Tamilnadu

அடுத்தடுத்து மக்கள் திட்டங்கள்... துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அசத்தல்!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் 53.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரத்த புற்றுநோய் மற்றும் உடல் உறுப்பு மாற்று உயர் சிகிச்சை மைய கட்டடம், கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் நிதி பங்களிப்புடன், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 5.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவ பயனாளிகளின் உதவியாளர்கள் தங்கும் விடுதி, 2.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்புற ஆரம்ப சுகாதார மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

=> சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை வளாகத்தில், இரத்த புற்றுநோய் மற்றும் உறுப்பு மாற்று உயர் சிகிச்சை மைய கட்டடம் :-

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை வளாகத்தில் 53.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 92,397 சதுரஅடி பரப்பளவில்,   131 படுக்கை வசதி, தரைத்தளம் மற்றும் ஆறு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள இரத்த புற்றுநோய் மற்றும் உறுப்பு மாற்று உயர் சிகிச்சை மைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 

இக்கட்டிடத்தின்  தரை தளத்தில்  வரவேற்பு கூடம், தீயணைப்பு கட்டுப்பாட்டு அறை (Fire Fighting Pump room), மருத்துவ வாயு மைய இணைப்பு அறை (Manifold Room), மருத்துவ கழிவுநீர் சுத்திகரிப்பு அறை (E.T.P Room), காத்திருப்பு அறை மற்றும் வாகன நிறுத்துமிடம்,

முதல் தளத்தில் - ஹீமோபீலியா மற்றும் ஹீமோகுளோபினோபதி சிகிச்சை பிரிவு, டே கேர் கீமோதெரபி அலகு,  கருத்தரங்கம், செய்முறை அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. 

இரண்டாவது தளத்தில் - ஹெமடாலஜி ஆய்வகம், ரேடியோலஜி ஆய்வகம், ஸ்டெம் செல் ரெஜிஸ்ட்ரி மற்றும் செல்லுலார் தெரபி ஆய்வகம், டிஜிட்டல் எக்ஸ்-ரே மற்றும் அல்ட்ரா சவுண்ட் பிரிவுகளும்,

மூன்றாவது தளத்தில் - ஸ்டெம் செல் மாற்று செய்முறைக்கு உட்படும் மருத்துவ பயனாளிகள் தங்கும் அறைகள்,

நான்காவது தளத்தில் - ஹெமடோ-ஆன்காலஜி பிரிவு, இன்மை பாதுகாப்பு குறைந்தவர்களுக்கான  தனிப்பட்ட அறைகள்,  சிறப்பு அறைகள்,  செய்முறை அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. 

ஐந்தாவது தளத்தில் - ஹெமடோ-ஆன்காலஜி பிரிவு, சிறப்பு அறைகள், அறுவை சிகிச்சைக்கு முந்தைய பிரிவு, செய்முறை அறை. உறுப்பு மாற்று முன் அறுவை சிகிச்சை பிரிவு,

ஆறாம் தளத்தில் - எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை அரங்கம், கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அரங்கம், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய  பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பின் நோயாளி பராமரிப்பு அறை, அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளி கவனிப்பு அறை போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

=> சென்னை அரசு தாய்-சேய் நல மருத்துவமனை வளாகத்தில்,  மருத்துவ பயனாளிகளின் உதவியாளர்கள் தங்கும் விடுதி :-

எழும்பூரில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமன 1,075 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் ஆண்டொன்றிற்கு சுமார் 15,000 பிரசவங்கள் நடைபெறுகிறது.

அரசு குழந்தைகள் நல மருத்துவமனை 837 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக செயல்பட்டுவருகிறது. 

அரசு தாய் சேய் நல மருத்துவமனை  மற்றும் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள மருத்துவப் பயனாளிகளின் உதவியாளர்கள் தங்குவதற்கு ஏற்றவகையில் 100 படுக்கைகள் கொண்ட தரைதளம் மற்றும் நான்கு தளங்களுடன் கூடிய கட்டடம் கலைஞர் நினைவு பன்னாட்டு மாராத்தான் நிதி பங்களிப்பு மற்றும்   நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.பாய் 5.89 கோடி  மதிப்பீட்டில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் கட்டப்பட்டுள்ளது. 

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (25.2.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 53.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எழும்பூரில் சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள இரத்த புற்றுநோய் மற்றும் உடல் உறுப்பு மாற்று உயர் சிகிச்சை மைய கட்டடம், சென்னை எழும்பூர் தாய்-சேய் நல மருத்துவமனை மற்றும் அரசு குழந்தைகள்  நல மருத்துவமனையில்  கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் நிதி பங்களிப்புடன், நமக்கு நாமே திட்டத்தின் கீழ்  5.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மருத்துவ பயனாளிகளின் உதவியாளர்கள் தங்கும் விடுதி ஆகியவற்றை திறந்து வைத்தார். 

முன்னதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எழும்பூர் செனாய் நகர், சுப்பராயன் சாலையில் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 2.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்புற ஆரம்ப சுகாதார மைய கட்டடத்தை திறந்து வைத்தார். 

Also Read: நிறைவேறியது கார்த்திகாவின் கனவு.. கண்ணகி நகரில் ரூ.75 லட்சத்தில் நவீன கபடி உள்விளையாட்டு அரங்கம் திறப்பு!