Tamilnadu
2016–2022ம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் அறிவிப்பு: யாராருக்கு என்னென்ன விருதுகள்: முழு விவரம் இதோ!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 2016-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், 2014-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், 2015 – 2016 ஆம் கல்வியாண்டு முதல் 2021 – 2022 ஆம் ஆண்டு கல்வியாண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் ஆகியவற்றை 13.2.2026 (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் வழங்கிச் சிறப்பிக்கிறார்.
தமிழ்நாடு அரசின் சார்பில், சமுதாயச் சிந்தனைகளுடன் கூடிய மனித நல்லுணர்வுகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்களை ஊக்கப்படுத்தும் வகையில், சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், சிறந்த நடிகர், சிறந்த நடிகையர், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு திரைப்பட விருதுகளும், அதேபோன்று மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரும் பங்கு வகிக்கும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சிறந்த நெடுந்தொடர்கள், சிறந்த கதாநாயகன், சிறந்த கதாநாயகி, ஆண்டின் சிறந்த சாதனையாளர், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்ககள் ஆகியோருக்குச் சின்னத்திரை விருதுகளும், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் மாணவர்கள் தயாரிக்கும் சிறந்த குறும்படங்களுக்கு மாணவர் விருதுகளும் தொடர்ந்து வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் இடையில் வழங்கப்படாமல் இருந்த விருதுகள் அனைத்தையும் வழங்கிட ஆணையிட்டார்கள். அதன்படி 2009 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டுகள் வரை வழங்கப்படாமல் இருந்த திரைப்பட விருதுகள் 183 திரைத்துறையை சார்ந்த விருதாளர்களுக்கும், 2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டுகள் வரை வழங்கப்படாமல் இருந்த சின்னத்திரை விருதுகள் 101 சின்னத்திரை கலைஞர்களுக்கும், 2008-2009 ஆம் கல்வியாண்டு முதல் 2013-2014 ஆம் கல்வியாண்டு வரை வழங்கப்படாமல் இருந்த தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் 30 விருதாளர்களுக்கும் 4.9.2022 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆகியோரால் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக 2015 ஆம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் 34 விருதாளர்களுக்கும், 2014-2015 ஆம் கல்வியாண்டுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் 5 விருதாளர்களுக்கும் 6.3.2024 அன்று சென்னை அடையாறு முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆகியோரால் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து, மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், சிறந்த நடிகர், சிறந்த நடிகைகள், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு சின்னத்திரை விருதுகளுக்கான சிறந்த நெடுந்தொடர்கள், கதாநாயகன், கதாநாயகி, ஆண்டின் சிறந்த சாதனையாளர், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் , சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட சின்னத்திரை விருதுகளும்,
2015 -2016 ஆம் கல்வியாண்டு முதல் 2021 – 2022 ஆம் கல்வியாண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகளும் தேர்வு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய்சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியார், அபர்ணாபாலமுரளி, லிஜோமோல்ஜோஸ், சாய்பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சின்னத்திரை விருதுகளுக்காக நடிகர்கள் எம்.இராஜ்குமரர், ஆர்.பாண்டியராஜன், கௌசிக், கிருஷ்ணா, தலைவாசல் விஜய், வ.சஞ்சிவ், ஜெய்ஆகாஷ், கார்த்திக்ராஜ், சஞ்சீவ் ஆகியோர் சின்னத் திரையின் சிறந்த கதாநாயகர்களாகவும், நடிகைகள் ஆர்.ராதிகா சரத்குமார், வாணிபோஜன், நீலிமாராணி, சங்கவி, ரேவதி, ரேஷ்மா, சபானாஷாஜகான், கெபரல்லா செல்லஸ், சைத்ரா ஆகியோர் சின்னத்திரையின் சிறந்த கதாநாயகிகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அழகி, ரோமாபுரி பாண்டியன், இராமனுஜர், நந்தினி, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, இராசாத்தி, சுந்தரி, எதிர்நீச்சல் ஆகிய தொடர்கள் சிறந்த நெடுந்தொடர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1 இலட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரமும், பெண்களைப்பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்குச் சிறப்புப் பரிசு ரூ.1.25 இலட்சமும் வழங்கப்படுத்துடன், சிறந்த நடிகர்/நடிகையர் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சின்னத்திரை சிறந்த நெடுந்தொடர்களுக்கு முதல் பரிசாக ரூ.2 இலட்சமும், இரண்டாம் பரிசாக
ரூ.1 இலட்சமும், ஆண்டின் சிறந்த சாதனையாளர் பரிசாக ரூ.1 இலட்சமும், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் பரிசாக ரூ.1 இலட்சமும் வழங்கப்படுத்துடன், சிறந்த கதாநாயகன்/ கதாநாயகி, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
இவ்விருதுகள் அனைத்தையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, 13. 2. 2026 அன்று மாலை 4.30 மணிக்கு சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தம் திருக்கரங்களால் விருதாளர்களுக்கு வழங்கிப் பாராட்டுகிறார்.
2016-ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்
வ.ண். - விருதின் பெயர் - விருதாளர்
1.
