Tamilnadu
சென்னையில் தவறாமல் செல்ல வேண்டிய இடம்... நவீன வசதியுடன் பசுமை பூங்கா... திறந்துவைத்தார் துணை முதலமைச்சர்!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று (2.3.2026) சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் சிஎம்டிஏ சார்பில் 20.16 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள சேத்துப்பட்டு பசுமை பூங்காவினை திறந்து வைத்தார்.
சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் 15.70 ஏக்கர் பரப்பளவு கொண்ட சேத்துப்பட்டு பசுமை பூங்கா 20.16 கோடி ரூபாய் செலவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் மறுசீரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது.
இப்பூங்காவில் மிதக்கும் இசை நீருற்று - 4 எண்ணிக்கையிலான மிதக்கும் காட்சி தளம், 120 நபர்கள் அமரும் வகையில் திறந்தவெளி அரங்கம், 24 எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் அமரும் இருக்கைகள், வெளிப்புறம் மற்றும் உட்புற உடற்பயிற்சி கூடம், குழந்தைகள் விளையாடும் பகுதி;
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள், இசை நீரூற்றின் கட்டுப்பாட்டு அறை, மின்சார அறை, முக்கோண வடிவு இருக்கை வசதிகள், நுழைவு சீட்டு அரங்கத்தில் பூந்தொட்டியுடன் கூடிய இருக்கை வசதிகள் மற்றும் முதலுதவி பெட்டி வசதிகளுடன் சேத்துப்பட்டு பசுமை பூங்கா மேம்படுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
“ஊரான் வீட்டு நெய்யில் காராபூந்தி சுடுகிறார் விஜய்” : தாராபுரத்தில் கனிமொழி எம்.பி பேச்சு!
-
தமிழ்நாட்டில் கூடுதல் ரயில் சேவைகள் : தயாநிதி மாறன் எம்.பி. எழுதிய கடிதத்திற்கு ஒன்றிய அரசு பதில்!
-
“ஜனநாயகத்தை நிலைநாட்ட கழகம் களமிறங்கியுள்ளது” : தாராபுரம் ஆலோசனைக் கூட்டத்தில் கனிமொழி MP பேச்சு!
-
ஜெம் வீரமணி வழக்கில் திமுக மீது அவதூறு.. முதல்வர், அமைச்சர்கள் மீது SIT-யில் டி.ஆர்.பாலு எம்.பி புகார்!
-
‘சொல்லிக்கொள்ள சாதனை இல்லை.. வடிப்பதோ கிளிசரின் கண்ணீர்’ : முதலமைச்சர் விஜய் மீது முரசொலி தாக்கு!