Tamilnadu
”என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்” : கலைஞர் பாணியில் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னையில் CNN-News 18 சார்பில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். மேலும் நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
அப்போது, திராவிட மாடல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு "மதச்சார்பின்மை, சோசலிசத்தின் கொள்கைகளை கொண்டு பாசிசத்தை எதிர்ப்பது தான் திராவிட மாடல். இதைவிடத் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், 'எல்லார்க்கும் எல்லாம்' என்பதுதான் திராவிட மாடல்” என பதில் அளித்தார்.
மேலும், பலமுனைப் போட்டி குறித்த கேள்விக்கு ”பலமுனைப் போட்டி இருக்கலாம். ஆனால், இது பலம் பொருந்திய போட்டியாக இல்லை.” என கூறினார். அதேபோல் ”பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வர வேண்டும். ஆளுநர் ஆர்.என். ரவியை மாற்றக் கூடாது. இதுவே எங்களுக்குப் பெரிய பிரச்சாரம்தான்.” என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையடுத்து, தேசிய தலைவர் என்ற கருத்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறதே என்று நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு ”என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
Also Read
-
விஜய்யின் ஆந்திரா பயணத்தில் விஷ்ணு ரெட்டிக்கு என்ன வேலை? : தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் கேள்வி!
-
மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறப்பதா? : இரட்டை வேட தவெக அரசுக்கு கீதா ஜீவன் கடும் கண்டனம்!
-
த.வெ.க.வின் நிர்வாகத் தோல்வியைக் கண்டித்து சென்னையில் தி.மு.க ஆர்ப்பாட்டம்! : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
-
“மதத்தைக் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூகநீதிக்கு எதிரானது !” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“விளம்பர வெறியால் கடைமடையில் கருகும் பயிர்கள்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!