சிறந்த படம் முதல் பரிசு - மாநகரம்
2. சிறந்த படம் இரண்டாம் பரிசு - புரியாத புதிர்
3. சிறந்த படம் மூன்றாம் பரிசு - மாவீரன் கிட்டு
4. சிறந்த படம் (சிறப்பு பரிசு) - மனுசங்கடா
5. பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் (சிறப்பு பரிசு)
- அருவி
6. சிறந்த நடிகர் - திரு.விஜய் சேதுபதி (புரியாத புதிர்)
7. சிறந்த நடிகை - திருமதி.கீர்த்தி சுரேஷ் (பாம்பு சட்டை)
8. சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) - திரு.எஸ்.குரு சோமசுந்தரம் (ஜோக்கர்)
9. சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) - அதிதி பாலன் (அருவி)
10. சிறந்த வில்லன் நடிகர் - ரகுமான் (ஒரு முகத்திரை)
11. சிறந்த நகைச்சுவை நடிகர் - ரோபோ சங்கர் (வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்)
12. சிறந்த நகைச்சுவை நடிகை - மதுமிதா (காஸ்மோரா)
13. சிறந்த குணச்சித்திர நடிகர் - ஆர்.பார்த்திபன் (மாவீரன் கிட்டு)
14. சிறந்த குணச்சித்திர நடிகை - மனிஷா யாதவ் (ஒரு குப்பைக் கதை)
15. சிறந்த இயக்குனர் - லோகேஷ் கனகராஜ் (மாநகரம்)
16. சிறந்த கதையாசிரியர் - அம்ஷன் குமார் (மனுசங்கடா)
17. சிறந்த உரையாடல் ஆசிரியர் - ராஜு முருகன் (ஜோக்கர்)
18. சிறந்த இசையமைப்பாளர் - ஷாம் C.S (புரியாத புதிர்)
19. சிறந்த பாடலாசிரியர் - மதன் கார்கி (நான் உன் அழகினிலே/ 24)
20. சிறந்த பின்னணிப் பாடகர் - வேல்முருகன் (ஒரு குப்பைக் கதை)
21. சிறந்த பின்னணிப் பாடகி - வைக்கம் விஜயலட்சுமி (வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்)
22. சிறந்த ஒளிப்பதிவாளர் - பாலசுப்ரமணியம் (கதகளி)
23. சிறந்த ஒலிப்பதிவாளர் - A.S. லஷ்மி நாராயணன் (24)
24. சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்) - மு.காசி விஸ்வநாதன் மாவீரன் கிட்டு)
25. சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்) - A.ஜான் பிரிட்டோ (இளமி)
26. சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - அன்பறிவ் (காஷ்மோரா/ 24)
27. சிறந்த நடன ஆசிரியர் - தினேஷ் (24/ ஒரு குப்பைக் கதை)
28. சிறந்த ஒப்பனைக் கலைஞர் - மூவேந்தர் (பாம்பு சட்டை)
29. சிறந்த தையற் கலைஞர் - பி.செல்வம் (மாநகரம்)
30. சிறந்த குழந்தை நட்சத்திரம் - பேபி ஸ்மிர்தி (காஷ்மோரா)
31. சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவர்(ஆண்) - அசுரன் வெங்கட் (ஒரு கனவு போல)
32. சிறந்த பின்னணிக் குரல் (பெண்) - தீபா வெங்கட் (காஷ்மோரா)
2017-ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்
விருதின் பெயர் - விருதாளர்
1. சிறந்த படம் முதல் பரிசு - அறம்
2. சிறந்த படம் இரண்டாம் பரிசு - விக்ரம் வேதா
3. சிறந்த படம் மூன்றாம் பரிசு - தரமணி
4. சிறந்த படம் (சிறப்பு பரிசு) - டு லெட்
5. பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் (சிறப்பு பரிசு)-
தர்மதுரை
6. சிறந்த நடிகர் - திரு.கார்த்தி (தீரன் அதிகாரம் ஒன்று)
7. சிறந்த நடிகை - திருமதி.நயன் தாரா (அறம்)
8. சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) - சந்தோஷ் ஸ்ரீராம் (டு லெட்)
9. சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) - ஆண்ட்ரியா ஜெர்மையா (தரமணி)
10. சிறந்த வில்லன் நடிகர் - பிரசன்னா (திருட்டு பயலே-2)
11. சிறந்த நகைச்சுவை நடிகர் - பால சரவணன் (என் ஆளோட செருப்பக் காணோம்)
12. சிறந்த நகைச்சுவை நடிகை - ஊர்வசி (மகளிர் மட்டும்)
13. சிறந்த குணச்சித்திர நடிகர் - போஸ் வெங்கட் (கவண்/ தீரன் அதிகாரம் ஒன்று)
14. சிறந்த குணச்சித்திர நடிகை - சுனு லஷ்மி (அறம்)
15. சிறந்த இயக்குனர் - புஷ்கர் காயத்ரி (விக்ரம் வேதா)
16. சிறந்த கதையாசிரியர் - எச்.வினோத்குமார் (தீரன் அதிகாரம் ஒன்று)
17. சிறந்த உரையாடல் ஆசிரியர் - ராம் (தரமணி)
18. சிறந்த இசையமைப்பாளர் - ஹிப் ஹாப் தமிழா (கவண்)
19. சிறந்த பாடலாசிரியர் - விவேக் – (தீரன்டா பாடல்) (தீரன் அதிகாரம் ஒன்று)
20. சிறந்த பின்னணிப் பாடகர் - சத்யபிரகாஷ் (திருட்டு பயலே -2)
21. சிறந்த பின்னணிப் பாடகி - ஷக்தி ஸ்ரீ (விக்ரம் வேதா)
22. சிறந்த ஒளிப்பதிவாளர் - பி.செல்லதுரை (திருட்டு பயலே -2)
23. சிறந்த ஒலிப்பதிவாளர் - ராதா கிருஷ்ணன் (அறம்)
24. சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்) - A.ராஜா முகம்மது (திருட்டு பயலே -2/ வீரையன்)
25. சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்) - A.K.முத்து (அண்டாவ காணோம்)
26. சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - திலிப் சுப்ராயன் (விக்ரம் வேதா/ தீரன் அதிகாரம் ஒன்று)
27. சிறந்த நடன ஆசிரியர் - R.S.பாஸ்கர் (திருட்டு பயலே -2/ கவண்)
28. சிறந்த ஒப்பனைக் கலைஞர் - கிரி (விக்ரம் வேதா)
29. சிறந்த தையற் கலைஞர் - சீனிவாசன் (எ) சீனு (கடுகு)
30. சிறந்த குழந்தை நட்சத்திரம்- வி.சி.சாதன்யா (நிசப்தம்)
31. சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவர் (ஆண்) - ராஜ கோபால் (அறம்)
32. சிறந்த பின்னணிக்குரல் (பெண்) - உமா மகேஸ்வரி (அறம்)
2018-ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்
வ.எண். - விருதின் பெயர் - விருதாளர்
1. சிறந்த படம் முதல் பரிசு - பரியேறும் பெருமாள்
2. சிறந்த படம் இரண்டாம் பரிசு - கடைக்குட்டி சிங்கம்
3. சிறந்த படம் மூன்றாம் பரிசு - 96
4. சிறந்த படம் (சிறப்பு பரிசு) - சீதக்காதி
5. பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் (சிறப்பு பரிசு) - கனா
6. சிறந்த நடிகர் - தனுஷ் (வடசென்னை)
7. சிறந்த நடிகை - ஜோதிகா (செக்கச் சிவந்த வானம்)
8. சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) - விஷ்ணு விஷால் (ராட்சசன்)
9. சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) - ஐஸ்வர்யா ராஜேஷ் (கனா/ வட சென்னை)
10. சிறந்த வில்லன் நடிகர் - சமுத்திரகனி (வட சென்னை)
11. சிறந்த நகைச்சுவை நடிகர் - யோகி பாபு (மோகினி)
12. சிறந்த நகைச்சுவை நடிகை - தேவதர்ஷினி (96)
13. சிறந்த குணச்சித்திர நடிகர் - அமீர் (வட சென்னை)
14. சிறந்த குணச்சித்திர நடிகை - விஜி சந்திரசேகர்
(கடைக்குட்டி சிங்கம்)
15. சிறந்த இயக்குனர் - மாரி செல்வராஜ் (பரியேறும் பெருமாள்)
16. சிறந்த கதையாசிரியர் - சி.பிரேம்குமார் (96)
17. சிறந்த உரையாடல் ஆசிரியர் - அருண் ராஜா காமராஜ் (கனா)
18. சிறந்த இசையமைப்பாளர் - சந்தோஷ் நாராயணன் (வட சென்னை)
19. சிறந்த பாடலாசிரியர் - தியாகராஜன் குமார ராஜா (சீதக்காதி)
20. சிறந்த பின்னணிப் பாடகர் - சித் ஸ்ரீராம் (பல படங்கள்)
21. சிறந்த பின்னணிப் பாடகி -ஆராதனா சிவகார்த்திகேயன் (கனா)
22. சிறந்த ஒளிப்பதிவாளர் - ஆர்.வேல்ராஜ் (கடைக்குட்டி சிங்கம்/வட சென்னை)
23. சிறந்த ஒலிப்பதிவாளர் - T.உதயகுமார் (வட சென்னை)
24. சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்) - ஷான் லோகேஷ் (ராட்சசன்)
25. சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்) - வினோத் ராஜ்குமார் (சீதக்காதி)
26. சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - சுப்ரீம் சுந்தர் (கோலி கோடா – 2)
27. சிறந்த நடன ஆசிரியர் - பாபா பாஸ்கர் (கடைக்குட்டி சிங்கம்)
28. சிறந்த ஒப்பனைக் கலைஞர் - P.மாரியப்பன் (96/ மோகினி)
29. சிறந்த தையற் கலைஞர் - பிரியங்கா (சீதக்காதி)
30. சிறந்த குழந்தை நட்சத்திரம் - கௌதம் (சீதக்காதி)
31. சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவர் (ஆண்) - ஆதித்யா பாஸ்கர் (96)
32. சிறந்த பின்னணிக் குரல் (பெண்) - எம்.எம்.மானசி (மோகினி)
2019-ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்
1. சிறந்த படம் முதல் பரிசு - அசுரன்
2. சிறந்த படம் இரண்டாம் பரிசு - ஒத்த செருப்பு –சைஸ் 7
3. சிறந்த படம் மூன்றாம் பரிசு - கோமாளி
4. சிறந்த படம் (சிறப்பு பரிசு) - கேடி என்ற கருப்பு துரை
5. பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் (சிறப்பு பரிசு) - பொன் மகள் வந்தாள்
6. சிறந்த நடிகர் - R.பார்த்திபன் (ஒத்த செருப்பு – சைஸ் 7)
7. சிறந்த நடிகை - மஞ்சு வாரியர் (அசுரன்)
8. சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) - கார்த்தி (கைதி)
9. சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) - இந்துஜா (மகாமுனி)
10. சிறந்த வில்லன் நடிகர் - அர்ஜுன் தாஸ் (கைதி)
11. சிறந்த நகைச்சுவை நடிகர் - கருணாகரன் (மான்ஸ்டர்)
12. சிறந்த நகைச்சுவை நடிகை - கோவை சரளா (காஞ்சனா -3)
13. சிறந்த குணச்சித்திர நடிகர் - திரு.பிரகாஷ் ராஜ் (அசுரன்)
14. சிறந்த குணச்சித்திர நடிகை - திருமதி.ஸ்ரீ ரஞ்சினி (ஹவுஸ் ஓனர்)
15. சிறந்த இயக்குனர் - R.பார்த்திபன் (ஒத்த செருப்பு –சைஸ் 7)
16. சிறந்த கதையாசிரியர் - பூமணி (அசுரன்)
17. சிறந்த உரையாடல் ஆசிரியர் - வெற்றிமாறன் (அசுரன்)
18. சிறந்த இசையமைப்பாளர் - தமன் (மகாமுனி)
19. சிறந்த பாடலாசிரியர் -கபிலன் (NGK)
20. சிறந்த பின்னணிப் பாடகர் - ஹரிச்சரண் (பல படங்கள்)
21. சிறந்த பின்னணிப் பாடகி - சைந்தவி (அசுரன்)
22. சிறந்த ஒளிப்பதிவாளர் - தேனி ஈஸ்வர் (பேரன்பு)
23. சிறந்த ஒலிப்பதிவாளர் - தபஸ் நாயக் (ஹவுஸ் ஓனர்)
24. சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்) - ரா.சுதர்சன் (ஒத்த செருப்பு – சைஸ் 7)
25. சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்) - C.S.பாலச்சந்திரன் (தர்ம பிரபு)
26. சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - அன்பறிவ் (கைதி)
27. சிறந்த நடன ஆசிரியர் - ராகவா லாரன்ஸ் (காஞ்சனா -3)
28. சிறந்த ஒப்பனைக் கலைஞர் - கே.கணேசன் (காஞ்சனா -3)
29. சிறந்த தையற் கலைஞர் - முருகன் (தர்மபிரபு)
30. சிறந்த குழந்தை நட்சத்திரம் - நாகவிஷால் (கேடி என்ற கருப்பு துரை)
31. சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவர் (ஆண்) - கதிர் (உற்றான்)
