Tamilnadu
”எங்கள் வெற்றியைத் தடுப்பதற்கு எந்த சக்தியாலும் முடியாது” : அமைச்சர் ரகுபதி பேட்டி!
"தேர்தல் நெருங்க நெருங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லா பந்துகளையும் சிக்ஸராக அடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியும் அமித் ஷாவும் 6 பந்துகள் போட வேண்டிய இடத்தில் 8, 10 என்று நோபால் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். எங்கள் வெற்றியைத் தடுப்பதற்கு எந்த சக்தியாலும் முடியாது." என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி," திருப்பரங்குன்றம் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்.
இன்று திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை பிரச்சனையாக்குகிறார்கள், நாளை திருவண்ணாமலையில் தீபம் ஏற்றுவதையும் பிரச்சனையாக்குவார்கள். தீபம் எங்கு ஏற்றுவது என்பது இந்து சமய அறநிலை துறையின் முடிவுக்கு உட்பட்டது.
ஊழைப் பற்றி அமித்ஷா பேசலாமா?, ரூ.3200 கோடி தேர்தல் நிதி எப்படி பா.ஜ.க-விற்கு வந்தது என்று அமித்ஷாவால் சொல்ல முடியுமா? தேர்தல் நெருங்க நெருங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லா பந்துகளையும் சிக்ஸராக அடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியும் அமித் ஷாவும் 6 பந்துகள் போட வேண்டிய இடத்தில் 8, 10 என்று நோபால் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். எங்கள் வெற்றியைத் தடுப்பதற்கு எந்த சக்தியாலும் முடியாது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஜனவரிக்குள் 1 கிலோ அரிசி விலை ரூ.120-ஆக உயரும் அபாயம்! - த.வெ.க.வின் தோல்வியால் தவிக்கும் மக்கள்!
-
த.வெ.க எம்.எல்.ஏ. சரவணன் மீது பணமோசடி புகார் : “இதுதான் தூய ஆட்சியின் லட்சணமா?” - கனிமொழி எம்.பி. சாடல்!
-
“பாலுக்கு காவல், பூனைக்கு தோழனா?” : விஜய்யின் Double Action-க்கு தயாநிதி மாறன் கண்டனம்!
-
தேசிய விருதுகள் முதல் பத்ம ஸ்ரீ விருதுகள் வரை.. காலா பட நடிகர் நானா படேகர் காலமானார்!
-
குடிநீர் தொட்டியில் மலம்.. மூடி மறைத்த அரசுப் பள்ளி நிர்வாகம்.. 2 நாட்களாக அவலம்!