Tamilnadu
“இளைஞர்களுக்கு படிப்பும் விளையாட்டும் இரண்டு கண்களாக இருக்க வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18.2.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற CHAMPIONS OF TAMIL NADU ஐந்தாண்டு கால விளையாட்டுச் சாதனை கொண்டாட்டம் விழாவில் (Celebrating 5 Years of Sporting Excellence) கலந்துகொண்டு ஆற்றிய உரை:-
178 விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல் - ஆயிரத்து 172 விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்குதல் – சென்னையில், உலக தரத்திலான விளையாட்டு நகரம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா என, முப்பெரும் விழாவாக இதை ஏற்பாடு செய்திருக்கிறார் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள்!
உங்களுக்கு புரிவது மாதிரி சொல்ல வேண்டும் என்றால், இது ஒரு ‘Triple Jump’ Event! உதயநிதி இந்தத் துறைக்கு கிடைத்தது, உங்களுக்குப் பல வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருக்கும்! துடிப்பாக செயல்பட்டு, தமிழ்நாட்டு இளைஞர்களையும், விளையாட்டுத் துறையையும் அதிவேகமாக வளர்த்திருக்கிறார் துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள். இங்கே இருக்கின்ற பல்வேறு சாம்பியன்களை உருவாக்கும் திறமையான கேப்டனாக அவர் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கும், அவரின் வேகத்திற்கு ஈடு கொடுத்து செயல்படும் துறை அதிகாரிகளுக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
விளையாட்டு வீரர்கள் இன்றைக்கு இவ்வளவு பேர் சாதிக்க உதவியது நம்முடைய அரசின் திட்டங்கள் – அதில், முக்கியமான சில திட்டங்களை மட்டும் சுருக்கமாக சொல்ல விரும்புகிறேன்!
முதலில் முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால், கடந்த நான்கரை ஆண்டுகளில் National மற்றும் Inter-National அளவில் Medals வென்ற
5 ஆயிரத்து 406 விளையாட்டு வீரர்களுக்கு 177 கோடியே 80 இலட்சம் ரூபாய் ‘உயரிய ஊக்கத்தொகை’ வழங்கப்பட்டிருக்கிறது. இதில் என்ன Special என்றால், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும், மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இணையாக இந்த தொகையை நாம் வழங்கிக் கொண்டு வருகிறோம். இதிலும் நாம்தான் இந்தியாவிற்கே முன்னோடி! இதுவரை 241 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 29 கோடியே 67 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக, இந்த நிகழ்ச்சியில், பன்னாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பல்வேறு தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கக்கூடிய ஆயிரத்து 172 வீரர், வீராங்கனைகளுக்கு 33 கோடியே 51 லட்சம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை மொத்தம் 6 ஆயிரத்து 578 வீரர்களுக்கு 211 கோடியே 39 இலட்சம் ரூபாய்க்கு ஊக்கத் தொகை வழங்கியிருக்கிறோம்! இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவிற்கு ஊக்கத்தொகையை வழங்கியிருக்க மாட்டார்கள்!
2023-ஆம் ஆண்டு நான் தொடங்கி வைத்த ‘Tamil Nadu Champions Foundation' மூலமாக, விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கவும், அவர்கள் Inter-National விளையாட்டில் பங்கேற்கவும், இது தொடர்பான இதர செலவுகளுக்கும், இதுவரை 4 ஆயிரத்து 231 பேருக்கு, 30 கோடியே 21 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது.
விளையாட்டு வீரர்களுக்கு ‘Coach’ எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்கு நன்றாக தெரியும்! கடந்த ஆட்சியில், சுமார் 10 ஆண்டுகளாக Coach யாரும் நியமிக்கப்படவே இல்லை. அதைத்தான் தம்பி உதயநிதி பேசுகின்றபோது குறிப்பிட்டுச் சொன்னார், நாம் ஆட்சிக்கு வந்த பிறகுதான் அதை மாற்றி, 2023-ஆம் ஆண்டு 76 பயிற்றுநர்களை பணியில் அமர்த்தியிருக்கிறோம். மேலும், 4 மாற்றுத்திறனாளி பயிற்றுநர் உட்பட 34 பயிற்றுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பை, சென்ற மாதம் வெளியிட்டோம்.