32. சிறந்த பின்னணிக் குரல் (பெண்) - ஐஸ்வர்யா பாஸ்கர் (பல படங்கள்)
2020-ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்
1. சிறந்த படம் முதல் பரிசு - கூழாங்கல்
2. சிறந்த படம் இரண்டாம் பரிசு - சூரரைப் போற்று
3. சிறந்த படம் மூன்றாம் பரிசு - சண்டகாரி
4. சிறந்த படம் (சிறப்பு பரிசு) - தேன்
5. பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் (சிறப்பு பரிசு) - கமலி From நடுக்காவேரி
6. சிறந்த நடிகர் - திரு.சூர்யா (சூரரைப்போற்று)
7. சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி (சூரரைப்போற்று)
8. சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) - தருண் குமார் (தேன்)
9. சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) - அபர்நதி (தேன்)
10. சிறந்த வில்லன் நடிகர் - நந்தா (வானம் கொட்டட்டும்)
11. சிறந்த நகைச்சுவை நடிகர் - ரக்ஷன் (கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்)
12. சிறந்த குணச்சித்திர நடிகர் - கருணாஸ் (சூரரைப்போற்று)
13. சிறந்த குணச்சித்திர நடிகை - வடிவுக்கரசி (ஜன நாயகம் விற்பனைக்கு அல்ல)
14. சிறந்த இயக்குனர் - சுதா கொங்கரா (சூரரைப்போற்று)
15. சிறந்த கதையாசிரியர் - கு.கணேசன் (மனிதம்)
16. சிறந்த உரையாடல் ஆசிரியர் - ராசி தங்கதுரை (தேன்)
17. சிறந்த இசையமைப்பாளர் - ஜி.வி.பிரகாஷ் குமார் (சூரரைப்போற்று)
18. சிறந்த பாடலாசிரியர் - கவிஞர் தாமரை (தாய்நிலம்)
19. சிறந்த பின்னணிப் பாடகர் - அம்ரிஷ் (சண்டகாரி)
20. சிறந்த பின்னணிப் பாடகி - வர்ஷா ரஞ்சித் (தாய்நிலம்)
21. சிறந்த ஒளிப்பதிவாளர் - என்.கே.ஏகாம்பரம் (க/பெ. ரணசிங்கம்)
22. சிறந்த ஒலிப்பதிவாளர் - விஷ்ணு கோவிந்த் (சூரரைப்போற்று)
23. சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்) - லாரன்ஸ் கிஷோர் (தேன்)
24. சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்) - ஐய்யப்பன் (சண்டகாரி)
25. சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - சுப்பராயன் (சேசிங்)
26. சிறந்த நடன ஆசிரியர் - சாண்டி (ராஜவம்சம்)
27. சிறந்த ஒப்பனைக் கலைஞர் - வினிதா (ஃபில்டர் கோல்டு)
28. சிறந்த தையற் கலைஞர் - விஜயபாஸ்கர் (ஃபில்டர் கோல்டு)
29. சிறந்த குழந்தை நட்சத்திரம் - செல்லப்பாண்டி (கூழாங்கல்)
30. சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவர் (ஆண்) - தேவன் முத்துக்குமார் (ஜனநாயகம் விற்பனைக்கு அல்ல)
31. சிறந்த பின்னணிக் குரல் (பெண்) - கீர்த்திகா நெல்சன் (வானம் கொட்டட்டும்)
2021-ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்
1. சிறந்த படம் முதல் பரிசு - ஜெய் பீம்
2. சிறந்த படம் இரண்டாம் பரிசு - கடைசி விவசாயி
3. சிறந்த படம் மூன்றாம் பரிசு - கர்ணன்
4. சிறந்த படம் (சிறப்பு பரிசு) - ரூபாய் 2000
5. பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் (சிறப்பு பரிசு) - நெற்றிக்கண்
6. சிறந்த நடிகர் - திரு.ஆர்யா (சார்பட்டா பரம்பரை)
7. சிறந்த நடிகை - லிஜோ மோல் ஜோஸ் (ஜெய் பீம்)
8. சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) - பசுபதி (சார்பட்டா பரம்பரை)
9. சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) - அம்ருதா சீனிவாசன் (இறுதி பக்கம்)
10. சிறந்த வில்லன் நடிகர் - தமிழ் (ஜெய் பீம்)
11. சிறந்த நகைச்சுவை நடிகர் - யோகி பாபு (டாக்டர்)
12. சிறந்த நகைச்சுவை நடிகை - மதுமிதா (வரிசி)
13. சிறந்த குணச்சித்திர நடிகர் - கே.மணிகண்டன் (ஜெய் பீம்)
14. சிறந்த குணச்சித்திர நடிகை - டாக்டர் ரெய்ச்சல் ரபேக்கா (கடைசி விவசாயி)
15. சிறந்த இயக்குனர் - தா.செ.ஞானவேல் (ஜெய் பீம்)
16. சிறந்த கதையாசிரியர் - எம்.மணிகண்டன் (கடைசி விவசாயி)
17. சிறந்த உரையாடல் ஆசிரியர் - மாரி செல்வராஜ் (கர்ணன்)
18. சிறந்த இசையமைப்பாளர் - ஷான் ரோல்டன் (ஜெய் பீம்)
19. சிறந்த பாடலாசிரியர் - கவிஞர் தாமரை (மாறா)
20. சிறந்த பின்னணிப் பாடகர் - அறிவு (ஜெய் பீம்)
21. சிறந்த பின்னணிப் பாடகி - பவதாரணி (மாமனிதன்)
22. சிறந்த ஒளிப்பதிவாளர் - ரிச்சர்ட் எம் நாதன் (மாநாடு)
23. சிறந்த ஒலிப்பதிவாளர் - ராஜா கிருஷ்ணன் (கடைசி விவசாயி)
24. சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்) - பிரவீன் (மாநாடு)
25. சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்) - T.ராமலிங்கம் (கர்ணன்)
26. சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - மகேஷ் மேத்யூ (கோடியில் ஒருவன்)
27. சிறந்த நடன ஆசிரியர் - ராதிகா (பல்வேறு படங்கள்)
28. சிறந்த ஒப்பனைக் கலைஞர் - திவ்யா (இறுதி பக்கம்)
29. சிறந்த தையற் கலைஞர் - பல்லவி சிங் (சுல்தான்)
30. சிறந்த குழந்தை நட்சத்திரம் - அர்ணவ் விஜய் (ஓ மை டாக்)
31. சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவர் (ஆண்) - அமித் (ரூபாய் 2000)
32. சிறந்த பின்னணிக் குரல் (பெண்) - கீர்த்தி உதயா (மீண்டும்)
