Tamilnadu
“தந்தை பெரியாரின் படத்தை அகற்றியதற்காக அ.தி.மு.க வெட்கப்பட வேண்டும்” : அமைச்சர் பெரியகருப்பன் விமர்சனம்!
சிவகங்கை நெடுஞ்சாலைத் துறை பயணியர் விடுதி வளாகத்தில், 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாட்டு ஆய்வு மையத்தை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் இன்று திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஒரு மிகச்சிறந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரது அமைச்சரவையில் இருப்பதை எண்ணி நாங்களும் பெருமிதம் கொள்கிறோம். ஏற்கனவே 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 31 லட்சம் தாய்மார்கள் பயனடைந்து வருகின்றனர்.
தற்போது மாற்றுத்திறனாளிகள், விதவைகள் உள்ளிட்ட மேலும் 32 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இது தேர்தலுக்காகச் செய்யப்படும் கண்துடைப்பு அல்ல; தன்னைத் தேர்ந்தெடுத்த மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள். மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில், பா.ஜ.கவின் அழுத்தத்தால் தந்தை பெரியாரின் படத்தை அகற்றியதற்காக அ.தி.மு.க வெட்கப்பட வேண்டும்.
திராவிட இயக்கத்தின் அடிப்படையே பெரியார் தான் எனும் போது, அவரது படத்தையே அகற்றுவது கண்டிக்கத்தக்கது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: “இதிலும் வாய்மூடி இருக்காமல்..” -விஜய் அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை.. எல்லை மீறும் கர்நாடகாவுக்கு குவியும் கண்டனம்!
-
திமுக வழக்கறிஞர் அணி கூட்டம் : நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன? - விவரம் உள்ளே!
-
மாத கணக்கில் அறுந்து கிடந்த மின் ஒயர்.. மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. காஞ்சியில் சோகம்!
-
“கழகத்தின் முதுகெலும்பு சட்டத்துறை.. பாசிச தவெக.. அமைச்சர்களைக் கூட தெரியாத முதல்வர்” : உதயநிதி பேச்சு!