Tamilnadu
‘பராசக்தி’ திரைப்படம் - பேரறிஞர் அண்ணா வசனம் நீக்கம் : வாய் திறக்காத அ.தி.மு.க.!
இறுதிச் சுற்று, சூரரைப் போற்று போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய சுதா கொங்கராவின் அடுத்த படைப்பு பராசக்தி. இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
”இந்தி” திணிப்பு இப்படத்தின் மைய கருத்தாக இருக்கும் என்பதை டிரெய்லர் உறுதி செய்துள்ளது. தீ பரவட்டம், என் தம்பி, போன்ற வனங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று படம் இன்னும் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் பராசக்தி திரைப்படத்தில் 25 இடங்களில் சென்சார் கட் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய தணிக்கை குழு சான்றிதழ் வெளியாகியுள்ளது. மேலும் தணிக்கை குழுவின் அழுத்தம் காரணமாக தீ பரவட்டும் என்ற வார்த்தைக்கு பதிலாக நீதி பரவட்டும் என்று வசனம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதோடு இந்தி திணிப்பு தொடர்பான வனங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம், பேரறிஞர் அண்ணா தலையில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்பு போராட்டத்தை தற்போதைய தலைமுறைக்கு சொல்லும் வகையிலும், தமிழ்நாட்டு மக்களின் தற்போதைய உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதால் ஒன்றிய பா.ஜ.க அரசு தணிக்கை குழுவை கொண்டு அதை தடுக்க பார்க்கிறது.
இதையடுத்து, தணிக்கை குழுவின் நடவடிக்கைக்கு பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ”CBI, ED, IT வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பா.ஜ.க அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது” என கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
ஆனால், ஆனால், அண்ணாவின் பெயரை கட்சியின் அடையாளமாக வைத்துள்ள அ.தி.மு.க, இந்த விவகாரம் குறித்து இதுவரை எந்தவிதமான கண்டனத்தையும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மௌனம், அண்ணாவின் சிந்தனைகளில் இருந்து அ.தி.மு.க எவ்வளவு தூரம் விலகி நிற்கிறது என்பதற்கான சாட்சியாகவே இது பார்க்கப்படுகிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்க்க கொஞ்சம் கூட துணிச்சல் எங்களுக்கு இல்லை என்பதை மீண்டும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி நிரூபித்து வருகிறார்.
Also Read
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?
-
தேசிய மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு : பிரதமர் மோடிக்கு முக்கிய ஆலோசனை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
“தணிக்கை வாரியத்தை கூட்டணியில் சேர்த்து கொண்ட பா.ஜ.க” : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
“தி.மு.க-காரன் சிங்கில் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர்!