2022-ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்
1. சிறந்த படம் முதல் பரிசு - கார்கி
2. சிறந்த படம் இரண்டாம் பரிசு - டாணாக்காரன்
3. சிறந்த படம் மூன்றாம் பரிசு - விட்னஸ்
4. சிறந்த படம் (சிறப்பு பரிசு) - இரவின் நிழல்
5. பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் (சிறப்பு பரிசு) - அவள் அப்படித்தான் -2
6. சிறந்த நடிகர் - விக்ரம் பிரபு (டாணாக்காரன்)
7. சிறந்த நடிகை - சாய் பல்லவி (கார்கி)
8. சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) - அப்புக்குட்டி (வாழ்க விவசாயி)
9. சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) - துஷாரா விஜயன் ( நட்சத்திரம் நகர்கிறது)
10. சிறந்த வில்லன் நடிகர் - பிரகாஷ் ராஜ் (விருமன்)
11. சிறந்த நகைச்சுவை நடிகர் - ரோபோ சங்கர் (மறைவு) (இரவின் நிழல்)
12. சிறந்த நகைச்சுவை நடிகை - இந்திரஜா சங்கர் (விருமன்)
13. சிறந்த குணச்சித்திர நடிகர் - போஸ் வெங்கட் (டாணாக்காரன்)
14. சிறந்த குணச்சித்திர நடிகை - வசுந்தரா (வாழ்க விவசாயி)
15. சிறந்த இயக்குனர் - கௌதம் ராமச்சந்திரன் (கார்கி)
16. சிறந்த கதையாசிரியர் - பிரதீப் ரங்கநாதன் (லவ் டுடே)
17. சிறந்த உரையாடல் ஆசிரியர் - தமிழரசன் பச்சமுத்து (நெஞ்சுக்கு நீதி)
18. சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரகுமான் (பொன்னியின் செல்வன்-1)
19. சிறந்த பாடலாசிரியர் - இளங்கோ கிருஷ்ணன் (பொன்னியின் செல்வன் -1)
20. சிறந்த பின்னணிப் பாடகர் - ஹரிச்சரண் (இரவின் நிழல்)
21. சிறந்த பின்னணிப் பாடகி - கதீஜா ரஹ்மான் (இரவின் நிழல்)
22. சிறந்த ஒளிப்பதிவாளர் - ஆ.ஆர்தர் வில்சன் (இரவின் நிழல்)
23. சிறந்த ஒலிப்பதிவாளர் - ஆனந்த் கிருஷ்ண மூர்த்தி
(பொன்னியின் செல்வன்-1)
24. சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்) - சுரேஷ் அர்ஸ் (உலகம்மை)
25. சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்) - தோட்டா தரணி (பொன்னியின் செல்வன்-1)
26. சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - அனல் அரசு (விருமன்)
27. சிறந்த நடன ஆசிரியர் - பிருந்தா (பொன்னியின் செல்வன் -1)
28. சிறந்த ஒப்பனைக் கலைஞர் - விக்ரம் கெய்க்வாட் (பொன்னியின் செல்வன் -1)
29. சிறந்த தையற் கலைஞர் - ஏகா லகானி (பொன்னியின் செல்வன் -1)
30. சிறந்த குழந்தை நட்சத்திரம் - பேபி டாவியா (அக்கா குருவி)
31. சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவர் (ஆண்) - விமல் (அமைச்சர்)
32. சிறந்த பின்னணிக் குரல் (பெண்) - மகாலட்சுமி (டைரி)
2015-2016-ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள்
1. சிறந்த இயக்குநர் - P.ராம் குமார் (ஷீப்ஸ் வேனிஸ்டு இன் தி ஹேர்டு)
2. சிறந்த ஒளிப்பதிவாளர் - R.உதயகுமார் (ஃபேட் ஆஃப் கலர்ஸ்)
3. சிறந்த ஒலிப்பதிவாளர் - ராகவ் ரமேஷ் (தி ஸ்வார்ம்)
4. சிறந்த படத்தொகுப்பாளர் -A.கவின் ராஜா (தி லாஸ்ட் லீஃப்)
5. சிறந்த படம் பதனிடுபவர் - அஜித் வேதி பாஸ்கரன் (தி குல்மாஸ் ஸ்டோரி)
2016-2017-ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள்
1. சிறந்த இயக்குனர் - S.கண்ணன் (நீயும் பொம்மை நானும் பொம்மை)
2. சிறந்த ஒளிப்பதிவாளர் - C.ராம்குமார் (அரமகள்)
3. சிறந்த ஒலிப்பதிவாளர் - ராஜு (மனிதி)
4. சிறந்த படத்தொகுப்பாளர் - J.ஹேமந்த்குமார் (இமயா)
5. சிறந்த படம்பதனிடுபவர் - அஸ்வினி மஹாலட்சுமி (கோடு)
2017-2018-ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள்
1. சிறந்த இயக்குனர் - A.K.கிராந்தி (அதர்மா)
2. சிறந்த ஒளிப்பதிவாளர் - பிரவீன் (நிருலா)
3. சிறந்த ஒலிப்பதிவாளர் - அவிக்கல் ஸ்ரீவத்சவா (மழையுதிர்க்காலம்)
4. சிறந்த படத்தொகுப்பாளர் - அஸ்வின் நாயர் (இறைவனை தந்த இறைவியே)
5. சிறந்த படம்பதனிடுபவர் - V.விஷ்ணு (மழையுதிர்க்காலம்)
2019-2020-ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள்
1. சிறந்த இயக்குனர் - எஸ்.வருண் சுப்பையா (கரை)
2. சிறந்த ஒளிப்பதிவாளர் - பிரகதீஷ் ஜனனு (ஏ மெசேஜ் ஃப்ரம் த பியூச்சர்)
3. சிறந்த ஒலிப்பதிவாளர் - எஸ்.ஸ்ரீகாந்த் (ரூஜ்)
4. சிறந்த படத்தொகுப்பாளர் - சஹாஹிப் அகமது ஷாகிர் (ஜாகிர்ஸ் ரெசிபி)
5. சிறந்த படம் பதனிடுபவர் - எஸ்.ரகு (ஆயில்)
2020-2021-ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள்
1. சிறந்த இயக்குனர் - எஸ்.கருணாகரன் (ஒயின்ஷாப்)
2. சிறந்த ஒளிப்பதிவாளர் - எம்.சி.தருண் குமார் (அழகி)
3. சிறந்த ஒலிப்பதிவாளர் - வி.அஜித்குமார் (ஆடுபுலி ஆட்டம்)
4. சிறந்த படத்தொகுப்பாளர் - எஸ்.ரோகித் குமார் (மாயா)
5. சிறந்த படம் பதனிடுபவர் - ராமசுப்ரமணி (சிறை)
2021-2022-ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள்
1. சிறந்த இயக்குநர் - ரா.கிரிதரன் (மெட்ராஸ்)
2. சிறந்த ஒளிப்பதிவாளர் - அ.நித்தின் (மலர்)
3. சிறந்த ஒலிப்பதிவாளர் - V.A.செபாஸ்டியன் (ஐசா பாரடைஸ்)
