Tamilnadu
பா.ஜ.க-வை விமர்சிக்க தைரியம் இருக்கிறதா? : விஜய்க்கு டி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி!
தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை குழுவினர் இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டம் மற்றும திருவண்ணாமலை வடக்கு திருவண்ணாமலை தெற்கு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரை சந்தித்து அவர்களின் பரிந்துரைகளை பெற்றுக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்," தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஒப்புதல் பெற்று விரைவில் அறிக்கை வெளியிடப்படும்.
மக்கள் நலனுக்காக எவ்வித போராட்டங்களிலும் ஈடுபடாமல், மக்களுக்காகக் குரல் கொடுக்காமல், நேரடியாக முதலமைச்சராக வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு மட்டுமே விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். விஜய்க்கு உண்மையில் அரசியலே தெரியாது. அவருக்குத் தைரியம் இருந்தால், முதலில் பா.ஜ.க-வை வெளிப்படையாக விமர்சித்துப் பேசட்டும்.
பா.ஜ.க தமிழ்நாட்டிற்குள் எப்படியாவது நுழைந்து விடலாம் என கனவு காண்கிறது. இவர்களது நாடகத்தில் ஒன்றுதான் திருப்பரங்குன்றம். பா.ஜ.க மக்கள் விரோத, இந்துக்கள் விரோத கட்சி. எங்கள் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கான ஆட்சியை நடத்துகிறார். ஆனால் பா.ஜ.க மதத்துக்கான ஆட்சியை நடத்துகிறது. இவர்களை புறக்கணித்து தமிழ்நாட்டு மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்.
பா.ஜ.க கூட்டணியில் இல்லாதேபோதே ஆட்சியை இழந்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. பா.ஜ.கவுடன் கூட்டணிவைத்தேபோதே இருந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் கானாமல் போய்விட்டது. இதுதான் தமிழ்நாட்டு மக்களின் என்ன ஓட்டம்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“வேளாண்மையில் தாக்குதல் நடத்துவது பா.ஜ.க.வுக்கு புதிதல்ல!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!
-
பெரியார் மண்ணில் அ.தி.மு.க இப்படி பா.ஜ.க-வுடன் கைகோர்த்து நிற்கலாமா? : பழனிசாமிக்கு டி.ராஜா கேள்வி!
-
#Delimitation இந்தியாவின் தென் முனையில் இருந்து உரிமைக் குரல் எழுப்புவோம் : துணை முதலமைச்சர் உதயநிதி!