Tamilnadu
“தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நம் தாய்மொழியின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும், தாய்மொழிக்காக இன்னுயிர் நீத்தவர்களை நினைவுகூரும் வகையிலும் இன்று உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலகத் தாய்மொழி நாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
”தமிழே நீ வாழ்ந்திடு!
இன்று உலகத் தாய்மொழிகள் நாள்! ஏராளமானோர் உயிர்கொடுத்துக் காத்த நம் உயிர்நிகர் தமிழ்மொழியை எத்தனை சிறப்புகள் சொல்லி அழைத்தாலும் “தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது. தலைவர் கலைஞரின் இந்த வரிகளைப் பாடலாக்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு என் நன்றி!
நம் தமிழைக் காத்து - அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்த்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு" என தெரிவித்துள்ளார்.
அதேபோல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”நம் அனைவரின் உயிரோடும் உணர்வோடும் கலந்த, நம் தாய்மொழி தமிழைப் போற்றி மகிழ்வோம்.எந்த வடிவில் மொழித் திணிப்பு வந்தாலும், கழகத் தலைவர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒன்றிணைந்து வீழ்த்துவோம்!” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
காவிரி விவகாரம் ; பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒருபோதும்... : தவெக அரசுக்கு வலியுறுத்திய ஓ.பன்னீர்செல்வம்!
-
விமர்சனத்தைச் சகித்துக் கொள்வார்களா? ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கிறதா?: தவெக அரசுக்கு இந்து ராம் கேள்வி!
-
‘ஜனநாயகன்’ ரிலீஸ் புரமோஷனுக்காகத் தான் கர்நாடகா செல்லவே திட்டமிட்டாரா விஜய்? : முரசொலி தலையங்கம்!
-
“எவ்வளவு தமிழ் படித்தாலும் தெரியாது!” : சட்டப்பேரவையில் மரிய வில்சன் சர்ச்சை பேச்சு!
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!