4. சிறந்த படத்தொகுப்பாளர் - பி.தருண் (அயல்)
5. சிறந்த படம் பதனிடுபவர் - வெ.ஸ்ரீதர் (அண்டெட் கார்ப்செஸ்)
2014-ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்
1. சிறந்த நெடுந்தொடர் – முதல் பரிசு - அழகி
2. சிறந்த நெடுந்தொடர் – இரண்டாம் பரிசு - வள்ளி
3.ஆண்டின் சிறந்த சாதனையாளர் - நளினி
4.ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் - எஸ்.ராஜசேகரன்
5. சிறந்த கதாநாயகன் - எம்.ராஜ்குமார் (வள்ளி)
6. சிறந்த கதாநாயகி - ஆர்.ராதிகா சரத்குமார்
(வாணி ராணி) (ராணி கதாபாத்திரம்)
7. சிறந்த குணச்சித்திர நடிகர் - வின்சென்ட்ராய் (அழகி)
8. சிறந்த குணச்சித்திர நடிகை - சமிதா (பிள்ளை நிலா)
9. சிறந்த வில்லன் நடிகர் - OAK சுந்தர் (பிள்ளை நிலா)
10. சிறந்த வில்லி நடிகை - சங்கராபரணம் ராஜலட்சுமி (பிள்ளை நிலா)
11. சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஆர்.நேகா (வாணி ராணி / பிள்ளை நிலா)
12. சிறந்த இயக்குநர் - என்.சுந்தரேஷ்வரன் (வள்ளி)
13. சிறந்த கதையாசிரியர் - கே.சண்முகம் (வள்ளி)
14. சிறந்த திரைக்கதையாசிரியர் - சி.யூ.முத்துச்செல்வம் (தென்றல்)
15. சிறந்த உரையாடல் ஆசிரியர் - வசு பாரதி (தெய்வமகள்)
16. சிறந்த ஒளிப்பதிவாளர் - சாய் பிரபாகரா (வைராக்கியம்)
17. சிறந்த படத் தொகுப்பாளர் - எஸ்.நீல்ஸ்டின் (தெய்வமகள்)
18. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் - ரமணி பரத்வாஜ் (வைராக்கியம் )
19. சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்) - டி.ரவிசங்கர் (பிள்ளை நிலா, இளவரசி)
20. சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (பெண்) - ஜி.ஜி (தென்றல்)
2015-ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்
1. சிறந்த நெடுந்தொடர் – முதல் பரிசு - ரோமாபுரி பாண்டியன்
2. சிறந்த நெடுந்தொடர் – இரண்டாம் பரிசு - அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்
3. ஆண்டின் சிறந்த சாதனையாளர் - வெண்ணிற ஆடை நிர்மலா
4. ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் - எஸ்.வி.சேகர்
5. சிறந்த கதாநாயகன் - ஆர்.பாண்டியராஜன் (என் தங்கை)
6. சிறந்த கதாநாயகி - வாணி போஜன் (தெய்வமகள்)
7. சிறந்த குணச்சித்திர நடிகர் - டி.வி.வரதராஜன் (தாமரை)
8. சிறந்த குணச்சித்திர நடிகை - கனகா (என் தங்கை)
9. சிறந்த வில்லன் நடிகர் - பாலா சிங் (ஆதிரா)
10. சிறந்த வில்லி நடிகை - R.நாகலட்சுமி (அழகி)
11. சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஷாஹில் (ஆதிரா)
12. சிறந்த இயக்குநர் - எஸ்.என்.சக்திவேல் (சின்ன பாப்பா பெரிய பாப்பா)
13. சிறந்த கதையாசிரியர் கலைஞர் மு.கருணாநிதி - (ரோமாபுரி பாண்டியன்)
14. சிறந்த திரைக்கதையாசிரியர் - கலைஞர் மு.கருணாநிதி - (ரோமாபுரி பாண்டியன்)
15. சிறந்த உரையாடல் ஆசிரியர் - கலைஞர் மு.கருணாநிதி
(ரோமாபுரி பாண்டியன்)
16. சிறந்த ஒளிப்பதிவாளர் - K.விக்ரமன் (தாமரை)
17. சிறந்த படத் தொகுப்பாளர் - உமா சங்கர் பாபு (என் தங்கை)
18. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் - S.P.பூபதி (என் தங்கை)
19. சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்) - சத்யராஜ் (அழகி)
20. சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (பெண்) - கல்யாணி (கேளடி கண்மணி)
2016-ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்
1 . சிறந்த நெடுந்தொடர் – முதல் பரிசு ராமானுஜர்
2. சிறந்த நெடுந்தொடர் – இரண்டாம் பரிசு - கல்யாண பரிசு
3. ஆண்டின் சிறந்த சாதனையாளர் - T.R.லதா
4. ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் - அழகன் தமிழ்மணி
5. சிறந்த கதாநாயகன் - கௌசிக் (ராமானுஜர்)
6. சிறந்த கதாநாயகி - நீலிமா ராணி (தாமரை)
7. சிறந்த குணச்சித்திர நடிகர் - S.V.S.குமார் (தெய்வமகள்)
8. சிறந்த குணச்சித்திர நடிகை - பாலாம்பிகா (பிரியமானவள்)
9. சிறந்த வில்லன் நடிகர் - அப்ஸர் (தாமரை)
10. சிறந்த வில்லி நடிகை - உஷா எலிசபெத் சுராஜ் (பிரியமானவள்)
11. சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஸ்ரீஜா (தெய்வமகள்)
12. சிறந்த இயக்குநர் - தனுஷ் (ராமானுஜர்)
13. சிறந்த கதையாசிரியர் - கலைஞர் மு.கருணாநிதி (ராமானுஜர்)
14. சிறந்த திரைக்கதையாசிரியர் - கலைஞர் மு.கருணாநிதி (ராமானுஜர்)
15. சிறந்த உரையாடல் ஆசிரியர் - கலைஞர் மு.கருணாநிதி (ராமானுஜர்)
16. சிறந்த ஒளிப்பதிவாளர் - சீனுவாசன் (பிரியமானவள்)
17. சிறந்த படத் தொகுப்பாளர் - M.S.தியாகராஜன் (கல்யாண பரிசு)
18. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் - ஹரி (கல்யாண பரிசு)
19. சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்) - அச்சமில்லை கோபி (பிரியமானவள்)
20. சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (பெண்) - சக்தி (பிரியமானவள்)
2017-ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்
1.