ஆண்டுதோறும் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று, சிறந்து விளங்குகின்ற 2 பெண் மற்றும் 2 ஆண் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர் அல்லது உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதும் ஒரு இலட்சம் ரூபாய் பரிசும் வழங்கிக் கொண்டு வருகிறோம். இதுவரை 22 பேர் இந்த விருதை பெற்றிருக்கிறார்கள்.
அதேபோல், அடுத்து முக்கியமான ஒரு திட்டம் - அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், 3 சதவிகிதம் Sports Quota -வில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஒரு சிறிய Comparison மட்டும் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்! 2021-ஆம் ஆண்டுக்கு முன், இந்த விளையாட்டு Quota-வில் வெறும் 5 பேர்தான் பணியமர்த்தப்பட்டு இருந்தார்கள். ஆனால், நாம் ஆட்சிக்கு வந்து 5 மாற்றுத்திறனாளி வீரர்கள் உட்பட, மொத்தம் 116 பேரை பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகளில் பணியமர்த்தி இருக்கிறோம்.
ஏன், இவ்வளவும் குறிப்பிட்டு இதை நான் சொல்கிறேன் தெரியுமா? இதனால் Motivate ஆகி இன்னும் நிறைய பேர் விளையாட்டை Career –ஆக எடுக்க வேண்டும்! அதற்காகதான் சொல்கிறேன்.
மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கும், இந்த Quota-வில் வேலை கொடுப்போம் என்று உதயநிதி சொல்லியிருந்தார். அதன்படி, G.O. வெளியிட்டு, 62 ‘பாரா’ வீரர்கள் உட்பட, 178 விளையாட்டு வீரர்களுக்கு இன்று பணிநியமன ஆணை வழங்கப்பட்டிருக்கிறது. சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி பெறவும், போட்டிகளில் பங்கேற்கவும் நிதி உதவியும் வழங்கப்பட இருக்கிறது.
2021-ஆம் ஆண்டுக்கு முன்பு, எலீட், மீம்ஸ் மற்றும் C.D.S திட்டத்தின்கீழ் பயன்பெற்ற விளையாட்டு வீரர்கள் 162 பேர்! அதையும் நாம் வந்து, 375-ஆக உயர்த்தியிருக்கிறோம்! அவர்களுக்கும் சிறப்பு உதவித் தொகை திட்டத்தை பயன்படுத்துவதற்கான ஆணை இன்று வழங்கப்பட்டிருக்கிறது.
பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் பெற ஊக்குவிக்கும் எலிட் திட்டத் தொகையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத் தொகையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்ற, விளையாட்டு வீரர்களுக்கு இந்தத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட நிதி உதவி அதிகரிக்கப்பட்டிருக்கிறது!
இப்படிப்பட்ட சாதனைத் திட்டங்களுக்கெல்லாம் மகுடம் வைப்பது போன்று, “Global Sports City” இன்றைக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறோம்.! 261 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பன்முக விளையாட்டு உட்கட்டமைப்புத் திட்டம், சென்னை செம்மஞ்சேரியில் வர இருக்கிறது. அதில் என்னென்ன வரயிருக்கிறது என்பதை எல்லாம் வீடியோவில் நீங்கள் பார்த்தீர்கள்.
நம்முடைய சென்னையை பொறுத்தவரைக்கும், இப்போதே செஸ், கிரிக்கெட், ஹாக்கி, டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளில் சர்வதேச அளவில் ஒரு முக்கிய மையமாக இருக்கிறது. இந்தத் திட்டம் வந்ததும், மற்ற விளையாட்டுகளிலும் சென்னை முக்கிய இடத்தை நிச்சயமாக பெறும்! ஒலிம்பிக் வீரர்களுக்கான பயிற்சியை ஊக்குவிப்பதோடு, விளையாட்டுச் சுற்றுலா மற்றும் சர்வதேசப் போட்டிகளை நடத்தும் திறனையும் இது மேம்படுத்தும்!
நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், கல்லூரி மாணவர்களுக்கு Laptop, திராவிட மாடல் அரசின் பெரும்பாலான திட்டங்கள், இளைஞர்கள் மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. அதில், விளையாட்டு மேம்பாடும் முக்கியமாக இடம்பெற வேண்டும் என்று நம்முடைய துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள், மிகவும் Interest எடுத்து வேலை செய்துகொண்டு இருக்கிறார்! அதற்கு சாட்சி தான் இங்கே உணர்ச்சிப் பொங்க பேசிய வீராங்கனை சினேகாவின் பேச்சு அமைந்திருந்தது என்பதை நாம் கண்கூடாக பார்த்தோம்.
விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரும் உங்கள் Field-இல் Medal அடிக்க வேண்டும்!
இன்றைக்கு உலகம் செல்லும் வேகத்திற்கு ஒரு முறை மட்டும் வெற்றி பெற்றால் போதாது. தொடர்ந்து வெற்றி பெறவேண்டும்! இது உங்களுக்கு மட்டும் சொல்லும் Message இல்லை! அரசியலில் இருக்கின்ற எங்களுக்கும் பொருந்தும்! மீண்டும் மீண்டும் வெற்றி பெற வேண்டும்! அப்படி நீங்கள் வெற்றி பெற்று, வாழ்க்கையில் முன்னேற உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்து தர நம்முடைய அரசு தயாராக இருக்கிறது.
நீங்கள் எதை நினைத்தும் கவலைப்படாதீர்கள்! நானும் சரி, உங்களின் Minister உதயநிதியும் சரி, உங்களுக்கு என்ன தேவை என்றாலும் அதை செய்து தருவோம்!
நம்முடைய இளைஞர்களுக்கு படிப்பும் விளையாட்டும் இரண்டு கண்களாக இருக்க வேண்டும்! அதனால், “Work While You Work! Play While You Play!” தமிழ்நாடு தொடர்ந்து அமைதியான, வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருக்க வேண்டும் என்றால், அது, அரசியல் தலைவர்களான எங்கள் கையில் மட்டும் இல்லை, இளைஞர்களான நீங்களும் எங்களுக்கு துணையாக நிற்க வேண்டும்! படிக்கும் காலத்தில் எந்த விதமான கவனச் சிதறல்களுக்கும் இடம் கொடுக்காதீர்கள்! எல்லோரும் ஏதாவது ஒரு Sports எடுத்து விளையாடுங்கள்!
Sports-யை விட பெரிய Meditation இருக்கவே முடியாது!
Sports-யை விட கவன குவிப்புக்கு உதவும் நல்ல Technic இருக்க முடியாது! Sports-இல் Interest இருந்தால், இன்னும் சொல்கிறேன், உங்களுக்கு போதை போன்ற தீய பழக்கங்களை நோக்கி செல்லும் எண்ணமே வராது! Positive-ஆக இருங்கள்! Fit-ஆக இருங்கள்! நீங்கள் Healthy-ஆக இருந்தால், நம்முடைய State-ம் Healthy-ஆக இருக்கும்! உங்கள் Health தான் இந்தியாவின் உண்மையான Wealth!
இன்றைக்கு, Teenage-இல் இருக்கும் மாணவர்கள்தான், வருங்கால சமுதாயத்திற்கு மிக மிக முக்கியமானவர்கள். உங்களை பாதுகாப்பாக வளர்த்தெடுப்பதுதான் எங்களின் பெரும் பொறுப்பு!
அடுத்து, அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0-இல் இன்னும் இன்னும் திட்டங்கள் Line கட்டி வர இருக்கிறது! நாங்களும் வென்று வருவோம். நீங்களும் தொடர்ந்து வென்று வாருங்கள்.
Also Read
-
தொடங்குகிறது ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள் - வீடு வீடாகப் பரப்புரை’: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!
-
சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு... : சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் இடம்பெற்ற 10 முக்கிய அம்சங்கள்!
-
“11.9% பொருளாதார வளர்ச்சி” : பேரவையில் அ.தி.மு.க.வுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
“தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தரணி முழுமைக்கும் முரசொலிம் இடைக்கால பட்ஜெட்” : கி.வீரமணி வரவேற்பு!
-
இனி டிமாண்டி சாலை, “எம்.எஸ். விஸ்வநாதன் சாலை” என்று அழைக்கப்படும்! - புதிய பெயர் பலகை திறப்பு!