Tamilnadu
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 28ம் தேதி தொடங்கி வரும் பிப்ரவரி 13ம் தேதிவரை முதற்கட்டமாகவும், மார்ச் 9ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் நடைபெறுகிறது. மொத்தம் 30 அமர்வுகள் இந்த கூட்டத்தொடரில் நடைபெறுகிறது.
இநநிலையில், 2026-27 ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை பிப். 1 ஆம் தேதி மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து பிப்.2 ஆம் தேதியில் இருந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,பிப்.2 ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 2020 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான லடாக் மோதல் குறித்து ராணுவ ஜெனரல் எம்.எம்.நரவனே எழுதி இதுவரை வெளிவராத புத்தகம் குறித்து எழுதப்பட்ட கட்டுரையினை கையில் வைத்துக்கொண்டு தனது பேச்சை தொடங்கினார்.
ஆனால், அவரை தொடர்ந்து பா.ஜ.கவினர் பேச விடாமல் தடுத்துக் கொண்டே இருந்தனர். அன்று முழுவதும் இது நிலைதான் மக்களவையில் நீட்டித்தது. பிறகு அடுத்த நாளும் பேச முயன்ற ராகுல் காந்தியை பேசவிடாடல் தடுத்தனர்.
இதை கண்டித்து குரல் எழுப்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்த சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 8 நாடாளுமன்ற உறுப்பினர்களை சாபாநாயர்க இடைநீக்கம் செய்துள்ளார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ” ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு ஒன்றிய பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது?
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதிலளிக்கவும், தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் சார்ந்த விவகாரங்களில் தெளிவுபடுத்தவும் அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும்.
8 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கான அவர்களின் ஜனநாயக உரிமையை மீண்டும் நிலைநாட்டும் வகையில், இந்த இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
மின்துறை வெள்ளை அறிக்கை : உண்மையை திட்டமிட்டே மறைத்த த.வெ.க அமைச்சர்... அம்பலப்படுத்திய செந்தில் பாலாஜி!
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!
-
கோவையில் அத்துமீறல்: காவல் நிலையத்தையும் விட்டுவைக்காத த.வெ.க.வினரின் விளம்பர மோகம்!