சிறந்த நெடுந்தொடர் – முதல் பரிசு - நந்தினி
2. சிறந்த நெடுந்தொடர் – இரண்டாம் பரிசு - தாய் வீடு
3. ஆண்டின் சிறந்த சாதனையாளர் - கே.எஸ்.ஜி.வெங்கடேஷ்
4. ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் - P.R.வரலட்சுமி
5. சிறந்த கதாநாயகன் - கிருஷ்ணா (தெய்வமகள்)
6. சிறந்த கதாநாயகி - சங்கவி (தாய் வீடு)
7. சிறந்த குணச்சித்திர நடிகர் - விச்சுவிசுவநாத் (எ) C.விஸ்வநாதன் (நந்தினி)
8. சிறந்த குணச்சித்திர நடிகை - நிரோஷா (தாமரை)
9. சிறந்த வில்லன் நடிகர் - விஜயகுமார் (நந்தினி)
10. சிறந்த வில்லி நடிகை - சாய்லதா (தாமரை)
11. சிறந்த குழந்தை நட்சத்திரம் - நரேன் பொன்னுசாமி (தாய் வீடு)
12. சிறந்த இயக்குநர் - R.ராஜ் கபூர் (நந்தினி)
13. சிறந்த கதையாசிரியர் - கலைஞர் மு.கருணாநிதி (தென் பாண்டி சிங்கம்)
14. சிறந்த திரைக்கதையாசிரியர் - இந்திரா சௌந்தர்ராஜன் (கங்கா)
15. சிறந்த உரையாடல் ஆசிரியர் - C.பாலமுருகன் (தாய் வீடு)
16. சிறந்த ஒளிப்பதிவாளர் - S.பார்த்திபன் சுப்ரமணியன் (தாய்வீடு)
17. சிறந்த படத் தொகுப்பாளர் - சந்துரு (தெய்வமகள்)
18. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் - ஜே.வி. (யாரடி நீ மோகினி)
19. சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்) - பிரதீப் (தாய் வீடு)
20. சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (பெண்) - மேகலா (தாய் வீடு)
2018-ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்
1. சிறந்த நெடுந்தொடர் – முதல் பரிசு - பூவே பூச்சூடவா
2. சிறந்த நெடுந்தொடர் – இரண்டாம் பரிசு - சுப்பிரமணியபுரம்
3. ஆண்டின் சிறந்த சாதனையாளர் - அழகு
4. ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் - கே.ஆர்.விஜயா
5. சிறந்த கதாநாயகன் தலைவாசல் விஜய் (அழகு)
6. சிறந்த கதாநாயகி - ரேவதி (அழகு)
7. சிறந்த குணச்சித்திர நடிகர் - கதிர் (செம்பருத்தி)
8. சிறந்த குணச்சித்திர நடிகை - கௌசல்யா செந்தாமரை (பூவே பூச்சூடவா)
9. சிறந்த வில்லன் நடிகர் - பரத் (யாரடி நீ மோகினி)
10. சிறந்த வில்லி நடிகை - யுவராணி (பூவே பூச்சூடவா)
11. சிறந்த குழந்தை நட்சத்திரம் - அதித்ரி குருவாயூரப்பன் (நந்தினி)
12. சிறந்த இயக்குநர் - நக்கீரன் (மின்னலே)
13. சிறந்த கதையாசிரியர் - தமிழரசன் (செம்பருத்தி)
14. சிறந்த திரைக்கதையாசிரியர் - குமரேசன் (கல்யாணபரிசு)
15. சிறந்த உரையாடல் ஆசிரியர் - பத்ரி (எ) பத்ரிநாராயணன் (நந்தினி)
16. சிறந்த ஒளிப்பதிவாளர் - U.K.செந்தில் குமார் (நந்தினி)
17. சிறந்த படத் தொகுப்பாளர் - S.அருள் (பூவே பூச்சூடவா)
18. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் - M.ரித்தீஷ் (சுப்பிரமணியபுரம்)
19. சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்) - பெருமாள் (தாமரை)
20. சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (பெண்) - D.சுமதி (சுப்பிரமணியபுரம்)
2019-ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்
1. சிறந்த நெடுந்தொடர் – முதல் பரிசு - செம்பருத்தி
2. சிறந்த நெடுந்தொடர் – இரண்டாம் பரிசு - பாண்டவர் இல்லம்
3. ஆண்டின் சிறந்த சாதனையாளர் - ராஜேந்திர பிரசாத்
4. ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் - காரைக்குடி நாராயணன்
5. சிறந்த கதாநாயகன் - வ.சஞ்சிவ் (கண்மணி)
6. சிறந்த கதாநாயகி - ரேஷ்மா (பூவே பூச்சூடவா)
7. சிறந்த குணச்சித்திர நடிகர் - செந்தில் நாதன் (நாயகி)
8. சிறந்த குணச்சித்திர நடிகை - பூர்ணிமா பாக்யராஜ் (கண்மணி)
9. சிறந்த வில்லன் நடிகர் - பிரகாஷ்ராஜன் (மின்னலே)
10. சிறந்த வில்லி நடிகை - சுதா சந்திரன் (லட்சுமி ஸ்டோர்ஸ்)
11. சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஆரண்யவேந்தன் (கண்மணி)
12. சிறந்த இயக்குநர் - சதாசிவம் பெருமாள் (கண்மணி)
13. சிறந்த கதையாசிரியர் - அசோகன் (யாரடி நீ மோகினி)
14. சிறந்த திரைக்கதையாசிரியர் - ராஜ் பிரபு (லட்சுமி ஸ்டோர்ஸ்)
15. சிறந்த உரையாடல் ஆசிரியர் - கார்த்திக் (இரட்டை ரோஜா )
16. சிறந்த ஒளிப்பதிவாளர் - மா.போ.ஆனந்த் (யாரடி நீ மோகினி)
17. சிறந்த படத் தொகுப்பாளர் - N.B.ஸ்ரீ காந்த் (லட்சுமி ஸ்டோர்ஸ்)
18. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் - C.S.ஜெய்கிஷன் (பாண்டவர் இல்லம்)
19. சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்) - வினோத் (மின்னலே)
20. சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (பெண்) - ஜெயகீதா (செம்பருத்தி)
2020-ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்
1. சிறந்த நெடுந்தொடர் – முதல் பரிசு - ராசாத்தி
2. சிறந்த நெடுந்தொடர் – இரண்டாம் பரிசு - பாரதி கண்ணம்மா
3. ஆண்டின் சிறந்த சாதனையாளர் - சுமதி ஸ்ரீ
4. ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் - கோபி பீம்சிங்
5. சிறந்த கதாநாயகன் - ஜெய் ஆகாஷ் (நீ தானே என் பொன் வசந்தம்)
6. சிறந்த கதாநாயகி - சபானா ஷாஜகான் (செம்பருத்தி)
