Tamilnadu

”இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்குமானது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆங்கிலேயேர்களிடம் இருந்து 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்றதை அடுத்து, இந்தியாவிற்கு என தனி அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இச்சட்டம் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்டது.

இதையடுத்து 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி அரசியல் நிர்ணய சமையால், அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த தினத்தை அரசியலமைப்பு தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76-ஆம் ஆண்டினையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”இந்தியா என்பது ஒரு குறிப்பிட்ட கருத்தியலுக்கும், பண்பாட்டிற்கும் மட்டுமே உரியது இல்லை, இந்திய மக்கள் அனைவருக்குமானது. எனவே, அரசியலமைப்பு நாளான இன்று அம்பேத்கரின் கருத்தை சிதைக்க முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிக்களையும் முறியடிப்போம்.

இந்திய அரசியலமைப்பின்படி, இந்திய கூட்டாட்சியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். அனைத்து மாநிலங்களின் உரிமைகளையும் காப்போம்" என தெரிவித்துள்ளார்.

அதேபோல் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ”இந்திய அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல. ஒருவர் எந்த மதம் அல்லது எந்த சாதி, எந்த மொழியை பேசினாலும், சமத்துவம், மரியாதை, நீதியைப் பெறுவார் என்ற வாக்குறுதி வேண்டும்.அ ரசியலமைப்பு சட்டம் ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பாதுகாப்புக் கவசம். ஒவ்வொரு குடிமகனின் குரல் என தெரிவித்துள்ளார்.

Also Read: உங்களிடம் நான் எதிர்பார்க்கும் பிறந்தநாள் பரிசு இதுதான் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!