அடுத்த நான்காண்டுகளில் ஏழாயிரத்து 997.17 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுளள்ர்.
இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டுமே 21.84 சதவிகிதம் என்றும் இவை அனைத்தையும் அmறிவித்தது நாமல்ல, ஒன்றிய அரசு என்று சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் அரசின் சாதனைகளைச் சொல்லி வெல்வோம் ஒன்றாக! என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்... தரம் தாழ்ந்து பேசுவதா?”: சிஎம் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஜெம் வீரமணி வழக்கை முடிவுக்கு கொண்டுவர வாதிட்டது த.வெ.க அரசுதான்!” : தி.மு.க எம்.பி பி.வில்சன் தகவல்!
-
பள்ளி வளாகத்திலேயே பெண் குழந்தைக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியிருக்கிறது : தமிழச்சி தங்கபாண்டியன் MP!
-
“இது யாருக்கான ஆட்சி? கேடுகெட்ட ஆட்சியை தவெக நடத்திக் கொண்டிருக்கிறது” : கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
-
மாணவிக்கு பாலியல் தொல்லை : இதுதான் பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் லட்சணமா? - DMK IT Wing கேள்வி!