Tamilnadu
கொளத்தூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! - 6 நியாய விலைக்கடைகள், மறுவாழ்வு மையம் தொடக்கம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (3.02.2026) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அகரம், ஜெகநாதன் தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 11 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கொளத்தூர் இரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம் மற்றும் அவ்வளாகத்தில் 6 நியாய விலைக் கடைகள், கொளத்தூர், ரெட்டேரி சந்திப்பு அருகில் 4.98 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள கொளத்தூர் ஏரிக்கரை பூங்காவை திறந்து வைத்தார்.
கொளத்தூர் இரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம் திறப்பு
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம், ஜெகநாதன் தெருவில் 11.74 கோடி ரூபாய் செலவில் தரைதளம் மற்றும் நான்கு தளங்களுடன் 21,850 சதுர அடி கட்டடப் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இம்மையத்தின் தரைத்தளத்தில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகனங்கள் நிறுத்தும் வசதிகள், வரவேற்பு அறை, மின்தூக்கி லாபி, 5 சிந்தாமணி நியாய விலைக் கடைகள் மற்றும் 1 அமுதம் நியாய விலைக் கடை என 6 நியாய விலைக் கடைகள், சாய்வுதளம், மின் தூக்கி (பயணிகள் மற்றும் ஸ்ட்ரெச்சர் வசதியுடன்) மற்றும் கழிப்பறை வசதிகள்;
முதல் தளத்தில் பிஸியோதெரபி, உடற்பயிற்சி வசதிகள், எலெக்ட்ரோதெரபி அறைகள், அல்ட்ரா சவுண்ட் பிரிவு, உடற் சிகிச்சைக்கான வசதிகள், காத்திருப்பு அறை, மின்தூக்கி மற்றும் கழிப்பறை வசதிகள்;
இரண்டாம் தளத்தில் செயற்கை மூட்டு (கை/கால்) மையம், மின் தூக்கி மற்றும் கழிப்பறை வசதிகள்;
மூன்றாம் தளத்தில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான அத்தியாவசிய வசதிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், நோயாளிகள் சிகிச்சைக்கான
15 படுக்கை வசதிகள், மின்தூக்கி மற்றும் கழிப்பறைகள்;
நான்காம் தளத்தில் மருத்துவ ஆலோசனை அறைகள், நோயாளிகள் காத்திருப்பு அறை, பணியாளர்கள் உடைமாற்றும் அறை, உணவு அருந்தும் இடம், மின்தூக்கி மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.
6 நியாய விலைக் கடைகள் திறப்பு
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அகரம், ஜெகநாதன் தெருவில் கட்டப்பட்டுள்ள கொளத்தூர் இரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 6 நியாய விலைக் கடைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, அப்பகுதி மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
கொளத்தூர் ஏரிக்கரை பூங்கா திறப்பு
கொளத்தூர், ரெட்டேரி சந்திப்பு அருகில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 4.98 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள கொளத்தூர் ஏரிக்கரை பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
இப்பூங்காவில் நடைபாதை வசதி, குழந்தைகள் விளையாடும் இடம், இசை பூங்கா, இருக்கை வசதிகள், அமரும் படிக்கட்டுகள், ஒப்பனை அறை, நவீன கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள், கண்காணிப்பு அறை, மின் அறை மற்றும் ஊஞ்சல் இருக்கைகள் போன்ற பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
Also Read
-
Covid-ல் அதிமுக ஆட்சியில் நடந்த கொடூரம்... சாத்தான்குளம் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு - விவரம்!
-
மேற்கிலும் உதிக்கும் சூரியன்! - அக்னி நியூஸ் சர்வீசஸ் வெளியிட்ட 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு!
-
”பா.ஜ.க.வின் பகிரங்க திட்டம்... நெருங்கும் ஆபத்து!” : முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி எச்சரிக்கை!
-
சென்னையில் சிக்கிய 10 ஏ.கே 47 துப்பாக்கிகள்... தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை! - முழு விவரம் உள்ளே!
-
தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்! : த.வெ.க மாவட்டச் செயலாளர் பார்த்திபன் மீது வழக்குப்பதிவு!