7. சிறந்த குணச்சித்திர நடிகர் - சாய்ராம் (நீ தானே என் பொன் வசந்தம்)
8. சிறந்த குணச்சித்திர நடிகை - சோனியா (நீ தானே என் பொன் வசந்தம்)
9. சிறந்த வில்லன் நடிகர் - வெற்றி (நீ தானே என் பொன் வசந்தம்)
10. சிறந்த வில்லி நடிகை - சில்பா மேரி தெரேசா (சித்தி-2)
11. சிறந்த குழந்தை நட்சத்திரம் - மாஸ்டர் சஞ்சய் (செம்பருத்தி)
12. சிறந்த இயக்குநர் - ரத்தினம் வாசுதேவன் (பூவே பூச்சூடவா)
13. சிறந்த கதையாசிரியர் - D.அழகு சந்திரன் (பாரதி கண்ணம்மா)
14. சிறந்த திரைக்கதையாசிரியர் - சற்குணம் புங்கராஜ் (பூவே பூச்சூடவா)
15. சிறந்த உரையாடல் ஆசிரியர் - பா.ராகவன் (சித்தி-2)
16. சிறந்த ஒளிப்பதிவாளர் - R.சரவணன் (பாரதி கண்ணம்மா)
17. சிறந்த படத் தொகுப்பாளர் - முரளி கிருஷ்ணன் (பாண்டவர் இல்லம்)
18. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் - கிளமண்ட் (சித்தி-2 மற்றும் ராசாத்தி)
19. சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்) - விக்னேஷ் (பூவே பூச்சூடவா)
20. சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (பெண்) - ஸ்ரீதேவி (பூவே பூச்சூடவா)
2021-ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்
1. சிறந்த நெடுந்தொடர் –முதல் பரிசு - சுந்தரி
2. சிறந்த நெடுந்தொடர் – இரண்டாம் பரிசு - ஒரு ஊர்ல இரண்டு ராஜகுமாரி
3. ஆண்டின் சிறந்த சாதனையாளர் - சோழா பொன்னுரங்கம்
4. ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் - லதா சேதுபதி
5. சிறந்த கதாநாயகன் - கார்த்திக் ராஜ் (செம்பருத்தி)
6. சிறந்த கதாநாயகி - கெபரல்லா செல்லஸ் (சுந்தரி)
7. சிறந்த குணச்சித்திர நடிகர் - சிவாஜி மனோகர் (சித்தி-2)
8. சிறந்த குணச்சித்திர நடிகை - உமா பத்மநாபன் (சித்தி-2)
9. சிறந்த வில்லன் நடிகர் - பொள்ளாச்சி பாபு (எ) செந்தில்குமார் (தாலாட்டு)
10. சிறந்த வில்லி நடிகை - கே.தாரணி (தாலாட்டு)
11. சிறந்த குழந்தை நட்சத்திரம் - எஸ்.லிதன்யா (சுந்தரி)
12. சிறந்த இயக்குநர் - பி.அழகர் சாமி (சுந்தரி)
13. சிறந்த கதையாசிரியர் - உதய சங்கர் (வானத்தைப் போல)
14. சிறந்த திரைக்கதையாசிரியர் - ஆர்.விஜயலட்சுமி (சுந்தரி)
15. சிறந்த உரையாடல் ஆசிரியர் - கார்த்திக் யுவராஜ் (அபியும் நானும்/ பூவே உனக்காக)
16. சிறந்த ஒளிப்பதிவாளர் - சலீம் பிலால் (சித்திரம் பேசுதடி)
17. சிறந்த படத் தொகுப்பாளர் - கேசவன் (சுந்தரி)
18. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் - பி.ஜி.ராகேஷ் (ராஜா ராணி -2)
19. சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்) - மகா ஆதித்யா (பூவே உனக்காக)
20. சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (பெண்) - லக்சனா (பூவே உனக்காக)
2022-ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருது பெறும் விருதாளர்கள் பட்டியல்
1. சிறந்த நெடுந்தொடர் – முதல் பரிசு - எதிர்நீச்சல்
2. சிறந்த நெடுந்தொடர் – இரண்டாம் பரிசு - கண்ணெதிரே தோன்றினாள்
3. ஆண்டின் சிறந்த சாதனையாளர் - சீதா
4. ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் - பெருமாள் நெர்
5. சிறந்த கதாநாயகன் - சஞ்சீவ் (கயல்)
6. சிறந்த கதாநாயகி - சைத்ரா (கயல்)
7. சிறந்த குணச்சித்திர நடிகர் - ராஜேஷ் (கார்த்திகை தீபம்)
8. சிறந்த குணச்சித்திர நடிகை - கனிகா (எதிர்நீச்சல்)
9. சிறந்த வில்லன் நடிகர் - ஜி.மாரிமுத்து (எதிர்நீச்சல்)
10. சிறந்த வில்லி நடிகை - கவிதா (கண்ணெதிரே தோன்றினாள்)
11. சிறந்த குழந்தை நட்சத்திரம் - R.M. மேக்னா (மாரி)
12. சிறந்த இயக்குநர் - ஆர்.கார்த்திகேயன் (கண்ணெதிரே தோன்றினாள்)
13. சிறந்த கதையாசிரியர் - கவிதா பாரதி (சித்திரம் பேசுதடி)
14. சிறந்த திரைக்கதையாசிரியர் - வே.பத்மாவதி (கண்ணெதிரே தோன்றினாள்)
15. சிறந்த உரையாடல் ஆசிரியர் - A.ஸ்ரீவித்யா (எதிர்நீச்சல்)
16. சிறந்த ஒளிப்பதிவாளர் - கேசவன் (மாரி)
17. சிறந்த படத் தொகுப்பாளர் - D.பிரபாகரன் (கண்ணெதிரே தோன்றினாள்)
18. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் - R.ஜோ சுகந்த் (திருமகள்)
19. சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்) - மகாராஜா (பிரியமான தோழி)
20. சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (பெண்) - R.ஐஸ்வர்யா (பொன்னி C/O ராணி, கார்த்திகை தீபம்)
Also Read
-
அறிவுசார் நகரத்தை நோக்கி தமிழ்நாடு - முன்னணி கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
ரூ.913 கோடி முதலீடு... 13,080 பேருக்கு வேலைவாய்ப்பு : சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் புதிய ஒப்பந்தங்கள்!
-
அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகை : 10 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.822.70 கோடி.. சென்னையில் சர்வதேச தரத்தில் உருவாகும் மெகா பேருந்து நிலையம் – என்னென்ன வசதிகள் உள்ளது?
-
கைகொடுக்காத துபேவின் அதிரடி ஆட்டம்... தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த நியூசிலாந்து!