Tamilnadu
”திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பார்க்கிறது பா.ஜ.க” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி இரு அவைகளிலும் திமுக நோட்டீஸ் வழங்கியது. ஆனால் இரு அவைகளிலும் விதிக்க ஒன்றிய அரசு அனுமதி அளிக்க மறுத்தது.
மாநிலங்களவையில் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதேபோல் மக்களவையில் டி.ஆர்.பாலு திருப்பரங்குன்றம் விவகாரம் குறிது பேசினார்.
அப்போது,"சில விஷமிகள் திருப்பரங்குன்றத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை கிளப்ப வேண்டும் என்பதற்காகவே கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கை தொடுத்து, அவர்களுக்கு ஏதுவான தீர்ப்பை, தான் ஆர்எஸ்எஸ்ஸை சார்ந்தவன் என அறிவித்துக் கொண்ட நீதிபதியிடமிருந்து பெற்றிருக்கிறார்கள்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தனி நீதிபதி அளித்த தீர்ப்பால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தொன்மையான வழக்கத்தை அப்பட்டமாக மீறும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள சுயநல சக்திகளால் வகுப்புவாத மோதல் தூண்டப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரம் மிகுந்த கவலை அளிக்கிறது." என தெரித்துள்ளார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற தி.மு.க குழு தலைவர் கனிமொழி,”திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பார்க்கிறார்கள். இப்பிரச்சனை குறித்து பேசும் போது, நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர் டி.ஆர்.பாலு அவர்களை பார்த்து, ”நீங்கள் இப்படி பேசுவது உங்களுக்கும் நல்லதல்ல, உங்கள் கட்சிக்கும் நல்லதல்ல" என மிரட்டும் தொனியில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு அரசின் மீதும் தமிழக மக்கள் மீது ஒரு காழ்ப்புணர்ச்சியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இன்று நாடாளுமன்றத்தில், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பொய்யான கருத்துக்களை முன்வைத்துள்ளார். இந்த பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று.
யார் தங்களுக்காக பாடுபடுகிறார்கள்?, மக்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது யார்?, யார் மக்களுக்காக உழைக்கிறார்கள், யார் மக்களை பிளவுபடுத்தி ஆபத்தில் தள்ள நினைக்கிறார்கள்? என்பதை தெளிவாக புரிந்து கொண்டவர்கள் தமிழர்கள். இதனால் இப்படியான பிரச்சனைகளை உருவாக்குவது பா.ஜ.கவுக்கு எந்த காலத்திலும் பயன்படாது. நாட்டின் ஒற்றுமையை சிதைக்க மட்டுமே பயன்படும்" என தெரித்துள்ளார்.
Also Read
-
கடல் ஆமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை... தமிழ்நாடு அரசின் புதுமுயற்சி - ஆமை விலக்கு சாதனங்கள் பற்றி தெரியுமா?
-
ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் T20 போட்டி - நியூசிலாந்தை ‘ஒயிட்வாஷ்’ செய்யுமா இந்தியா ?
-
“தி.மு.க தேர்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கும்” : கனிமொழி எம்.பி பேச்சு!
-
ரூ.417 கோடியில் குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“இந்தியாவிற்கே ரோல் மாடல் அரசு திராவிட மாடல் அரசு” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!