Tamilnadu
சேப்பாக்கம் தொகுதியில் ரூ.152 கோடியில் 852 குடியிருப்புகள்... மகிழ்ச்சி பூரிப்பில் மக்கள்!
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொய்யாதோப்பு திட்டப்பகுதியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1973 ஆம் ஆண்டு தரை மற்றும் 4 தளங்களுடன் தலா 326 சதுர அடியில் கட்டப்பட்ட 302 குடியிருப்புகளும், காக்ஸ் குடியிருப்பு திட்டப்பகுதியில் 1982 ஆம் ஆண்டு தரை மற்றும் 2 தளங்களுடன் தலா 240 சதுர அடியில் கட்டப்பட்ட 84 குடியிருப்புகளும், நாவலர் நெடுஞ்செழியன் நகர் சிந்தாதரிப்பேட்டை திட்டப்பகுதியில் 1979 ஆம் ஆண்டு தரை மற்றும் 3 தளங்களுடன் 232 சதுர அடியில் கட்டப்பட்ட 392 குடியிருப்புகளும் சிதிலமடைந்த நிலையில் இருந்தன.
இந்த குடியிருப்புகள் அகற்றப்பட்ட நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 3 திட்டப்பகுதிகளுக்கும் புதிய குடியிருப்புகள் கட்ட அடிக்கல் நாட்டினார்.
அதனடிப்படையில் கொய்யாத்தோப்பு திட்டப்பகுதியில் தரை மற்றும் 5 தளங்களுடன் 61.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 324 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளும், காக்ஸ் குடியிருப்பு திட்டப்பகுதியில் தரை மற்றும் 5 தளங்களுடன் 14.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 78 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளும், நாவலர் நெடுஞ்செழியன் நகர் சிந்தாதரிப்பேட்டை திட்டப்பகுதியில் தரை மற்றும் 5 தளங்களுடன் 77.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 450 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளும் என மொத்தம் 3 திட்டப்பகுதிகளில் 152.45 கோடி மதிப்பீட்டில் கட்டும் பணிகள் முடிவுற்றன.
இந்த புதிய குடியிருப்புகள், ஒவ்வொன்றும் தலா 400 சதுர அடி பரப்பளவுடன், ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், தார் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று (28.2.2026) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொய்யாத்தோப்பு, காக்ஸ் குடியிருப்பு, நாவலர் நெடுஞ்செழியன் நகர் சிந்தாதரிப்பேட்டை ஆகிய திட்டப் பகுதிகளில் மொத்தம் 152.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 852 குடியிருப்புகளை திறந்து குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.
தொடர்ந்து சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிந்தாதரிப்பேட்டை திருவள்ளூவர் நகர் பகுதி மக்களுக்கு வீடுகள் வழங்க 73.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 377 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கு துணை முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுநாள் வரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 196 திட்டப் பகுதிகளில் 68,759 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடித்து, திறந்து வைக்கப்பட்டு வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
Also Read
-
தொகுதி மறுவரையறை : திமிரெடுத்த பாஜகவை அடங்கியே ஆக வேண்டும்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
“தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாளை (ஏப்.16) கருப்புக்கொடிப் போராட்டம்!” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
-
தொகுதி மறுவரையறை : வடக்கிற்கு ஆதாயம்... தெற்கிற்கு இழப்பு... தமிழ்நாடு சந்திக்கவிருக்கும் பேராபத்து என்ன?
-
“வேளாண்மையில் தாக்குதல் நடத்துவது பா.ஜ.க.வுக்கு புதிதல்ல!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!