Tamilnadu
“இந்தியாவிற்கு நம்பிக்கை கொடுத்த சென்னை மாநகராட்சி” : தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டு!
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தினமும் சேகரிக்கப்பட்டு வரும் குப்பைகள் பல ஆண்டுகளாக பெருங்குடி, கொடுங்கையூர் பகுதியில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இதை, உணர்ந்த சென்னை மாநகராட்சி பயோ மைனிங் முறையில் குப்பைகளை தரம் பிரித்து நிலத்தை மீட்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கொடுங்கையூரில் ரூ.641 கோடியில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது, 50 ஆண்டுகாலமாகச் சேர்ந்திருந்த 1.7 மில்லியன் கன மீட்டர் (சுமார் 26.35 லட்சம் மெட்ரிக் டன்) பழைய கழிவுகள் பயோ-மைனிங் தொழில்நுட்பம் மூலம் வெற்றிகரமாகச் சுத்திகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 225 ஏக்கர் பரப்பளவிலான கிடங்கில் இதுவரை சுமார் 94 முதல் 96 ஏக்கர் நிலம் முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட நிலத்தில் பயோ-சிஎன்ஜி (Bio-CNG) பிளாண்ட், உரத் தயாரிப்பு மையங்கள் மற்றும் பசுமைப் பூங்காக்கள் அமைக்கச் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சென்னை மாநகராட்சியின் பயோ-மைனிங் முறைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”50 ஆண்டுகளாக மலைபோல் குவிந்து கிடந்த பெருங்குடி குப்பைக் கிடங்கை, பயோ-மைனிங் (Bio-mining) தொழில்நுட்பம் மூலம் சென்னை மாநகராட்சி வெற்றிகரமாகச் சுத்தப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்தக் கழிவுப் பிரச்சினைக்கும் தீர்வு உண்டு என்ற நம்பிக்கை பிறக்கிறது.” என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”50 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகளைப் பயோ-மைனிங் (Bio-mining) செயல்முறை மூலம் சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளது. மீதமுள்ள கழிவுகளை 2027-க்குள் அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அறிவியல் ரீதியான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த திடக்கழிவு மேலாண்மை தீர்வுகளை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
நேர்மையுடன் செயல்பட்ட தூய்மைப் பணியாளர் : நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அயலகத் தமிழர்களுக்கு விருதுகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
“இந்தித் திணிப்பைத் தமிழ்நாடு என்றைக்கும் எதிர்க்கும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!
-
இந்தி தான் தேசிய மொழியா? - நடு மைதானத்தில் நடந்த காரசார விவாதம்... வர்ணனையாளர்களால் வெடித்த சர்ச்சை!
-
இளம் பெண் அடுத்து படுகொலை : பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேசத்தில் கொடூரம்!