Tamilnadu
மாநிலங்களவை தேர்தல் : வெளியானது தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல்!
2026-ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கான 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், திமுக கூட்டணிக்கு 4 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 2 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்துள்ள தே.மு.தி.க-விற்கு நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மீதமுள்ள 2 இடங்களில் தி.மு.க வேட்பாளர்களாக திருச்சி சிவா, ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோரை கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில், திருச்சி சிவா 6 ஆவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாக உள்ளார். 1996 ல் புதுக்கோட்டை மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். பின்னர் 2000,2002,2007,2014,2020 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவைக்கு தேர்வானார்.
மேலும் ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் முதல்முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாக உள்ளார்.
Also Read
-
“கவர்ச்சியால் வெற்றிபெறாமல், வேறு எதைவைத்து வெற்றிபெற்றீர்கள்?” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பதிலடி!
-
“தமிழ்நாட்டில் என்னவானாலும் ‘விஜய்’ விளக்கமளிக்கப் போவதில்லை!” : கனிமொழி எம்.பி கண்டனம்!
-
டெல்லியில் நடைபெறும் ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் தி.மு.க பங்கேற்காது! : தலைமைக் கழகம் அறிவிப்பு!
-
தமிழ்நாட்டிற்கான 152 மருத்துவ இடங்களை கைவிட்டுவிடக்கூடாது! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தல்!
-
“திருச்சியில் கொடூரம்.. மது கொடுத்து சிறுமிக்கு கூட்டு பா*யல் வன்கொடுமை.. சாலையில் வீசிச் சென்ற அவலம்”