Tamilnadu
சூடுபிடிக்கும் தேர்தல் களம்! : தி.மு.க சார்பில் போட்டியிட 15,372 விருப்ப மனுக்கள் தாக்கல்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ய கொடுக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 6) நிறைவடைந்தது.
தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட கடந்த பிப்.20 அன்று தொடங்கி இன்று (மார்ச் 6) வரை விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், மொத்தமாக 15,372 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் வரலாறு காணாத வகையில் கழக உடன்பிறப்புகள் மிகுந்த எழுச்சியோடும், உற்சாகத்தோடும் 15,372 விருப்ப மனுக்களை தாக்கல் செய்து புதிய சாதனை படைத்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக, கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என 1,473 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
“வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் கழகத்தின் திராவிட மாடல் 2.O ஆட்சி அமைவது உறுதியாகிவிட்ட உற்சாகத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட கழகத்தினர் மிகுந்த ஆர்வம் காட்டியது, தேர்தல் பணிகளை மெருகூட்டியுள்ளது” என தி.மு.க சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
Chief Minister விஜய் - Cheap Minister : தாராபுரத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
“வெற்றிப் பயணம் திட்டதிலும் த.வெ.க அரசின் பித்தலாட்டம்” : பெண்களிடம் கட்டணம் வசூல்!
-
“தவெக அரசு இதோடு தனது கொட்டத்தை அடக்கிக்கொள்ள வேண்டும்” : இந்தி திணிப்பு - தி.மு.க ஐடி விங் எச்சரிக்கை!
-
விலைவாசி உயர்வால் விழி பிதுங்கும் மக்கள்.. ‘வெற்றி’ என Sticker ஒட்டினால் போதுமா? : விளாசிய மு.க.ஸ்டாலின்!
-
இந்தியில் ஊர் பெயர்கள்... எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்... உடனே 'U Turn' எடுத்த த.வெ.க.. - பின்னணி?