Tamilnadu
டிட்வா புயல் எச்சரிக்கை... நள்ளிரவில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிட்வா புயலாக உருமாறியது. இலங்கைக்கு மிக அருகில் நிலைகொண்ட இந்த புயல் காரணமாக இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் மிககனமழை பதிவானது. இதனால் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் பாதிக்கப்பட்டன.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக இதுவரை 150க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்தது. இந்த புயல் தொடர்ந்து தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி புயலின் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே புயல் -கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளும் விதமாக நள்ளிரவில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு மையத்துக்கு சென்று மழை பாதிப்பு புகார்கள், அதன் மீதான நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்ஆய்வு செய்தார்.
மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளிடம் துணை முதலமைச்சர் அறிவுறுத்தினார். அவருடன் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரனும் உடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
Also Read
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!