Tamilnadu
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?
செல்லப்பிராணி உரிமையாளர்கள் பொறுப்புணர்வுடன் பிறருக்கு இடையூறு ஏற்படாத வகையில் செல்லப்பிராணிகளை வளர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீப காலமாக வளர்ப்பு நாய்கள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள், புகார்கள் அதிகமாக பெறப்பட்டு வருகின்றன. இவற்றில் பெருமளவு சம்பவங்களில் பிட்புல் (PIT BULL) மற்றும் ராட்வீலர் (ROTTWEILLER) இன நாய்களின் ஆக்ரோஷமான (Ferocious and குணநலன்களால் அதிகளவு பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொது மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் ஆக்ரோஷமான தன்மை கொண்ட வளர்ப்பு நாய் இனங்களான பிட்புல் (PIT BULL) மற்றும் ராட் (ROTTWEILLER) நாய் இனங்களை சென்னை மாநகராட்சி எல்லைக்குட்ட பகுதிகளில் வளர்ப்பதற்கு தடை விதிக்க மன்ற கூடத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி நாளைமுதல், பிட்புல் (PIT BULL) மற்றும் ராட்வீலர் (ROTTWEILLER இன நாய்களை செல்லப்பிராணிகளின் உரிமம் பெற விண்ணப்பிப்பதற்கு தடை விதிக்கவும் மற்றும் உரிமத்தை புதுப்பிப்பதற்கு (Renewal of Pet License) தடைவிதிக்கப்பட உள்ளது.
ஏற்கனவே உரிமம் (Pet License) பெற்ற பிட்புல் (PIT BULL) மற்றும் ராட்வீலர் (ROTTWEILLER) இன வளர்ப்பு நாய்களை வீட்டிற்கு வெளியே அழைத்து செல்லும் போது அவற்றிற்கு கழுத்துப்பட்டை (Leashing) மற்றும் வாய்க்கவசம் (Muzzling) அணிவிப்பதை கட்டாயம் ஆக்கவும், இதனை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு 5,000 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும்.
உரிமமின்றி சட்ட விரோதமாக பிட்புல் (PIT BULL) மற்றும் ராட்வீல VEILLER) நாய் இனங்களை புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு ரூ.1,00,000 அபராதம் விதிக்கவும் மன்றக்கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
Also Read
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
VBGRAMG சட்டம் ஒழிக! : ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
-
“பாசிஸ்ட்டுகளின் வஞ்சக சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு : பா.ஜ.கவின் ஆணவத்துக்கு அடி கொடுத்த நீதிமன்றம் - முரசொலி!
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!